Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

0
78
#image_title

Kerala Recipe: கேரளர்களின் விருப்ப நெய்யப்பம்!! இதை சுவையாக எவ்வாறு செய்வது?

நெய்யப்பம் கேரளா மக்கள் விரும்பி செய்து உண்ணும் இனிப்பு வகை ஆகும்.ஆப்ப மாவை சூடானா நெயில் ஊற்றி வேகவிட்டு சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இதை கேரளா பாணியில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பச்சரிசி – 1 கப்
2)எள் – 1 தேக்கரண்டி
3)தேங்காய் துண்டுகள் – சிறிது
4)நெய் – பொரிக்க தேவையான அளவு
5)ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
6)வெல்லம் (அல்லது) – 1 கப்
நாட்டு சர்க்கரை

செய்முறை:-

1.ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பச்சரிசி போட்டு தண்ணீர் ஊற்றவும். 3 முறை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

2)பிறகு ஒரு கப் வெல்லத்தை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.

3)ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ஊறவைத்த பச்சரிசி சேர்த்து கரைத்த வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

4)அதன் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

5)பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.இதில் தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து அரைத்த மாவில் சேர்க்கவும்.

6)இறுதியாக ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த மாவை 8 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

7)பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு தயாரித்து வைத்துள்ள மாவை ஒரு குழிக்கரண்டியில் எடுத்து சூடான நெயில் ஊற்றி ஆப்பம் போல் சுட்டுக் கொள்ளவும்.ஆப்பம் சுடும் பொழுது அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்வது முக்கியம்.இந்த முறையில் ஆப்பம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.