வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!!

0
90
#image_title

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!!

வயிற்றுப் புண்(அல்சர்) குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஜவ்வரிசி
2)தேங்காய்
3)சர்க்கரை
5)ஏலக்காய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 150 கிராம் ஜவ்வரிசி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும். தண்ணீரில் ஜவ்வரிசி ஊறி வந்ததும் ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.ஒவ்வொரு ஜவ்வரிசி தண்ணீர் சேர்த்ததும் மாவாகி விடும். ஒவ்வொரு ஜவ்வரிசி எவ்வளவு தண்ணீர் சேர்த்தாலும் உறிஞ்சி கொண்டே இருக்கும்.எனவே நீங்கள் இதை பார்த்துக் கொண்டு தண்ணீர் சேருங்கள்.

15 நிமிடங்கள் கழித்து ஊறவைத்த ஜவ்வரிசியை எடுத்து பார்த்தால் மிருதுவாக இருக்கும்.பிறகு ஒரு கப் தேங்காய் துண்டுகளை தோல் சீவி ஒரு காய்கறி சீவலில் வைத்து சீவிக் கொள்ளவும்.

இல்லையென்றால் துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.இந்த தேங்காய் துருவலில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் இட்லி தட்டில் காட்டன் துணி வைக்கவும்.

பிறகு ஊற வைத்த ஜவ்வரிசியில் ஒரு உருண்டை எடுத்து வடை போல் தட்டிக் கொள்ளவும்.இதில் தேங்காய் துருவல் + சர்க்கரை கலைவையை சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.இதர ஜவ்வரிசையும் இவ்வாறு செய்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும்.

இதனிடையே ஒரு கப் அளவு தேங்காய் துண்டுகள் மற்றும் 2 ஏலக்காய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

வேக வைத்த ஜவ்வரிசி உருண்டையை ஒரு தட்டில் போட்டு அரைத்த தேங்காய் பாலை ஊற்றி சாப்பிடவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் முழுமையாக குணமாகும்.