Friday, November 15, 2024
Home Blog Page 4883

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

0

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சீனாவில் உருவான உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் தோற்று இன்று உலகையே முடக்கிப் போட்டு இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது

இந்த வைரஸ் நோயை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்கும்படி ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் இந்த ஊரடங்குக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொது மக்களின் நலம் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு அதிரடி உத்தரவு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஊரடங்கால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த மாவட்டங்களை முடக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதற்கென பட்டியல் இன்று வழங்கியுள்ளது, அந்த பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வடமாநிலங்களில் மும்பை, கொல்கத்தா, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட எந்த சேவையும் வழங்கப்படாது, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வழங்க வழிவகை செய்யப்படும். இந்த மாவட்டங்களை முடக்க காரணம் மேற்கொண்டு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இதனை புரிந்து கொண்டு மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

0

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போது உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்திற்கு மேல் இந்த கொடிய வைரசால் இறந்துள்ளனர். 3 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 346 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது கத்தார் நாட்டில் இருந்து வீடு திரும்பிய 38 வயது உடைய வாலிபர் வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று இருந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 6 ஆக உயர்ந்துள்ளது.

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

0

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள். தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.

தனுஷ் தற்போது தமிழ் திரைப்பட உலகில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ் பெற்றார் .தற்போது ஹிந்தி படத்திலும் அக்க்ஷய் குமாருடன் நடித்துவருகிறார் . மாரி செல்வராஜ் உடன் “கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜீவா நடித்து வெளிவந்த ஜிப்ஸி படத்தின் கதாநாயகி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது எனக்கு நடிகர் தனுஷை மிகவும் பிடிக்கும் எனவும் அவருடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருக்கிறது என்றும் தளபதி விஜய்யை திருமணம் செய்ய வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

0

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் ,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் இவர்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலமானவர்கள்.

இந்திய கிரிக்கெட் வீரரான தோனி ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் இருக்கும்போது அளித்த பேட்டியில். தற்போது கொரோனா காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள்தான் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த டாப் 3 நடிகர்களில் முதல் இடத்தை பிடித்து இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்றும் . அதன் பிறகு சிங்கம் படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் தனக்கு பிடித்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இவர்களைப்பற்றி உலக அளவில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி பேசியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் குஷியாகி உள்ளனர் .

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க பாரதப் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் செய்யப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த நோய் பரவலை காரணம் காட்டி மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன.

இதனால் மத்திய அரசின் சுய ஊரடங்கு அழைப்பை மீறி சிஏஏ-க்கு எதிராக போராட்டம் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டு டெல்லி மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!

0

பல்வேறு நாடுகளில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க பாரதப் பிரதமர் மோடி இன்று ஒருநாள்(22/03/2020) பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு இருக்க அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று மாநில அரசுகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல ஊர்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த மக்கள் ஊரடங்கில் சாலை ஓரங்களில் வசித்துவரும் வீடில்லாத மக்கள் என்ன செய்கிறார்கள் என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்து வந்தது. இதனைப் போக்க சென்னை மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது.

சாலை ஓரங்களில் வசித்து வரும் வீடில்லாத மக்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடங்கள் மற்றும் காப்பகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 51 காப்பகங்கள் அமைக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சென்னை மாநகராட்சியின் இந்த செயலை பார்த்த சமூக நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

0

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

வெளிநாட்டில் இருந்து வந்து அண்ணியுடன் நெருக்கமாக இருந்த கணவரை தட்டக்கேட்ட மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மனைவி தனலட்சுமியிடம் வேலையின் காரணமாக நகைகளை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாமாகவே காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த முனீஸ்வரன் சம்பள பணத்தை அண்ணியிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமி வறுமையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

குடும்ப வறுமையை போக்க மகளிர் சுயுஉதவி குழுவின் மூலம் உதவியை பெற்று தென்னை கீற்றுகளை பின்னி அதன் மூலம் வந்த வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து வந்த முனீஸ்வரன் மனைவியை கவனிக்காமல் அண்ணியுடன் அதிகமான நெருக்கத்தை காட்டியதாகவும், இதன்மூலம் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கள்ளத்தொடர்புக்கு மனைவி இடையூறாக இருந்த காரணத்தால் நகை கேட்பது போல் சண்டைபோட்டு மனைவியை கொன்றது கடைசியில் தெரியவந்தது. தவறான உறவிற்கு தடையாக இருந்த மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க பல நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்திய பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு நாள் ஊரடங்கு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஞாயிற்றுக்கிழமை(22/03/2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதில் கூறியுள்ளார்.

இதனையடுத்து சினிமா பிரபலங்கள் சிலர் இது அவசியமான ஒன்று மக்கள் இதனை உதாசீனப்படுத்த வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் அவ்வாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான தகவல் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை உறுதி செய்து ட்விட்டர் நிறுவனம் அந்த வீடியோவை ரஜினியின் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்திற்கும் மேல் உயிர் பலி வாங்கி இருக்கிறது. தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று உலகம் முழுக்க பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் தற்போது அங்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மக்களுக்கு மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது. இதில் தற்போது அமெரிக்கா வெற்றி கண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசிட்ரோமைசின் , ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகிய மருந்துகளை கொரோனா பாதிப்பிற்கு பயன்படுத்தலாம் என்றும் இரண்டு மருந்துகளையும் ஒன்றாக சாப்பிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என செய்தி வெளியாகி உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.