Friday, November 15, 2024
Home Blog Page 4884

பொறுப்புணர்வை நிருபிக்கும் நேரமில்லை; சவாலை முறியடிக்கும் நேரம்: அரசுகளை கடிந்து கொண்ட மூத்த தலைவர்!

0

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளதால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொடர்களை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், நடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்கள் ஒத்திவைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்றாலும், இதனால் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நோய்த்தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்பது கவலையளிக்கிறது.

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மனிதர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதாலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால், ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அதேபோல், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்ட தமிழக முதலமைச்சர், அடுத்த மாதம் 9&ஆம் தேதி வரை கூட்டம் நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் முடிவு அவர்களின் பொறுப்புணர்வைக் காட்டலாம். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வரும் கொரோனா நோய் சவாலை முறியடிக்க எந்த வகையிலும் உதவாது. மாறாக, இதை பின்பற்றி பொது மக்களும் வெளியில் அதிகமாக நடமாடத் தொடங்கினால் அது நோய்த்தடுப்பு பணிகளை பாதிக்கும்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் தலைநகர் தில்லி மிகக்குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது ஆகும். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் பகுதியாகும். அதன் காரணமாக நேற்றிரவு வரை 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்றக் கூட்டம் என்ற பெயரில் இரு அவைகளையும் சேர்த்து 788 உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுனர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேவையின்றி தில்லியில் குவியச் செய்வது கொரோனா நோய் தடுப்புக்கான அடிப்படைகளையே தகர்க்கும் செயலாகும்.

அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிலையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைமைச் செயலகத்திலும், சட்டப்பேரவை செயலக வளாகத்திலும் பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்குள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு உறுப்பினருடனும் குறைந்தது இருவராவது தலைமைச் செயலக வளாகத்திற்கு வருகின்றனர். அமைச்சர்களின் உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என குறைந்தது 2 ஆயிரம் பேராவது அவை நடைபெறும் நேரத்தில் அந்த வளாகத்தில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வளாகத்தில் அவர்களின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்திருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் கடினம் என்பதால் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளி தான். இதற்காக மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு கூடினாலும் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது 3 அடி இடைவெளி அவசியம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற அவைகளாக இருந்தாலும், தமிழக சட்டப்பேரவையாக இருந்தாலும் மூன்று அங்குல இடைவெளி கூட இல்லாமல் மிகவும் நெருக்கமாகத் தான் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி கொண்ட அவைகளில் வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், நமது மக்கள் பிரதிநிதிகளின் நலன் கருதி அவை நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையின் ஒப்புதலை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமரும், முதல்வரும் நினைப்பதில் தவறில்லை. இன்னும் கேட்டால் அவர்களின் இந்த உணர்வு பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால், அவர்களின் பொறுப்புணர்வே நாடாளுமன்றம், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நோய் தொற்றுவதற்கும், அவர்களை சார்ந்தவர்கள் கூடுவதால் நோய் பரவுவதற்கும் வழிவகுத்துவிடக் கூடாது. எனவே, நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி பிரதமரும், தமிழக முதலமைச்சரும், அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

0

10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

காம இச்சைக்காக பத்து வயது சிறுமியை கற்பழித்து மூன்றாவது மாடியில் இருந்து வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயல் அருகே உள்ள எம்எம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெண் குழந்தை நேற்றிரவு வீட்டுக்கு வெளியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், குழந்தை காணாமல் போன சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து குழந்தை அவரது வீட்டின் பின்புறம் தூக்கி வீசப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வல்லுறவு நடந்ததை உறுதி செய்தனர். பின்னர் கற்பழித்து வீசிய நபரை தேடியபோது சுரேஷ் என்ற இளைஞர் சிக்கினார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுமியை 3 வது மாடிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

0

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

இந்தியாவில் நாளை தேசிய ஊரடங்கு உத்தரவு இருப்பதன் தொடர்ச்சியாக இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
27.03.20 முதல் 13.04.20 வரை நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும்.

இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு அதாவது 15.04.20 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடத்து வருகின்றன.
11 ஆம் வகுப்பிற்கு 23.03.20 மற்றும் 26.03.20 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் 12 ஆம் வகுப்பிற்கு 24.03.20 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பீதியில் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமாக புகைபிடிக்கும் வாலிபர் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ!

0

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகமே பீதியில் ஆழ்ந்துள்ளது, இதனால் பல்வேறு நாடுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2 லட்சத்து ௭௭ ஆயிரத்தை கடந்துள்ளது, இதில் 11 ஆயிரத்து 474 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நோய் தொற்றில் இருந்து எவ்வாறெல்லாம் நம்மை தற்காத்து கொள்வது என்று உலக நாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதை பார்த்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்யும் கைவைத்தியங்கள் தான் இணையதளம் முழுவதும் காணக்கிடைக்கிறது.

அதில் சிலர் செய்யும் நூதன நடவடிக்கைகள் தான் இணையதள வாசிகளுக்கு பொழுது போக்கு. அது மாதிரி ஒரு வீடியோவில் ஆப்ரிக்க இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து நூதனமாக புகைபிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் தனது முகமூடியில் ஓட்டை போட்டு புகைபிடிப்பது, கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது பின்னர் அந்த ஓட்டையை முடி போட்டு மறைகிறார். இந்த வைரல் விடியோவை பார்த்து அனைவரும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை

0

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை

டி.என்.பி.எஸ்.சி என்று சொல்லப்படுகின்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசிற்கு தேவையான அனைத்து நிலை பணியாளர்களையும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் ஒற்றை வாய்ப்பாக இந்த அரசுத்தேர்வுகள் மட்டுமே உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக வெளிவரும் அடுக்கடுக்கான முறைகேடுகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடைபெற்ற குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டின் அதிர்ச்சியில் இருந்து தேர்வர்கள் மீளாத நிலையில் இன்றைக்கு புதிதாக ஒரு தேர்வு முறைகேடும் அம்பளமாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் குறிப்பிடுள்ளதாவது:

எனது மகன் கடந்த 2018 ஆம் அண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதிய ஒருசில வாரங்களில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரகயில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் எனது மகன் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவருக்கு விரைவில் பணிநியமன ஆனை கிடைத்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு சிவா என்பவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 27 இலட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே உங்களுடைய மகனுக்கு வேலை கிடைக்கும் எனவும் தெரிவிதுள்ளார். இதனை அடுத்து சண்முகமும் அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு அவர்களை தொடர்புகொண்டு சண்முகம் கேட்டபோது அதிகாரிகளுக்கு பணம் போய் சேர்ந்து விட்டது விரைவில் பணிநியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரித்த போலீசார் டி.என்.பி.எஸ்.சி இன் அதிகார்ப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் சிவா என்பவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் இவருக்கு உதவியவர்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரமணி மற்றும் இடைத்தரகர் நாகேந்திரராவ் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல் துறையினர் இந்த மூவரையும் தேடி வருகின்றனர்.

தொடரும் முறைகேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் அனைத்து வித சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு மாணவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த டி.என்.பி.சி. தலைவர் நந்தகுமார் அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை தேவை என்பதே தேர்வர்களின் கருத்தாக உள்ளது.

தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது

0

தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோய் அறிகுறி குறித்தும் அது பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் கமிஷனர் ஏ .கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல் கமிஷனர் எச். எம் ஜெயராம் ,இணை கமிஷனர் ஏ.ஜி. பாபு , துணை கமிஷனர் தர்மராஜன் ,சென்னை போலீஸ் மருத்துவமனை டீன் டாக்டர் சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது. கொரோனா குறித்து யாராவது வதந்தி பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் இதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் இணை கமிஷனர் தலைமையிலான சிறப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஒருநாள் விழிப்புணர்வு காணொளி காட்சிகள் அடங்கிய வாகன ரோந்தையும் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார் . மேலும் அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் 23 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

0

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

நந்தினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் கடந்த திசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்திருந்தார். நந்தினி சீரியல் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட சீரியலாகும். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதோ சில இடங்களில் கவர்ச்சியாக நடித்து பலரை கவர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இவருக்கும் ஆஸ்திரேலிய தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில் நித்யாராம் தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கணவன் மனைவி இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியினை வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது விழிப்புணர்வு புகைப்படமா அல்லது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறுகிறாரா என்கிற வகையில் அப்புகைப்படம் பேச வைக்கிறது.

இதுவரை கொரோனாவால் 10,000 பேர் இறந்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியில் பலாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை விரட்ட நாளை (மார்ச்-22) தேசிய ஊரடங்கு உத்தரவை அந்தந்த ஊரில் கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி தனது உரையின் மூலம் கூறினார். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் சீனாவில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கவில்லை என்றும் ஒற்றை இலக்க பாதிப்படைந்தோரே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

0

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்படும்.? சட்டசபையில் அறிவித்த தமிழக முதல்வர்!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கவும் ஆரம்பகட்ட நுழைவு தேர்வான NEET எனப்படும் “தேசிய தகுதி நுழைவுத் தேர்வு” கடந்த 2010 ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனால் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலை உருவானது.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்களை வைத்தே நீட் தேர்வுக்கான சேர்க்கை நடைபெற்று வந்த காரணத்தால் தமிழக அரசு மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளிடையே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தமிழக அரசின் பாடத்திட்டங்களுக்கும் வேறுபாடு இருப்பதால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் குறைவான தேர்ச்சி பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது இந்த குறைபாடுகளை களைத்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறும் வகையிலும் புதிய அறிவிப்பு ஒன்றை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில், தமிழக தேர்ச்சி குறைந்தது குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார். இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதபதி ஒருவரின் தலைமையில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க “சிறப்பு சட்டம்’ கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.







கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!

கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! அதுக்காகதான் இப்படி செய்தேன் என்று வாக்குமூலம்..!!

கள்ளக்காதலனை பிரிய மனம் இல்லாமல் அவருக்கு தனது மகளையே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூர் பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர், தனது அத்தை மகள் மஞ்சுளா என்பவரை 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 19 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சென்னை மற்றும் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட வேலையை கண்ணன் செய்து வந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு கண்ணன் அவரது சொந்த ஊரான வந்தவாசி அருகேயுள்ள தென்னகரத்தில் கட்டட வேலை செய்தபோது அங்கிருந்த பதினாறு வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து பெண்ணை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் பொழிச்சலூரை சேர்ந்த கண்ணன்தான் சிறுமியை அழைத்துச் சென்றார் என்று தெரியவந்தது.

இந்நிலையில், கண்ணனை தேடி போலீசார் விரைந்தபோது கண்ணன் சென்னையில் இருந்து தப்பியுள்ளார். நீண்ட தேடுதலுக்கு பிறகு பெங்களூரில் இருந்த கண்ணனை கைது செய்து அவருடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். பெண்ணின் எதிர்காலம் பாழாகும் என்பதால் சங்கர் நகர் போலீசார் கண்ணனிடம் கண்டிப்புடன் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரையுடன் கூறி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலைக்கு சென்ற கண்ணன், அங்கு வேலைபார்த்த யுவராணி என்பவருடன் அடிக்கடி பேசி தனது கள்ளக் காதலை வளர்த்துள்ளார். இந்த சம்பவம் ஒரு வருடம் கழித்தே கண்ணனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் பிறகு கண்ணனின் முதல் மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி முதல் மனைவியுடன் கண்ணனை அனுப்பி வைத்தனர்.

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது கள்ளக்காதல் கண்ணன் தொடர்ந்தார். இருவருக்குமான உறவை முதல் மனைவி பிரித்துவிடுவாரோ என்று எண்ணி தனது 19 வயது மகளை கண்ணனுக்கு அவரது கள்ளக்காதலி திருமணம் செய்து வைத்துள்ளார். இதனையறிந்த கண்ணனின் முதல் மனைவி விரக்தியுடன் காவல்துறையில் புகார் கூறினார். இதனையடுத்து தனது முதல் மனைவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுத்த காரணத்தாலும் கர்ணன் கைது செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தவறான உறவிற்கு பெற்ற மகளையே கள்ளகாதலனுக்கு திருமணம் செய்தி வைத்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு.

0

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதன்படி தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளிகளில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்களை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கும் செயலாக பலராலும் பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எனினும் கடந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வழக்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

இதனை அடுத்து நீட் தேர்வில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அதாவது கிராமப்புற பள்ளிகளிலோ, நகராட்சி பள்ளிகளிலோ, மாநகராட்சி பள்ளிகளிலோ அல்லது ஆதிதிராவிடர் நல பள்ளிகளிலோ ஒன்று முதல் பனிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வழங்க சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட உள்ளதாக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் ஒன்று அமைக்கப்படும் அவ்வாணையம் இந்த சட்ட முன்வடிவை கொண்டுவர அரசுக்கு தேவையான தகவல்களை தொகுத்து வழங்கும். அந்த குழுவில் கல்வித்துறை சார்பில் இரண்டு கல்வியாளர்களும் நலவாழ்வுத்துறை சர்ந்த அதிகாரிகளும், சட்டத்துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர் எனவும் இவ்வாணையம் ஒருமாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் எனவும்‌ முதல்வர் பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.