திரௌபதி படத்தின் இயக்குனர் அதிரடி திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு
பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி என்பவர் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் தமிழகத்தில் பல்வேறு வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.
இதற்கு இயக்குனர் மோகன் ஜி அவர்கள் முதலில் திரைப்படத்தை பாருங்கள் பார்த்து விட்டு நீங்கள் விமர்சனங்களை கூறுங்கள் என்றும், இத்திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான திரைப்படம் இத்திரைப்படத்தை தங்கள் பெண் பிள்ளைகளோடு பாருங்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்
இதில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷியும் கதாநாயகியாக “டூலெட்”படத்தின் நாயகி ஷீலாவும் நடித்துள்ளனர்.
பொதுவாக தமிழ்சினாமாவில் திரைப்படம் என்று சொன்னால் அது தென் மாவட்டமான மதுரையையோ அல்லது கொங்கு மண்டலத்தையோ அடிப்படையாக கொண்டு அமைவதையே பார்த்துள்ளோம்.
இயக்குனர் தங்கர்பச்சன் மட்டுமே தனது திரைப்படங்களில் வட மாவட்ட மக்களை காட்சிப்படுத்துவார். இவரையடுத்து தற்போது இயக்குனர் மோகன் ஜி வட மாவட்ட மக்களை திரையில் காட்ட முயற்சித்துள்ளதால் இது வடமாவட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இத்திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்திலும் இருந்தும் ஆதரவுகள் பெருகி வருகிறது.அதாவது மக்கள் தாங்களாகவே தங்கள் சொந்த பணத்தில் சுவர் விளம்பரங்கள் செய்து திரௌபதி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தினமும் பலர் தனக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூகவளையதளங்களிலும் திரௌபதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் கூறிய வண்ணமும் திரைப்பட வெளியீட்டு தேதியை கூறும் படியும் கெட்டு வருவதாகவும் இயக்குனர் மோகன்.ஜி கூறி இருந்தார். அவர்கள் அனைவருக்கும் இன்று (18-02-2020) திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.