Thursday, November 14, 2024
Home Blog Page 4942

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

0

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

போன்பே செயலியின் பணம் அனுப்புவது மட்டுமில்லாது தங்கள் தொடர்பாளர்களுடன் இனி சாட்(Chat) செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

நவீன காலத்துக்கு ஏற்றார்போல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள பல ஆன்லைன் செயலிகள் வந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று போன் பே ஆப். இந்த செயலியின் மூலம் நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் பணம் அனுப்பலாம். இதுபோல சந்தையில் பல செயலிகள் உள்ளதால் தங்கள் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த போன் பே புதிய வசதி ஒன்றை தங்கள் ஆப்பில் கொண்டு வந்துள்ளது.

ஃபோன்பே செயலியில் பரிவர்தனை வரலாறு (transaction history) எனும் ஆப்ஷனில் புதிய பிரிவாக chat flow-என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களுடன் உரையாடலை மேற்கொண்டு பணப்பரிவர்த்தனையை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாப்ட்வேர்களில் வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 185 மில்லியனுக்கும் அதிகமான ஃபோன்பே பயனர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிகிறது.

விரைவில் இதில் க்ரூப் சாட் போன்ற வசதிகளையும் இணைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?

0

டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார்.

சின்மயியிக்கும் ராதாரவிக்குமான பிரச்சனை மீ டூ வின் போதே தொடங்கிவிட்டது. மீடூவில் ராதாரவி பல பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக ராதாரவிக்கு எதிராக சின்மயி சமுகவலைதளங்களில் போர்க்கொடி தூக்கினார். அப்போது ராதாரவி தலைவராக இருந்த டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி சந்தா கட்டவில்லை எனக் கூறி நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது சமம்ந்தமாக சில அரசியல் தலைவர்கள் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்தனர்.

அப்போது ராதாரவி திமுகவில் இருந்ததால் சின்மயியை பாஜக ஆதரவாளர் எனப் பலரும் கூறினர். பாஜக தலைவர்களும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அதன் பிறகு ராதாரவி திமுகவை விட்டுப் பிரிந்து பாஜகவில் சேர்ந்தார். அதையடுத்து டப்பிங் யூனியனுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ராதாரவிக்கு எதிராக சின்மயி களம் இறங்கினார். இதனால் தேர்தலில் பரபரப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது சின்மயியின் வேட்புமனுவை சங்கவிதிகளின் படி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதனால் மீண்டும் ஏகமனதாக ராதாரவியே தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

0

’மாஸ்டர்’ படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை அதிகாரிகள் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திடீரென விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்

இதனை அடுத்து ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணைக்கு வருமாறு சம்மன் அளித்தனர் இந்த சம்மனை ஏற்றுக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சென்றார் இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய லாபம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் அதற்குரிய வருமான வரி கட்டாததே இந்த ரெய்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது இந்த படத்திற்காக விஜய் வாங்கின சம்பளம் எவ்வளவு அதற்காக செலுத்தப்பட்ட வரி எவ்வளவு என்பது குறித்து விஜயிடம் விசாரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!

0

வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியுசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறக்கப்பட்டனர்.. 20 ரன்கள் சேர்த்த பிருத்வி ஷா கிராண்ட்ஹோம் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 35 ரன்களில் அவுட் ஆக இந்தியா 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி அரைசதம் அடித்து அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 103 ரன்களில் அவுட் ஆனார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். கடைசியாக வந்த கேதார் ஜாதவ்வும் அதிரடியில் களமிறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி  50 ஓவர்களில் 347 ரன்கள் சேர்த்தது. ராகுல் அவுட்டாகமால் 87 ரன்களும் கேதார் ஜாதவ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் இந்திய அணி கோலி(51), ராகுல்(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்(103) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை சேர்த்தது.

348 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் நிக்கொல்ஸ் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து சென்றனர். அதன் பின் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாத்தம் அதிரடியில் புகுந்து இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 200 ரன்களில் இருந்து 300 ரன்களுக்கு வெறும் 46 பந்துகளில் சென்றது. சிறப்பாக விளையாடிய லாதம் 69 ரன்களில் அவுட் ஆனார். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த ராஸ் டெய்லர் தனது 21 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதனால் அந்த அணி 48.1 ஓவர்களில் 348 ரன்களை 6 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்திருந்தார்.இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலானத் தொடரில் அந்த அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. இந்திய பவுலர்களில் பூம்ராவைத் தவிர அனைவரும் வாரி வழங்கியதாலும் மோசமான பீல்டிங்காலும் 347 ரன்கள் சேர்த்தும் இந்தியாவில் வெல்ல முடியவில்லை.

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் !

0

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் !

தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது துணை நடிகைகளை ஆபாசமாகப் பேசிய இயக்குனர் குறித்து காவல் நிலையத்தில் நடிகைகள் புகா கொடுத்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் செம்பருத்தி. இத்தொடரை நீராவி பாண்டியன் எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த தொடருக்காக திருவேற்காட்டில் திருமணக் காட்சி ஒன்றைப்  படம் பிடித்துக் கொண்டிருந்தார் நீராவி பாண்டியன். திருமணக்காட்சி என்பதால் 50க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது காட்சிகளில் சரியாக நடிக்காத துணை நடிகைகளை இயக்குனட்ர் மைக்கிலேயே ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால் அதிருப்தியான 15க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் வந்து இயக்குனரைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் சமாதானமாகப் போகலாம் என சொல்ல, துணை நடிகைகளோ காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மன்னிப்புக் கேட்டால்தான் வழக்கை வாபஸ் வாங்குவோம் என சொல்லியுள்ளனர்.

இதையடுத்து இயக்குனர் எப்படி மைக்கில் அனைவரின் முன்னால் ஆபாசமாக திட்டினாரோ அதே போல மைக்கில் மன்னிப்புக் கேட்டார். இதையடுத்து பிரச்சனை சுமூகமாக முடிய படப்பிடிப்புத் தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் திரையுலகில் பரவ பரபரப்பு ஏற்பட்டது.

சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

0

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் அரசியல் கட்சிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள் என்றும் எனவே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்த சட்டம் குறித்து எந்தவித அச்சுறுத்தலும் பெற வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். ஒருவேளை இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நானே குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும் இது குறித்து அரசியல் கட்சிகள் புரிதல் இல்லாமல் பேசிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தனது கருத்து என்று கூறிய ரஜினிகாந்த் வருமானவரி விஷயத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் சட்டப்படிதான் நடந்து உள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் மாணவர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் முன்பாக நன்றாக யோசித்து ஆசிரியர்கள் உள்பட பெரியவர்களிடம் கேட்டு அறிந்து அதன் பின் போராட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் அவர்களை பயன்படுத்தும் நிலைக்கு நிலையை ஏற்படுத்த கூடாது என்றும் தவறான போராட்டத்தால் போலீஸ் நடவடிக்கையால் அவருடைய வாழ்க்கையே திசை மாற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்

சிஐஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து ரஜினிகாந்த ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிராக விமர்சனம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர் என்பதும் இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த பேட்டி அவர்களுக்கு தீனியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு!

0

ஸ்ரேயாஸ் மெய்டன் சதம்:பினிஷிங் செய்த ராகுல்!நியுசிலாந்துக்கு இமாலய இலக்கு!

நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்துள்ள இந்தியா 347 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறக்கப்பட்டனர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். 20 ரன்கள் சேர்த்த பிருத்வி ஷா கிராண்ட்ஹோம் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 35 ரன்களில் அவுட் ஆக இந்தியா 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி அரைசதம் அடித்து அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 103 ரன்களில் அவுட் ஆனார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். கடைசியாக வந்த கேதார் ஜாதவ்வும் அதிரடியில் களமிறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி  50 ஓவர்களில் 347 ரன்கள் சேர்த்தது. ராகுல் அவுட்டாகமால் 87 ரன்களும் கேதார் ஜாதவ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியுசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்களும், காலின் டி கிராண்ட்ஹொம் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். கேன் வில்லியம்சன் இல்லாமல் களமிறங்கியுள்ள நியுசிலாந்து அணி இமாலய இலக்கை துரத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி:தொடக்க ஆட்டக்கார்கள் ஏமாற்றம! இந்தியா நிதான ஆட்டம்!

0

முதல் ஒருநாள் போட்டி:தொடக்க ஆட்டக்கார்கள் ஏமாற்றம! இந்தியா நிதான ஆட்டம்!

நியுசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறக்கப்பட்டனர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். 20 ரன்கள் சேர்த்த பிருத்வி ஷா கிராண்ட்ஹோம் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 35 ரன்களில் அவுட் ஆக இந்தியா 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பின் களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமாக விளையாடி அணியை சர்வில் இருந்து மீட்டு வருகின்றனர். சற்று நேரம் முன்புவரை இந்திய 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளது. கோலி 26 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகி வரும் புகைப்படம்

0

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இன்று திருமணம் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி ஆகிய இருவருக்கும் யோகிபாபுவின் குல தெய்வ கோவிலில் இன்று இனிதே திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் யோகிபாபு மஞ்சு திருமண வரவேற்பு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமண வரவேற்பில் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று முதல் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கொலைவெறி கொரோனா வைரஸ்!!! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்

கொலைவெறி கொரோனா வைரஸ்!!! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்

கொரோனா வைரஸ் இந்த வைரஸ் பெயரை கேட்டால் இன்று உலகநாடுகள் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, ஆசிய நாடுகள் அதிர்ந்துள்ளது. 2003 ல் பரவிய சார்ஸ் வைரஸை விட கொடூரமான வைரஸாக பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனமே கொரோனா பாதிப்பை அவசர நிலையாக அறிவிக்கும் அளவுக்கு அந்த வைரஸ் தாக்கம் வேகமாக உள்ளது.

2019-vCoV என்ற வைரஸ் தான் சீனாவின் உகான் நகரில் புறப்பட்டு உலகில் 25 நாடுகளுக்கு பரவி விட்டது. ஏன், நம் அண்டை மாநிலமான கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விமானநிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது

சீனாவில் அனைத்து மாகாணங்களிலும் பரவிய கொரோனா 400க்கும்  அதிகமானோரை பலிவாங்கி இருக்கிறது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது. மேலும், 40,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன அரசு என்ன செய்வது என்று தெரியாமல் வைரஸை கட்டுப்படுத்த உகான் உள்ளிட்ட மாகாணங்களில் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளது. அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்குகாக 10 நாட்களில்  மருத்துவமனைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளது.

சீனாவில் உலகின் முன்னனி நிறுவனமான கூகுள், ஆப்பிள் அலுவலகம் காலவரையின்றி மூடியுள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனா சென்றவர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸால் உலக நாடுகள் சீனாவை தனிமைப்படுத்தி வருகிறது.

கொரோனாக்கு மருந்து கண்டுப்பிடிக்க உலகநாடுகள் முயற்சித்து வருகிறது. இதற்கிடையில், தாய்லாந்தில் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், கொரோனாவை குணப்படுத்துமா என உறுதியாக தெரியவில்லை.

கொரோனா வைரஸ் முதலில் விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது. காய்ச்சல், வறண்ட இருமல், சிறுநீரக செயல் இழப்பு என கடைசில் மரணம் வரை செல்கிறது கொரோனா. தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கொரோனா பாதிப்பு பற்றி தினம்தோறும் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் சாதாரணமான செய்தியாக பார்க்கிறோம். ஆனால், சீன மக்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். சீனா விரைவில் பழைய நிலைக்கு திரும்ப நாம் அனைவரும் பிராத்திப்போம்.

சார்ஸ் போல இதுவும் ஆசிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இதனை, எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன…

.