பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல்
சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது
இதுகுறித்து பெண் எம்பிகள் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினர். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை ஆண்மை தன்மையை நீக்க வேண்டும் என்றும், பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும் கடுமையாக பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த படுகொலைக்கு எதிராக பயங்கரமாக பொங்கி எழுந்தனர். #RIPPriyankareddy என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்.
ஆனால் ஒரு பக்கம் பிரியங்கா ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து வந்த நெட்டிசன்கள், இன்னொரு பக்கம் பிரியங்கா ரெட்டியின் பாலியல் பலாத்கார வீடியோவை கூகுளில் தேடி உள்ள கேவலமான செய்தியும் வெளிவந்துள்ளது
இந்த கொடூரம் நடந்த நாளில் இருந்தே பிரியங்கா ரெட்டி புகைப்படத்தையும், பாலியல் பலாத்காரம் குறித்த செய்தியையும், அதுகுறித்த வீடியோவையும் கூகுளில் பலர் தேடி உள்ளது தெரியவந்துள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
மேலும் பிரியங்கா ரெட்டியில் பலாத்கார வீடியோ எந்த இணையதளத்தில் இருக்கின்றது என பலர் சமூக வலைதளங்களிலும் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டு இன்னொரு பக்கம் இருக்கும் அந்த பெண்ணின் பாலியல் பலாத்கார வீடியோவை தேடியுள்ளது நெட்டிசன்களின் மோசமான மனநிலையை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக
தேசிய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரஷாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் திமுக எதிர்ப்பார்க்காத வெற்றியை பெற்றிருந்தாலும் அதனுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் இறுதியாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதோ 3 மாதங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக அவர் எதிர்பார்க்காத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் தமிழக அரசியலிலும் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்து தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என அதிமுகவும்,திமுகவும் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா என இரு பெரும் முக்கிய தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், எவ்வாறாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு கட்சிகளும்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் தமிழக அரசியல் களம் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி வருகிறது. குறிப்பாக மிசா வழக்கு, பஞ்சமி நில விவகாரம் மற்றும் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற உதவும் வன்னியர்களை புறக்கணித்தது என தொடர் சோதனைகளை சந்தித்து வருகிறது திமுக தலைமை. இதில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுகவை பாமக தலைமை தொடர்ச்சியான விமர்சனங்களால் வெளுத்து வாங்கியது. இதைக்கண்ட திமுக தலைமை இனியும் தாமதிக்காமல் சரியான கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தேசிய அளவில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் மத்தியில் பிரதமர் மோடி, பிகாரில் நிதிஷ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து அவர்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவருமான பிரஷாந்த் கிஷோரை திமுக தலைமை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் இதுவரை மு.க.ஸ்டாலினுடைய அரசியல் செயல்பாடுகளை திட்டமிட்டு கொடுக்க 2016 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த சுனில் அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இடையே இதற்கான முதல் சந்திப்பு சென்னையில் நடந்திருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது இல்லத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் வந்துள்ளார். பிறகு திமுக தலைவர் ஸ்டாலினுடன் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்குபெற்றனர் என்றும் கூறப்படுகிறது.
பிரஷாந்த் கிஷோர் அவரது வியூகங்கள் தொடர்பாக தலைவர்களிடம் விளக்கியுள்ளார். இதனையடுத்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக தலைவருக்கு எதிராக எழுந்த விமர்சங்களான மிசா வழக்கு, முரசொலி அலுவலக நில விவகாரம் போன்றவற்றில் எதிர்க்கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இந்த நிகழ்வின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி
சென்னை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும், குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் டி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி, இணை இயக்குநர் ஜி.சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் மாநில அளவிலான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் குற்ற வழக்குத் தொடர்வுத்துறையின் கீழ் பணிபுரியும் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்ற வழக்குகளில் அதிகப்படியான தண்டனைகள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். மேலும், அமைச்சர் அகில இந்திய அளவில் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று தருவதில் தமிழகம் மூன்றாவது இடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமான அரசு வழக்கறிஞர்களை பாராட்டியும், முதலிடம் பெறுவதற்காக சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
இத்துறையில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர்களின் நலன்களுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு, அரசு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ!
சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது தெரிந்ததே. ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது
இந்த படத்தில் ’உன்னாலே உன்னாலே’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரியங்கா மோகனன் என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் தெலுங்கு ’கேங்ஸ்டர்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் காமெடி வேடத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பில் கிரண் கலை இயக்கத்தில் அன்பறிவ் சண்டைப்பயிற்சியில் பல்லவிசிங் காஸ்ட்யூம் டிசைனில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவிருப்பதாகவும் தெரிகிறது
கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!
கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மக்களவை தேர்தல் முதல் தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வரை கூட்டணி கட்சியான திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தன.
அதாவது மக்களவை தேர்தலில் திமுக உறுப்பினராக மாறி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது,விசிக போட்டியிடும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த யாரும் பிரச்சாரம் பிரச்சாரம் செய்ய விடாமல் நவீன தீண்டாமையை ஏற்படுத்தியது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கோடி கணக்கில் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்த திமுக விசிகவை புறக்கணித்தது என தொடர்ந்து விசிகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் இதே நிலையே நீடித்தது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இடைத்தேர்தல் பிரசாரத்தின் பொது திமுக தலைவர் பஞ்சமி நில விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க அதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்ய அந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. தலித் மக்களின் உரிமைக்காக பஞ்சமி நிலம் குறித்து மருத்துவர் ராமதாஸ் தீவிரமாக கேள்வியெழுப்பி வருகிறார். பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் தலித் மக்களின் உரிமைக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலித் மக்களுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் அரசியல் செய்வதாக கட்சி ஆரம்பித்த திருமாவளவன் அதை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் கூட்டணி கட்சியான திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. தொலைக்காட்சி விவாதங்களின் போது கூட முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம் குறித்த கேள்விகள் எழுப்பிய போது அதற்கு முறையான பதில் அளிக்காமல் மழுப்பலான பதிலையே திருமாவளவன் அளித்திருந்தார்.
இது போன்ற தலித் மக்களின் உரிமைகளை மீட்டு தராமல் வெறும் கலப்பு திருமணத்தின் மூலம் மட்டுமே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடலாம் என நினைத்து விட்டாரா? இல்லை அதன் மூலம் மக்களிடையே தொடர்ந்து பிரிவினைகளை உருவாக்கி அரசியல் லாபம் அடைய பார்க்கிறாரா? என்றும் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. வெறும் இரண்டு எம்பி பதவிகளுக்காக ஒட்டு மொத்தமாக தலித் மக்களின் உரிமைகளை கூட்டணி கட்சியான திமுகவிடம் விட்டு கொடுத்து விட்டாரா? என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை அடைந்து அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சியில் செய்யப்பட்டது.
ஆனால் இந்த முயற்சியை கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. விக்ரம் லேண்டரிடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதன்பின்னர் விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் அதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் சற்று முன் நாசா தனது டுவிட்டர் தளத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட அப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப்பகுதியில் விக்ரம் லேண்டர் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இது குறித்த புகைப்படம் ஒன்றையும் நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் லேண்டர் கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை செயல்பட வைக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!
தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.
மேலும் கன மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். இதேபோல் கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.பலத்த மழையால் கடந்த 29-ம் தேதி சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ கேரள அரசு தயாராக இருக்கிறது என பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார். மேலும் மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது எனவும் கூறினார்.
‘தலைவர் 169’ படத்தை இயக்கும் இளம் இயக்குனர்? ஆச்சரிய தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏஆர் முருகதாஸ், சிறுத்தை சிவா உள்பட இளம் இயக்குனர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இயக்கி வரும் நிலையில் ’தலைவர் 169’ படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
‘தலைவர் 169’ படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் கைதி என்ற வெற்றிப்படத்தை இயக்கியவரும், தற்போது ளபதி 64என்ற படத்தையும் இயக்கி வருபவருமான லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது
இதனை உறுதி செய்யும் வகையில் இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் லோகேஷ் கனகராஜ் சந்தித்துப் பேசியதாகவும் இந்த சந்திப்பின்போது ’தலைவர் 169’ படம் குறித்து இருவரும் விவாதித்தனர் என்றும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
மேலும் ’தலைவர் 160 வது. படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் ரஜினி-லோகேஷ் சந்திப்பை ஏற்பாடு செய்தவர் கலைப்புலி எஸ்.தாணு தான் என்றும் கூறப்படுகிறது
மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்
இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஷிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
மணிஷ் பாண்டே மணந்த நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இரு குடும்பத்துக்கும் இடையிலான திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியில் அதிகமாகக் கசியவிடப்படாமல் இருந்த நிலையில் இன்று மும்பையில் திருமணம் முடிந்தது.
இன்று திருமணம் முடித்த மணீஷ் பாண்டே அடுத்ததாக 6 ம் தேதி நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர்.
உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:
ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 29 ரூபாய் குறைந்து 3617 ரூபாய் ஆகவும். பவுன் நேற்றைய விலையை விட 232 ரூபாய் குறைந்து 28936 ரூபாயாகவும் உள்ளது, அதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை 1 கிராம் 3778 ரூபாய் ஆகவும். 10 கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 37780 ஆகவும் உள்ளது.
வெள்ளியின் விலையை பொறுத்த வரை நேற்றைய விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் கிராம் ரூபாய் 47.60 வுக்கும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 47600 க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.