Tuesday, November 19, 2024
Home Blog Page 5069

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

0

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்

மழை குறித்த விபரங்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பிரதீப் ஜான் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ‘நேற்றிரவு சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்தது ஒரு மழையே இல்லை. இதைவிட பெரிய மழை நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மக்களை மழை வச்சு செய்ய போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

சென்னையில் பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருக்கும் என்றும் சில இடங்களில் சூரியன் சுட்டெரிக்கும் என்றும் ஆனால் இரவு மற்றும் அதிகாலை மழை வெளுத்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்று தாம்பரம் 6 மணி நேரத்தில் 146 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், மற்ற பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளதாகவும் இதுவொரு மிகச் சிறந்த மழை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சென்னை புறநகரில் ஏற்கனவே நேற்றிரவு பெய்த மழையால் வீடுகள் மிதந்து வரும் நிலையில் அடுத்து வரும் மழைக்கு தாங்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

பாமக அதிமுக கூட்டணி தொடருமா? அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

0

பாமக அதிமுக கூட்டணி தொடருமா? அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிகழ்வுகளை கவனிக்கும் போது அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி தொடருமா? இல்லையா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழக மக்களுக்கும்,அதிமுக மற்றும் பாமக கட்சி தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருந்த சந்தேகத்தையும், செய்திகளில் வெளியான சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக அதிமுக கூட்டணியில் தொடரும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil
Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil

இதன் மூலம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

மேலும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டி மூலம் அதிமுக தரப்பும் உற்சாகம் அடைந்துள்ளது. இதன் மூலமாக வடதமிழகத்தில் கணிசமான இடங்களை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அன்புமணி ராமதாஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுவதை வைத்து, பாமக கூட்டணியில் இருந்து பிரிந்துவிடுமோ என்ற சந்தேகத்துடன் இருந்தது அதிமுக தரப்பு . ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் போக்கும் வகையில் தற்போது அன்புமணி ராமதாஸ் பேட்டி கொடுத்திருப்பது அதிமுக மட்டுமன்றி பாமக நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Anbumani Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil
Anbumani Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil

இந்த பேட்டியின் போது தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கமும், விருப்பமும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்என்றும் அவர் கேட்டு கொண்டார்.

’சும்மா கிழி’ பாட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: ரஜினி ரசிகர்கள் சோகம்

0

’சும்மா கிழி’ பாட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: ரஜினி ரசிகர்கள் சோகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ’சும்மா கிழி’என்ற பாடல் நேற்று வெளியானது இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று இணையதளங்களில் வைரலாக்கி வந்த நிலையில் இந்த பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்த பாடல் இரண்டு பாடல்களின் என நெட்டிசன்கள் ’சும்மா கிழி கிழி’ என்று கிழித்து வறுத்தெடுத்து வருகின்றனர்

முதலாவதாக பிரசாந்த் நடித்த ’வைகாசி பிறந்தாச்சு’ என்ற படத்தில் இடம்பெற்ற தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு வலிக்குது’ என்ற பாடலின் காப்பிதான் ’சும்மா கிழி’ பாடல் என்று ஒரு சில நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இன்னொரு பிரிவு நெட்டிசன்களோ இது ஒரு சபரிமலை ஐயப்பன் பாட்டின் அப்பட்டமான காப்பி என்று இரண்டு பாடல்களையும் பதிவு செய்து நிரூபித்து வருகின்றனர். நெட்டிசன்களின் இந்த பதிவு காரணமாக ரஜினி ரசிகர்கள் சோகம் ஆகியுள்ளனர்

கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட் திரையுலகில் காப்பி என்பது சர்வ சாதாரணம் ஆகி வருகிறது. வெளிநாட்டு படங்களில் இருந்து கதை மட்டுமின்றி காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை, போஸ்டர்கள் என பலதையும் காப்பி அடித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ்ப்படங்களில் இருண்டே காப்பியடிக்க தொடங்கிவிட்டதாக நெட்டின்கள் கலாய்த்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

0

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மெத்தனம், பேனர் பிரச்சினை, மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருத்தல், அமைச்சர்களின் உளறல் பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது இப்படி இருக்க, இந்த ஆட்சியிலும் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருக்கும் துறை எது என்றால், அது நம் பள்ளிக் கல்வித் துறை தான். அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி, செயல்படுத்தியது. பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளை செயல்படுத்துதல். ஷு, சாக்ஸ் வழங்குதல், நீட் தேர்விற்கு தயார் செய்யும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்தல் என, பல சிறப்பான திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது.

இந்த நலத்திட்டங்களுக்கு மத்தியில், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு கட்டாய பொதுத் தேர்வு என்பது தான், மக்களிடம் சலசலப்பை உண்டு பண்ணியது. கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய போதும், இதில் கடுகளவும் மாற்றம் இல்லை என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக, கூறிவிட்டார்.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காகவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்காகவும் இந்த பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால், இரண்டு மாதத்தில் மீண்டும் தேர்வு எழுதலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசுபள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. மேலும் அதற்காக 1000 வார்த்தைகள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மாணவர்களின் கல்வி, அறிவுத்திறன், திறமையை மேம்படுத்த 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் என்றும், அவை எளிமையாகவே இருக்கும் அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

தோல்வி பயம், தேர்வு பயம் போன்றவை தேவையற்றது என்றாலும் இந்த பொதுத் தேர்வு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் இறந்துவிடுவார்கள்: சீமான்

0

எங்கள் ஆட்சி வருவதற்கு முன் அவர்கள் இறந்துவிடுவார்கள்: சீமான்

என் மீதும் எனது கட்சியினர் மீதும் வழக்கு தொடுத்தவர்கள், சிறை வைத்தவர்கள் எங்கள் ஆட்சி வருவதற்கு முன் இறந்துவிடுவார்கள் என்று சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

ரஜினி அரசியலுக்கு வரட்டும், ’ஐயாம் வெயிட்டிங்’ என்று கூறிய சீமான், ‘நாட்டை யார் முதலில் விற்பது என்பதுதான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு இடையேயான வித்தியாசம் என்றும், எனக்கு வாக்களித்தால் மட்டுமே வாழ்வீர்கள், இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்றும் ஆவேசமாக பேசினார்.

கருணாநிதியை முதல்வராக விடாமல் தடுத்தது நான் தான் என்றும், முதல்வராக இருக்கும்போதே அவர் இறந்துவிடக்கூடாது என்று நினைத்ததாகவும், அதை நடத்தியதாகவும் கூறினார். மேலும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்றும் கூறும் நிலைத்தான் தமிழகத்தில் உள்ளதாகவும் தனது ஆட்சி வந்தபின்னர் இதெல்லாம் மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை

0

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அவரது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பு இணைவதற்காக ஒரு பிளேட்டை வைத்து இருந்தனர்

இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த பிளேட்டை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்ததால் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது கமல்ஹாசனின் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட் எடுக்கப்பட்டு அவர் பூரண நலத்துடன் இருப்பதால் அவர் நேற்று மாலை வீடு திரும்பினார்

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தலைவர் கமலஹாசன் அவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக முடிந்து மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவமனையில் இருந்து தமது இல்லம் திரும்புகிறார்.

மருத்துவமனை நிர்வாகத்திற்கும், சிறப்புடன் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், ஏனைய பணியாளர்களுக்கும், அத்துடன் நம்மவர் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரையே தூக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

0

திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரையே தூக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும், அரசியல் திட்டமிடல் குழுவை வழிநடத்துபவராகவும் இருந்த சுனில் என்பவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முறைப்படி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது பதவி ராஜினாமா குறித்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராக இருந்த சுனில் பதவி விலகல் குறித்த செய்தி நேற்றிரவு முதல் திமுக வாட்ஸ் அப் குரூப்களில் பரவ, அதை பார்த்து விட்டு திமுகவை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

DMK IT Wing OMG Group head Sunil resigned by Dr Ramadoss -News4 Tamil Latest Online Political Tamil News
DMK IT Wing OMG Group head Sunil resigned by Dr Ramadoss -News4 Tamil Latest Online Political Tamil News

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் செயல்பாட்டிற்காக அரசியல் திட்டமிடல் குழுவை உருவாக்கி அதை முறையாக வழி நடத்தி வந்தவர் தான் சுனில் என்பவர். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோர் டீமில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றிய அவர், பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலினுடன் அரசியல் திட்டமிடலுக்காக இணைந்தார். ஓ.எம்.ஜி. எனப்படும் ஒன் மேன் குரூப் அமைப்பைத் தொடங்கி அதை முறையாக வழிநடத்தி வந்தார்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக அரசியல் திட்டமிடல் பணிகளை செய்து வந்த அவர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே என்ற முழக்கத்துடன் ஸ்டாலினை தமிழகம் முழுவதும் சுற்றி வர வைத்து மக்களை சந்திக்க வைத்தார். இந்த நமக்கு நாமே பயணத்தை மக்களும் எதிர்க்கட்சிகளும் நாடகமாக பார்த்தாலும் திமுகவினர் மத்தியில் ஸ்டாலின் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்பட உதவியது என்றே கூறலாம். மேலும், ஸ்டாலினின் இமேஜை உயர்த்தும் வகையில் தொடர்ந்து அவர் பல காரியங்களை சிறப்பாக செய்து வந்தார்.

இதன் மூலமாக தான் திமுக மீதான கடந்த கால குற்றசாட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு மக்களவை தேர்தலில் மக்கள் அவர்களுக்கு ஆதரித்தனர். இதனிடையே இவ்வாறு சிறப்பாக செயல்பட்ட சுனில் நேற்று ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகின.இதற்கு காரணம் பஞ்சமி நில விவகாரத்தில் தலைவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதே இந்த சுனில் தான். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தலைவரை சம்பந்தமேயில்லாமல் அசுரன் படத்தை பார்க்க சொல்லி, அதன் மூலமாக பஞ்சமி நிலம் பற்றி ட்வீட் போட்டு தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கும் தலைமைக்கும் மனவருத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இவரின் ஆலோசனையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்ட அந்த ட்விட்டுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதே பஞ்சமி நிலம் தான், அதை முதலில் உரிவரிடம் சேருங்கள் என விமர்சனம் செய்ய தற்போது அது நீதி மன்ற வழக்கு வரை திமுகவை இழுத்து சென்றுள்ளது. ஏற்கனவே அதிமுகவை விட பாமக திமுகவை பரம எதிரியாக நினைத்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலினே தானாக ராமதாசிடம் மாட்டி கொண்டதாக தான் திமுக தொண்டர்களே புலம்பி வருகிறார்கள்.

இந்நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் தலைவரை பாமக நிறுவனரிடம் சிக்க வைத்தது இந்த சுனில் தான் என திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுனில் ராஜினாமா செய்துவிட்டார் என தகவல் பரவத்தொடங்கியதும் அதை வெடி வெடித்து கொண்டாடத குறையாக மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

0

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி தெருவில் கூவிக்கூவி காய்கறி விற்பனை செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பட்காகோன் என்ற தொகுதியின் 3 முறை எம்எல்ஏவாக இருந்த லோக்நாத் மஹ்தோ என்பவர் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றா தேர்தலிலும் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு கவுன்சிலரின் மனைவியே நடமாடும் நகைக்கடை போல் பந்தா செய்து வரும் இந்த காலத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி இன்றும் தெருவில் காய்கறி விற்பனையை செய்து வருகிறார்

விவசாய குடும்பத்தை சேர்ந்த லோக்நாத் மனைவி மவுலினிதேவி, தங்களுடைய தோட்டத்தில் விளையும் காய்கறிகளை இன்றும் தெருவில் சென்று விற்பனை செய்து வருகிறார். எம்.எல்.ஏ மனைவியாக இருந்தாலும் கடந்த பல வருடங்களாக செய்து வரும் தொழிலை விட மனமில்லை என்றும், இதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவை கவனித்து கொள்வதாகவும், கணவரின் சம்பாதித்யத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒருபுறம் கணவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்க இன்னொரு புறம் அவரது மனைவி தெருத்தெருவாக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

0

தமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதேபோல் தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர். அதேபோல் கனமழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும் இன்னும் சில இடங்களில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து தகவல் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் சாலைகளில் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு எவ்வளவு?

0


தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் புதிய மற்றும் வளரும் பங்குகளின் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன.

அத்துடன் முதலீடு செய்யும் நிறுவங்களுக்கு ஆலோசனைகள் வழங்கின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடப்பு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை 1640 கோடி டாலர் அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ளது.

இதில் அந்நிய முதலீட்டாளர்களின் தனியார் பங்கு முதலீடு 1400 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 240 கோடி டாலராக உள்ளது.

Real Estate Business in India-News4 Tamil Latest Online Tamil News Today
Real Estate Business in India-News4 Tamil Latest Online Tamil News Today

நடப்பு ஆண்டில் ரியல் எஸ்டேட் திட்டங்களில் 650 கோடி அளவிற்கு இருக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் அலுவலக திட்டங்கள் அதிக பங்கினை பெரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறை சுமார் 10000 கோடி டாலர்களை (சுமார் ரூ. 7லட்சம் கோடி)எட்டும் என மற்றும் ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.