ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் இந்த மையமானது
தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் அரியலூர் மாவட்டம் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியால் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்விற்கும் இலவசமாக பயிற்சி அளிக்க பட உள்ளது.
இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு வன அலுவலர் (Forest officer) பணிக்கு ஒருவர் தேர்வாகினார்.
இந்த வருடம் செம்படம்பர் மாதம் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வான குரூப் 4 தேர்வில் 10 க்கும் மேற்ப்பட்டோர் தேர்ச்சி பெற உள்ள நிலையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 15 மாணவ – மாணவிகள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு தற்போது உடல் தகுதி தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்வுக்கும் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் நீட் தேர்விற்கும் இலவச வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் 2 ஆசிரியர்கள் வீதம் 4 பாடங்களுக்கு 8 ஆசிரியர்கள் மேலும் கணிதப் பாடத்திற்கு 1 ஆசிரியர் என மொத்தம் சிறந்த அனுபவமிக்க 9 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடைந்து கடந்த வாரம் (13-10-2019) நடைபெற்ற மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் விழாவில் அடுத்த மாதத்தில் இருந்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் படி அடுத்தமாதம் அதாவது 02-11-2019 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இலவசமாக தங்கி படிக்கும் வசதியையும் இந்த பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது இந்த பயிற்சி மையத்தில் புதிய பாடத்திட்டதின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாகிய குரூப் -2 & 2A மற்றும் காவலர் தேர்விற்காக 90 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
நகரத்தை நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் மதுரை, திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை, நாகை,தஞ்சாவூர், கடலூர்,விருதுநகர், கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் வந்து தங்கி படிப்பது அப்பயிற்சி மைய ஆசிரியர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்
மேலும் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து தொடர்ந்து 6 மாதம் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் ரூபாய் 10,000 அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர்.
இது பற்றி நிர்வாக இயக்குனர் திரு.பழனிசாமி அவர்களிடம் கேட்ட போது படிக்க வசதி இல்லாத கிராமபுற ஏழை மாணவர்களை ஒரு அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை அதற்காக தான் இந்த பயிற்சி மையத்தை உருவாக்கினேன். இன்று வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்விற்கு தான் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு பணம் கட்டி படிக்க வசதி இல்லாமல் தங்களுடைய மருத்துவ கனவை விட்டு விலகி செல்லும் பல மாணவர்களை பார்த்த பிறகு மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பின் தான் இத்தகைய செயலில் இறங்கி உள்ளோம்.
இங்கு மாணவ- மாணவிகள் படிப்பதற்கு தேவையான நூலக வசதியையும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ( Smart class) 58″ அளவுள்ள LED டிவி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து வைத்து இருக்கிறோம் இத்தகைய வாய்ப்பினை மருத்துவ கனவோடு இருக்கும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி மையம் அமைப்பது என்பது மிக எளிதான செயல் அல்ல அவற்றை எல்லாம் கடந்து தான் இந்த மையம் செயல்பட இருக்கிறது
தமிழகத்திலேயே நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிக்க கூடிய மையமாக இதுவாக தான் இருக்கும் இத்தகைய வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
வளர்க மனித நேயம்!! வாழ்க மனித இனம் !!
இந்த இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ள நினைப்பவர்கள் கீழுள்ள எண்ணில் அழைக்கவும்.
இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியுள்ளர்.
சென்னை:
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வழி மண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதி வரையிலும் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட் டம் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 33 மி.மீ. மழையும், புழல் ஏரி அமைந்துள்ள பகுதியில் 28 மி.மீ. மழையும், சோழவரம் பகுதியில் 30 மி.மீட்டரும், பூண்டி ஏரி அமைந்துள்ள பகுதியில் 6 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மேலும் சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கன மழை பெய்தது. புரசைவாக்கம், அயனாவரம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், அடையார். திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி போன்ற பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி கிடந்தது.
இன்று காலையிலும் தொடர்ந்து மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடனும் காணப்பட்டது.
இது பற்றி வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது:
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும்.
தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 8 செ.மீ., தூத்துக்குடியில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., ஊட்டி, குன்னூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
தாம்பரத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தனது மகன் திருமணத்திற்காக அதிமுகவினரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழும்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்,
இது சம்பவம் தமிழகத்தை உலுக்கியது பேனருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு, உயர்நீதிமன்றமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேனர் விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சுபஸ்ரீ சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வருத்தம் தெரிவித்தனர் மேலும் பேனர் விவகாரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர், இதற்கு அதிமுக தான் காரணம் என்றும் கடுமையாக பேசி வந்தனர்,
இதனால் அதிமுக தலைமை இனிமேல் யாரையும் வரவேற்று பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனி திமுகவினரை வரவேற்று யாரும் பேனர் வைக்க வேண்டாம் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவினரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு நடுரோட்டில் விழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.
இந்த அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அலங்கார வளைவு சரியும் போது, ஒரு கார் அதனை கடந்திருக்கும். சில நொடிகள் தாமதித்திருந்தால் கார் மீது அலங்கார வளைவு விழுந்து பெரிய விபத்தாக மாறியிருக்கும். தமிழகத்தில் இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கும் மு க ஸ்டாலின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை,
திமுகவின் இடம் பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிக வை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் கடந்த 3 நாட்களாக டுவிட்டரில் பஞ்சமி நிலம் தொடர்பாக ஒரு போரே நடந்து வருகிறது.
மூன்று நாட்களுக்கு முன்பு அசுரன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் இது படம் அல்ல பாடம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் அவர்கள் பஞ்சமி நிலம் பற்றிய படம் என்பதால் அவர் பாடமாக எடுத்துக் கொள்வதால் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள இடம் ஆரம்பத்தில் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது என்பதால் தலித் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயத்தின் பட்டா சிட்டாவை டிவிட்டரில் வெளியிட்டு தனி நபருக்கு சொந்தமான இடம் எனவும் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் ராமதாஸும் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இப்படி மாறி மாறி இருவரும் கேள்விகளும் கொண்டிருப்பதால் தமிழகத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவே மாறிவிட்டது. பஞ்சமி நிலம் பற்றி இது திமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,
பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் என்றுமே அலசி ஆராய்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள் என்று ஸ்டாலினுக்கு தெரிந்த விஷயம் தான்.
திருமாவளவன் கடந்த காலத்தில் பேசி இருந்து வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும் அரசு ஆய்வு செய்து குழு அமைத்து தகுதியான தலித் மக்களுக்கு பிரித்து தர வேண்டும் என்றுர பேசியிருந்தார்.
பஞ்சமி நிலம் மீட்புக்கான இயக்கத்தின் தடா. பெரியசாமி திட்டவட்டமாக அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது தான் என்று டிவிட்டரில் தெரிவித்து திமுக வை கதறவிட்டுள்ளார்.
Dr .ராமதாஸ் அவர்கள் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தின் இடம் என்று குறிப்பிட்டது உண்மையே!
ஸ்டாலின் அவர்கள் காட்டும் பட்டா 1985 க்கானது. 1923 நிரந்தர கணக்கு பதிவேடு (Permanent Register ), RSR( Re-settlement Paisal Register ), SLR (Settlement Land Register) மற்றும் 1935 ன் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்து கொண்டு ஸ்டாலின் அவர்கள் பேசவேண்டும். முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, 4 வதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கியுள்ளனர்.1985 ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது வாய்சவடாலே! Dr. ராமதாஸ்,ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்சினையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்கு தீர்வு_கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தடா. பெரியசாமி அவர்கள் 2010 இல் மண்ணுரிமை மீட்பு இயக்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலப் பட்டியலைத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதில் தமிழகம் முழுக்க உள்ள பஞ்சமி நிலத்தைக் கணக்கெடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு தொல். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கியவர். அதற்கு முன்னர், நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்து, அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.
இவர் தற்போது பாஜகவில் உள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து போராடிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 543 ஹெக்டேர் நிலப்பரப்பில் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின்நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த அனல் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை கோரி அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘கால்வாய்களை மூடி அதில் அனல் மின்நிலையம் அமைத்து, விவசாயத்தை அழிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அனல் மின்நிலையம் அமைப்பதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்கவில்லை. எனவே, அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் பகுதியில் அரசு சார்பில் அமையவுள்ள இந்த அனல் மின் நிலையத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்த அனல் மின் நிலையத்திற்காக கடல் நீரை குழாய் மூலம் எடுத்து, அதை பயன்படுத்திய பின்னர் சுத்திகரித்து மீண்டும் கடலில் விடும் வகையில் உயர் மட்டப்பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால், இந்த பாலத்தால் மீன்பிடிக்க முடியாது என்றும், கடலில் விடப்படும் சுடுதண்ணீரால் மீன் வளம் பாதிக்கும் என்றும் கூறி, உப்பூர், மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களும்,விவசாயிகளும் மீனவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள தெரிவிக்கின்றன. இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
அரசு அடக்குமுறையும் நானும்.
பல கட்டப் போராட்டங்கள் மூலம் தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் என் மீது எந்த மாவட்டத்தில் எந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வார்கள் என எமக்கு தெரியாது
இச்சூழலில் உப்பூர் அனல் மின்நிலைய போராட்டத்தைப் பற்றி பெரும்பாலும் தமிழக மக்களுக்கு தெரிய வாய்ப்பு மிகக்குறைவே ஏனெனில் கூடங்குளம் போராட்டத்தை பற்றியோ நெடுவாசல் போராட்டத்தைப் பற்றியோ கதிராமங்கலம் போராட்டத்தை பற்றியோ ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றியோ தமிழக மக்களுக்கு தெரியவரும்
ஏனெனில் மேற்குறிப்பிட்ட பிரச்சனை 30 40 ஆண்டுகால பிரச்சனை அனைத்துப் போராட்டங்களும் அந்தந்த பகுதியில் நிறுவப்பட்டு அது முழுமையான பிறகே போராட்டங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பெற்றது
இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்திலேயே மிகப்பெரிய அனல் மின் நிலையத் திட்டம் உப்பூரில் 2013 இல் தொடங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு கடற்கரை ஓரத்தில் பாலம் கட்டுவதற்கான அமைப்பு தொடங்கப்பட்டு சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் பாலம் கட்டப்பட்டு வருகிறது..
ஆனால் 2013 இல் இருந்து நாம் அந்த சுற்றுவட்டார மக்களை ஒன்று திரட்டி கடலும் கடல் சார்ந்த மக்களையும் நிலமும் நிலம் சார்ந்த மக்களையும் கடல் வளமும் விவசாயமும் பாதிக்க பட போகும் சூழ்நிலை உள்ளது என்று கூறி கடுமையான முறையில் அரசு நெருக்கடிக்கு மத்தியில் நாம் வீதி வீதியா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் பொதுக்கூட்டம் போராட்டம் என ஒரு ஆறு ஆண்டுகளாக செய்து வந்தோம்..
இதனுடைய நீட்சி தற்போது மோர் பண்ணை கிராமத்திற்கும் நம்புதாளை மீனவ கிராமம் புதுப்பட்டினம் மீனவ கிராமம் காரங்காடு மீனவ கிராமம் திருபாலைகுடி மீனவ கிராமம் ஓலைக்குடா மீனவ கிராமம் இன்னும் எண்ணற்ற மீனவர்களை ஒருங்கிணைத்து ஒரு மிகப்பெரிய வெகுமக்கள் திரள் போராட்டம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்காக கடலில் கட்டப்படுகிற ஏழு கிலோமீட்டர் பாலத்தை கட்ட விடாமல் கடற்கரையோர மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்
அந்த வகையில் பாலம் கட்டப்பட்டால் கடுமையான முறையில் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் முழுதும் அனல்மின் நிலைய கழிவுகளால் அந்த சுற்றுவட்டார கடற்கரை கிராமங்கள் முற்றிலும் பாதிப்படையும் என்றும்,
உலகில் அனல்மின் நிலையத்தால் மிகப் பெரிய பாதிப்பு உண்டு என இயற்கை நலன்கருதி ஜெர்மனி இத்தாலி ஜப்பான் பிரேசில் கனடா இங்கிலாந்து போன்ற நாடுகள் அணு மின் நிலையத்தை மூடிவிட்டு மின்சார உற்பத்திக்கு மாற்று வழியைத் தேடிக் கொண்டுருக்கின்ற வேளையில்
ஆனால் நமது இந்திய ஒன்றியத்தில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மிகவும் நாசகார தொழிலாகக் கூடிய அனல்மின் நிலையத்தை இங்கே நிறுவுவதற்கு இந்திய ஏகாதிபத்திய அரசு முடிவு செய்கிறது அதனை மாநில அரசு இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்காது தமிழக அரசு இந்த அழிவு திட்டத்தை வரவேற்கிறது..
இதனால் விவசாய நிலமும் கடல் வளமும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறி உப்பூர் அனல் மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு சார்பாக போராடி வந்தோம் இந்நிலையில் மீனவ மக்களும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை அனல் மின்நிலையம் வேண்டாம் என கடுமையாக ஓரணியில் போராடி வருவதால் அரசு பயங்கரவாதம் இந்த போராட்டத்திற்கு யார் தலைமை தாங்குகிறார்களோ அவர்களை சிறை படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது..
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக திருவாடனை வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் என்னை சிறை படுத்துவதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது…
யாரிடம் புகார் பெறுவது எந்த மாதிரியான வழக்கு வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மீது போடுவது என மூன்று நாட்களாக அவர்களுக்குள்ளேயே பெரும் குழப்பம் ஏற்பட்டு உப்பூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு கேட்டுள்ளார்கள் உப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பலத்த யோசனைக்கு நடுவே கொடுக்க மறுத்துள்ளார்
உடனடியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் மாவட்ட கிராம நிர்வாக சங்க தலைவரிடம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவர் மீது புகார் கொடுக்கச் சொல்லுங்கள் இது அரசு உத்தரவு என கிராம நிர்வாக சங்க தலைவரிடம் dsp கூற ..கிராம நிர்வாக சங்க தலைவர் இதற்கெல்லாம் நாங்கள் ஆதரவு தர முடியாது நீங்கள் வேண்டுமானால் உங்கள் காவல்துறை ஆட்களை தேர்வு செய்து புகார் மனுவை பெற்று அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என கறாராக கூறி உள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத திருவாடானை மாவட்ட துணை கண்காணிப்பாளர் புகழேந்தி அவர்கள் இதை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம நிர்வாக அலுவலரை கூப்பிட்டு நீங்கள் காவல்துறை சொல்லுவதை கேளுங்கள் என உத்தரவு பிறப்பிக்க இன்றைய தகவல் உப்பூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுவில் கையொப்பம் வாங்கி உள்ளார்கள்.
எம் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் ஆறு மாத காலமாவது என்னை சிறைப்படுத்த வேண்டும் என அவர்களுடைய திட்டம் இந்த திட்டத்தை மிக ரகசியமாக வைத்து என்னை அவதானித்து கண்காணித்து வருகிறார்கள்.
எது எப்படியோ ஒரு ஒடுக்கு முறையிலிருந்து தான் ஒரு இனத்தின் விடுதலை பிறக்கும் தற்போது தான் எங்கள் பகுதியில் அதுவும் குறிப்பாக கடற்கரையோர கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் விவசாய பெருமக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள்
இந்த மருதமும் நெய்தலும் இணைந்தால் இந்த நாசகார திட்டமும் இந்திய ஏகாதிபத்தியமும் இங்கே கொண்டு வர இயலாது என்பதே உண்மை கடலும் கடற்கரையும் சார்ந்த திட்டங்களை கொண்டு வாருங்கள் வயலும் வயல் சார்ந்த திட்டங்களை கொண்டு வாருங்கள் அதுவே தமிழருடைய தற்சார்பு பொருளாதாரம் ஆகும் அதை விட்டுவிட்டு எவனோ ஒரு அந்நிய கார்ப்பரேட் கம்பெனி மூலம் ஒரு எரிசக்தித்துறை ஏற்படுத்தி அதன் மூலம் இங்கு மின்சாரத்தை தயாரித்து எவனோ ஒரு வளர்ச்சி நாடுகளுக்கு நீங்கள் கொடுப்பது தவறான காரியம்.
இந்த அனல் மின் நிலைய திட்டம் வந்தால் 30 ஆண்டுகளில் குளம் போல் உள்ள இந்த கடற்கரையோரத்தில் அனல் மின் நிலையம் அமைந்தால் மாபெரும் பேரழிவு நிகழும் அது மட்டுமல்லாமல் அனல் மின் நிலைய கழிவுகள் முற்றிலும் அழிய சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாகுமாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன ..
இந்த நிலையில் என் கண்முன்னே என் மக்கள் அழிவதை எப்படி என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியும் இதை தடுப்பதற்கான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கையும் வெகுமக்கள் திரள் போராட்டமும் நாங்கள் நடத்தினால் எங்களை சிறைப்படுத்த இந்த பயங்கரவாத அரசு துடிக்கிறது
நீங்கள் எத்தனை முறை பிடித்தாலும் ஒடிக்கினாலும் நான் என் மக்களுக்காக போராடியே வருவேன்
நான் காவல் துறைக்கு வைக்கக்கூடிய ஒரே கோரிக்கை என்னவென்றால்..
நீங்கள் என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு எங்கே இருந்து உத்தரவு வரும் எமக்கு ஓரளவு தெரியும். அதை நடைமுறைப் படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமையாக வேலை பார்த்து வருகிறீர்கள் ஓலந்து பிரஞ்சு டச்சு போச்சு கீசியர்களிடம் அடிமையாக வேலை பார்த்தீர்கள் தற்போது திராவிட வடுக கூட்டத்திடம் அடிமையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எந்த இடத்திலும் தமிழர்களுக்காக நின்றதாக வரலாறு இந்த அறநூறு ஆண்டுகளில் குறிப்பிடவே இல்லை அண்ணியனுக்கு வேலை பார்த்து பார்த்து பழகிப் போன ஓர் இனமாக தமிழர்கள் இருக்கிறார்கள் இது நல்லது இது கெட்டது என முடிவெடுக்கக் கூடிய திறன் உங்களுக்கு இருந்தும் கிடையாது.
நீங்கள் ரோபோ போல் வேலை செய்து வருகிறீர்கள் நீங்கள் வைத்துருக்க கூடிய கம்பு துப்பாக்கி சமூக சீரழிவு கலாச்சார பண்பாட்டு சிதைவு கூலிப்படை மூலம் மக்களை பிரிப்பது மதம் மூலம் மக்களை பிரிப்பது ஒரு மிகப்பெரிய மிருக குணம் கொண்டு அப்பட்டமாக மக்களை கொன்று குவிப்பது அவர்களை அடிப்பதற்கும் அவர்களை சுடுவதற்கும் தானே தவிர
மிகப்பெரிய நாசகார திட்டங்கள் இந்த மக்கள் மீது திணிக்கப்பட வேண்டாம் என ஒரு புரட்சியாளன் கிளம்பி மக்களுக்காக போராடினால் அவனை சுடுவதும் அவனை கொடுமைப்படுத்துவது மட்டுமே உங்களுடைய பணியாக இங்கே அமைகிறது
அதுபோல கெட்டவர்களை அடிப்பதற்கும் சுடுவதற்கு தான் அந்த கம்பும் துப்பாக்கியே தவிர” மக்களுக்காக போராடுபவர்களுக்கு அல்ல ஆனால் இங்கே தவறாக கற்பிக்கப்பட்டு மக்களுக்காக போராடுபவர்கள் சுடவும் அடிக்கவும் நீங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது பேசாம நாம ஒரு ரோபோவா இருந்துட்டு போயிடலாம் ரத்தமும் சதையும் உள்ள மனிதர்களாக நாம் ஏன் இருக்க வேண்டும் ஆறறிவு படைத்த மனிதனாக இருக்கிறோம் நமக்கும் கண் காது மூக்கு வாய் அனைத்தும் உண்டு உணர்வுகளும் உண்டு அந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு எப்படி நல்லவர்களை அடிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் உங்களுக்கு மனசாட்சி வருகிறதோ எது எப்படியோ இந்த மாதிரி அடக்குமுறை என் மீது திணித்தால் நான் எதிர்கொள்ள தயார் ….
எமது கரையோர மக்களுக்கு விவசாய மக்களுக்கும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் ”””
என்னை சிறை பிடித்து விட்டார்கள் என நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம் உங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உங்களுக்குள் இருக்கிற முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்றுங்கள் நமக்கு கட்சிகள் அப்பாற்பட்டு சாதிகள் அப்பாற்பட்டு மீனவனாகவும் விவசாயிகளாகவும் அணி திரள்வோம் நாம் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளாக ஒன்றுபடுவோம் தமிழர் என்று பெருமிதம் கொள்வோம் என்றும் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் காவல் துறையினரால் கைது செய்யபட்டுள்ளதாகவும்,தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி ஆகியோரது சந்திப்பு கடந்த வாரம் பல்லவ பூமியான மாமல்லபுரத்தில் நடந்தது.
இச்சந்திப்பு நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் உன்னிப்பாக உற்றுநோக்கி கவனித்தனர், மாமல்லபுரத்தின் பெருமையை உலகறியச் செய்தார், பிரதமர் மோடி அதுமட்டுமில்லாமல் தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பு நிகழ்வைப் பற்றி மோடி அவர்கள் கவிதையாக எழுதி வெளியிட்டுள்ளார், ஒரு கவிஞனாக ஜொலிக்கும் அளவில் இக்கவிதை இருக்கின்றது. இதனை தமிழாக்கம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழர்களை மேலும் பெருமை அடையச் செய்துள்ளார்.
பட்டாவை காட்டினால் போதுமா? மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் நெத்தியடி கேள்வி
கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் எழாம் பொருத்தமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் வெளி வந்த நடிகர் தனுஷ் நடித்த அசூரன் படம் குறித்தும்,அதில் வருவது போல பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்தும் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிவிட்டிருந்தார்.
ஸ்டாலினின் இந்த டிவிட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் பத்திரிக்கையான முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது,முடிந்தால் அதை முதலில் மீட்க முயற்சியுங்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் குற்றசாட்டை மறுக்கும் வகையில் முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.நிரூபிக்க தவறினால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அரசியலை விட்டு விலக தயாரா? என்றும் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் ஸ்டாலினின் இந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த நிலத்திற்கு மூல ஆவணம் எங்கே என நெத்தியடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தற்போதைய “வைரல்” ட்விட்டர் பதிவு..!!
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
2.முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
4. நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து
விட்டதாக தெரிகிறது.
சீமானின் பேச்சுக்கு பிறகு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு
செய்திகள் இப்போது டாப். அந்த வழக்கில், கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட
7 பேர் சிறையில் உள்ளனர்.
அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த தீர்மானம்
நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக 2018ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து விட்டதாக
கூறப்பட்டிருக்கிறது. எனினும், ஆளுனர் எழுத்துப்பூர்வமாக தமது
முடிவை தெரிவிக்க
வில்லை. சில நாட்களில், மறுப்பு முடிவை வெளியிடலாம் என்று
தெரிகிறது.
அண்மையில் நாம் தமிழர்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவை கொன்றது நாங்கள்தான். இலங்கையில் எங்கள் இனத்தை அழித்ததால் அதை செய்தோம் என்று கூறியிருந்தார்.
அந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், ஆளுநரின் முடிவு பற்றிய
தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, விடுதலைக்கு தடையாக சீமான் இருந்து விட்டாரோ என்று பேச்சுகள் எழத் தொடங்கி உள்ளன.
மேலும்
இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக
செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப
செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள்
பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது
News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும்
தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை
கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.
தான் இயக்கம் டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அழகி,பள்ளிக்கூடம் போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற புதிய படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய மகனை இந்த படத்தில் கதாநாயகனாக்கியது குறித்து தங்கர் பச்சான் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:
எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே அமைந்தது. எனது முதல் படம் மாதிரி இதை இயக்கி இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி இந்த படத்தில் இருக்காது. எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில் போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ், கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கும். இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம் வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும் மாறுகிறது. எனவே நானும் வேறு மாதிரி படம் எடுக்க வந்து விட்டேன். அதற்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்று பெயர் வைத்துள்ளேன்.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில் நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை கற்றுத்தருகிறது என்பது கதை. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் இந்த படம் குறித்து தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இயக்குனராக உயர்ந்து நிற்கும் தங்கர் பச்சான் தொடர்ந்து தமிழ் மண் சார்ந்தும்,உறவுகளை குறித்தும்,தமிழ் கலாச்சாரத்தை பாதிக்காத வகையிலும் படங்களை இயக்கி வந்திருக்கிறார்.இந்நிலையில் தன்னுடைய மகனை அறிமுகப்படுத்தும் இந்த படம் அது போல இருக்காது என்று கூறியிருப்பதன் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாஜக அசுர வெற்றி, காங் அகல பாதாளத்தில்! கருத்து கணிப்பு முடிவுகள்
மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனவும், காங்கிரஸின் செல்வாக்கு சரியும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் அரியானாவில் வரும் அக்., 21ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அக்., 24ல் வெளியிடப்படுகிறது. கட்சிகளின் பிரசாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான ரிபப்ளிக் தொலைக்காட்சி சார்பாக இரு மாநிலங்களிலும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளில் பாஜக அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்,
மொத்த இடங்கள்: 288
மகாராஷ்டிரா:
பாஜ., : 142 முதல் 147
சிவசேனா : 83 முதல் 85
காங்., கூட்டணி: 48 முதல் 52
ஹரியானா: மொத்த இடங்கள்: 90 பாஜ., : 58 முதல் 70 காங்., : 12 முதல் 18