செல்போன் திருட்டா? தொலைஞ்சு போச்சா? கவலை வேண்டாம் அரசே கண்டுப்பிடித்து தரும்!
நாட்டுமக்கள் தங்களது மொபைல் போன்,திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதை கண்டுபிடித்து தர புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது மத்திய தொலைத்தொடர்புத் துறை.மத்திய கம்யூனிகேஷன்ஸ் துறை அமைச்சர்,ரவி ஷங்கர்பிரசாத்,தொலைந்த மொபைல் போன்களைக் கண்டுபிடிக்கப் புதிய இணையத்தளம் ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
Central Equipment identity Register என்ற திட்டம் மூலம் போன் தொலைந்து விட்டால் அது குறித்து புகார் தெரிவித்து, உடனடியாக ப்ளாக் செய்ய முடியும்.மேலும், போன் எங்கிருக்கிறது என்பதையும் ட்ராக் செய்து கண்டுபிடிக்க முடியும்.
அனைத்து மொபைல் போன்களும் ஐ.எம்.ஈ.ஐ என்று சொல்லப்படும்
தனித்துவமான எண் இருக்கும்.அந்த எண் மூலம்தான் போன் எங்கிருக்கிறது என்பதை
கண்டுபிடிக்க முடியும்.அதே நேரத்தில் தொலைத்தொடர்புத் துறை,”ஐ.எம்.ஈ.ஐ எண்-ஐ நகல்
செய்யமுடியும்.இதன் காரணமாக ஒரே ஐ.எம்.ஈ.ஐ கொண்ட பல போன்கள் இருக்கின்றன.
இதை வைத்துப்பார்க்கும்போது, ஐ.எம்.ஈ.ஐ எண்
கொண்டு ஒரு போனை ப்ளாக் செய்தால், பலர் பாதிக்கபடுவார்கள்,அதைத் தடுக்கும் நோக்கில்தான்
CEIR என்கிற திட்டம் ஆரம்பிக்கப்படுள்ளது” என்று கூறுகிறது.
இந்த CEIR திட்டம் குறித்துஅரசு தரப்பு,”ஒரு
மொபைல் போன் தொலைந்துவிட்டால் அதை பிளாக் செய்ய இந்த திட்டம் உறுதுணையாக
இருக்கும்.அதேபோல போலி ஐ.எம்.ஈ.ஐ எண்கள் உருவாவதையும் இந்தத் திட்டம் மூலம் தடுக்க
முடியும்.திருடிய மொபைல் போன்களை பயன்படுத்துவது இதன் மூலம் தடுக்கப்படும்” என்று
திட்டத்தின் நன்மைகள் குறித்துப் பட்டியலை அடுக்குகிறது.
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் முதலில் காவல்துறையிடம் சென்று எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்புத் துறைக்கு 14422 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் புகரைத் தொடர்ந்து சில சோதனைகள் செய்யும் அரசு தரப்பு.அதன் பின்னர் போன் பிளாக் செய்யப்படும்.
யாராவது உங்கள் மொபைல் போனை, புதிய சிம் கார்டு போட்டு பயன்படுத்தினால், அந்த சிம் கார்டின் நிறுவனம் போலீசிடம் பயனர் குறித்துதகவல் அளிக்கும்.தற்போதுஇந்த சேவை மகாராஷ்ட்ராவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் CEIR திட்டத்தை சோதனை செய்து வருகிறது அரசு தரப்பு.
போராட்டதிற்கு திரளாக வாருங்கள்! திமுக தொண்டர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.
முப்பெரும் விழாவினை வெற்றிகரமாகவும் புதுமையாகவும் நடத்தி முடித்திட உணர்வுப்பூர்வமாக ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவதற்கு முன்பே, களத்திற்கு அழைக்கின்ற கடிதத்தினை எழுதுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் பிறந்தநாளில் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்று 70ஆம் அகவை. அகம் மகிழ்ந்து கொண்டாட வாருங்கள் என உங்களில் ஒருவனான நான் அழைக்கவில்லை. அறப்போர்க்களம் காண வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன். அன்னைத் தமிழைக் காப்பதுதான் நமக்குப் பெருமகிழ்ச்சி. அதற்கான போராட்டமே நமக்குத் திருவிழா. அத்தகைய திருவிழாவை நாம் கொண்டாடவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், ‘இந்தி திவாஸ்’ என்கிற இந்தி நாளினையொட்டி தெரிவித்த கருத்துதான் நம்மைக் கிளர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.
இது நமக்கான போராட்டமல்ல. நம் உயிரினும் மேலான தமிழ் மொழி காக்கும் போராட்டம். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டம்.
அன்னைத் தமிழைக் காத்திடுவோம்.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!
என்று திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இநதியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள வேண்டும்! திகார் சிறையிலிருந்து பா.சிதம்பரம் கோரிக்கை.
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள் சிறையில் இருந்து தன் குடும்பத்தினர் வாயிலாக ட்விட்டர் மூலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டரில், “நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்ற கருத்து அபாயகரமானது. தமிழ் மக்கள் மட்டுமல்ல; மற்றவர்களும் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மொழிகளின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறோம். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம். இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல.
தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.
இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். திகார் சிறையிலிருந்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குடும்பத்தினர் மூலம் டிவிட்டர் வாயிலாக அழுத்தமான பதிவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பாஜக?
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டத்தில் இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் எழுத்துக்கள் வங்கி பணப் பரிமாற்றம் மின்னஞ்சலிலும் இந்தித் திணிப்பு
மேலும் நாட்டின் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் ‘இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம்’ என்று தமிழ் மொழியை உள்ளிட்ட மாநில மொழிகளை அவமதித்து உள்ளார்.
இதற்கு கடும் கண்டனத்தை உயர்நிலை செயல் திட்டக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ் மொழியை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இதனை கண்டிக்கும் விதமாக 20.9.2019 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு அறிவித்துள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளது என்னவெனில்,
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரை ஸ்டாலின் சென்னையில் நடத்தும் பிரபலமான சன்ஷைன் பள்ளியில் இந்தி திணிப்பு கட்டாயப் படுத்தப்படுகிறது என்றும், தமிழில் பேசினால் ரூபாய் 500 அபராதம் என்றும் இந்தியை இரண்டாவது பாடமாக கற்பித்து வருவதால் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது மகள் நடத்தும் பள்ளிக்கு எதிராக எப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார் என்று சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் வலைத்தளவாசிகள் செய்து வருகின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் 200 ரூபாய் உடன்பிறப்புகள் தவித்து வருகின்றனர்.
‘ஊருக்குத்தான் உபதேசம் நம் வீட்டுக் இல்லை’ என்ற சொல்லுக்கு ஏற்ப திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றாகவே செயல்பட்டு வருவதாக நடுநிலைவாதிகள் நக்கலடித்து கொண்டு இருக்கின்றனர்.
முதலீடுகளை கவர தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கும் ஆலோசனை
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மின்வாகன கொள்கை சிறப்பானது, மேலும் முதலீடுகள் குவிய வாடிக்கையாளருக்கு சலுகைகள் தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.
தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மின்கல வாகனங்கள் கொள்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் தமிழகத்தில் மின்கல வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; அதற்கான கொள்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்கல வாகனங்கள் கொள்கை-2019ஐ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; மின்கல வாகனங்கள், மின்னேற்றும் கருவிகள், மின்கலன்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள் அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் விலையில் 20% வரை மானியம் வழங்கப்படும்; தென்மாவட்டங்களில் நில மதிப்பில் 50% வரை மானியம் வழங்கப்படும்; பத்திரப் பதிவின் போது முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும்; வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பணியாளர்களுக்காக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகள் அக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்தக் கொள்கை பெரிதும் உதவும். தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நில மதிப்பில் 50% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களின் மின்கல வாகன தயாரிப்பு ஆலைகள் அமைவதற்கும், வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்களில் மின்னேற்றும் வசதி செய்யப்பட வேண்டும்; அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இத்தகைய வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்பது போன்ற அம்சங்களும் சாதகமான பயன்களை ஏற்படுத்தும். வாகனங்களுக்கு சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் முழுமையாக விலக்கு ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். தமிழக அரசின் இந்த திட்டங்கள் பாராட்டத்தக்கவையாகும்.
ஆனால், இவை மட்டுமே மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவாது. மின்கல வாகனங்களின் விலைகள் சாதாரண வாகனங்களின் விலைகளை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். ஆனால், மின்கல வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகைகள் எதுவும் கொள்கையில் இடம்பெறவில்லை. சாலைவரி & பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றால் கிடைக்கும் பணப்பயன்கள் குறைவு என்பதால் அவை வாடிக்கையாளர்களை ஈர்க்காது.
மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் மக்களை எளிதில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric Vehicles – FAME) திட்டத்தின்படி ஒரு கிலோ வாட் மின்கல திறன் கொண்ட இரு சக்கர ஊர்திக்கு ரூ.10,000 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால், மின்கலனை தேவைக்கு ஏற்ற வகையில் மாற்ற கூடுதலாக ரூ.20,000 செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், ரூ.10,000 மானியம் எந்த வகையிலும் பயனளிக்காது. மாநில அரசுகளும் மானியம் வழங்கினால் மட்டுமே மின்கல வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலையில், அதை உணர்ந்து கொண்ட தில்லி அரசு 15% முதல் 20% வரை கூடுதல் மானியம் வழங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை பொறுத்தவரையில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்கள், மாராட்டியம், குஜராத், தில்லி ஆகிய 7 மாநிலங்களிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எந்த மாநிலத்தில் அதிக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு, அதிகளவில் வாகனங்கள் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளனவோ, அங்கு தான் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வரும். முதலீட்டை ஈர்க்க தென் மாநிலங்களிடையே கடும் போட்டி நிலவும் சூழலில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால் தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தரத்தில்
உயர்த்துவதற்காக ஐபில் போன்று கடந்த நான்கு வருடங்களாக டிஎன்பிஎல் டி20 தொடரை தமிழ்நாடு
கிரிகெட் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்ற மாதம் தான் இந்த தொடரின் நான்காவது
சீஸன் கோலகலமாக முடிந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக புகார்
எழும்பியுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வீரர்களிடமும் அணிகளிடமும்
விசாரணை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் கூறுகையில்,
“அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சூதாட்டத்தில் ஈடுபடக் கோரி தங்கள் வாட்ஸப் எண்ணிற்கு
மெசேஜ் வந்ததாக சில வீரர்கள் எங்களிடம் கூறியுள்ளனர். யார் அவர்கள் என்பதை நாங்கள்
விசாரித்து வருகிறோம். ஆனால் இதில் எந்த சர்வதேச வீரரும் சம்மந்தப்படவில்லை” என்றார்.
2016-ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே சூதாட்ட
தரகர்கள் வீரர்களை தொடர்புகொள்ள முயற்சிப்பதாக புகார்கள் வந்தன. ஆனால் இப்போது இது
பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முதல் தர போட்டியில் விளையாடும் அதிரடி ஆட்டக்காரர்
ஒருவரும், டாப்-ஆர்டரில் இறங்கும் அணுபவம் வாய்ந்த இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு பயிற்சியாளர்
ஆகியோர் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே சூதாட்டப் புகார் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக
மறுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்த குறிப்பிட்ட புகார் தொடர்பாக விசாரிக்க குழு
ஒன்றை நியமித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடர் மட்டுமல்லாது கர்நாடக ப்ரீமியர் லீக் மீதும்
சூதாட்டப் புகார் எழுந்துள்ளது. இதனால் இதுபோன்ற தொடர்களை நடத்த பிசிசிஐ தடை விதிக்க
வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
திமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.
ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுகிறது என்றும் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிகள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டன.
உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இதன்மூலம் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை துரிதப்படுத்தி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக அரசு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா என்ற கேள்வி பொதுவாக எழுந்தது, இருந்தாலும் வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுகவின் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு ஏசி சண்முகம் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பிரமாண்ட வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது அக்கட்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது, ஆனால் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்தது, வெற்றிக்கே திணறியது திமுக. இது திமுகவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது, இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை துரிதப்படுத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுத்து தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்த வந்த தமிழக அரசு தற்போதுதான் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யின் செயல்பாடு பாராட்டு தக்க வகையில் இருப்பதால், இதனை பயன்படுத்தி கொண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது ஆளும் தரப்பு, திமுகவிற்கு மீண்டும் ஒரு கிடைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக அடியெடுத்து வைக்கும் என தெரிகிறது, உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் 4 கட்டமாக தான் நடக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், சமூகநலவாதிகள், அரசியலில் சாதிக்க விரும்புகிறவர்களின் அனைவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் திருவிழாவை விரைவில் காண தயாராகுவோம்.
இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம்
எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று பலமுறை பளிச்சென சொன்ன கமலஹாசன், இன்னமும் இந்த இந்தி திணிப்பு குறித்து கருத்து சொல்லவிலையே… ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதிலாக தான் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்,”இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் போட்டுள்ளார் கமல். அதில் அவர் தோன்றி கூறியதாவது:
“பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாச்சாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த “ஷா”வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்ககூடாது.
ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஒருசிறிய போராட்டம். ஒரு சிறிய வெற்றி.. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால், அது அதைவிட பன்மடங்காக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது.
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளை தவிர. இருப்பினும், நாங்கள் அதை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம். பாடிக் கொண்டிருப்போம். ஏனெனில் அதை எழுதிய கவிஞர், எல்லா கலாச்சாரத்திற்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.
இந்தியா இப்போதைக்கு சுதந்திர நாடாக இல்லை என்பதை அவருடைய இந்த ட்வீட் மூலம் கமல் மறைமுகமாக சொல்லி உள்ளார். அது மட்டுமில்லாமல்.. “வெற்று நாயகம்” என்ற வார்த்தையை கூறியதன் மூலமும், எந்த “ஷா”வும் அதை மாற்றிவிட முடியாது என்றும் மத்திய அரசிற்கு சம்மட்டி அடி பதில் கொடுத்துள்ளார் கமலஹாசன்!
40 ஆண்டுகளாக கண்ணாடியை சாப்பிடுறேன் சுவையோ பிரமாதம்!!!
மத்தியபிரதேசத்தில் உள்ள டிண்டோரியில் ஒரு மனிதர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்புகள்,மதுபான பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களின் கண்ணாடிகளை சாப்பிட்டு வருகிறார். அவர் தான் தயாராம் சாஹூ என்ற வக்கீல். இவர் குழந்தை பருவத்திலிருந்தே கண்ணாடிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்.
“நான் வித்தியாசமாக எதாவது செய்ய விரும்பினேன் ,அதனால் நான் இதைத் தொடங்கினேன்.நான் முதலில் சாப்பிட்டபோது எனக்கு ஒரு நல்ல சுவை ஏற்பட்டது.நான் கண்ணாடிகளை சாப்பிடுவது தெரிந்த மக்கள் திடுக்கிட்டு அதை கண்டார்கள். அதனால் நான் அதை கண்பிப்பதற்காக மேலும் தொடர்ந்து சாப்பிட்டேன்” என்று திரு சாஹூ செய்தியாளர்களிடம் கூறினார்
“மக்கள் சிகரெட்,மதுபானம் மற்றும் பிற
விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது போல இது எனக்கு ஒரு போதை”என்று அவர் கூறினார்.
அவரது இந்த விசித்திரமான பழக்கம் அவரது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியது என்றும்.மற்றபடி எந்த பிரச்சனையும் உணரவில்லை எனவும் கூறினார். ஆனால் மருத்துவர்கள் ஒரு பெரிய கண்ணாடி வயிற்றில் சென்றால், அது என் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறினர்.எனவே நான் அந்த பழக்கத்தை கட்டுபடுத்தினேன்,எப்போதாவது சாப்பிடுவேன்” என்று அவர் கூறினார்.
உடல்நலத்திற்கு ஆபத்தானது என்பதால் மற்றவர்களைப் பின்பற்ற நான் பரிந்துரைக்க மாட்டேன்” என்று வழக்கறிஞர் சொல்கிறார்.மக்கள் யாரும் கண்ணாடி சாப்பிட முயற்சிக்க கூடாது என்றும் இது உடலின் உட்புற பாகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.