திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து வந்தார்.

இவருக்கும் மறைமலை நகரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது, இவர்களது நிச்சயதார்த்தம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் திவ்யாவிற்கு இதற்கு முன் வேறொருவருடன் காதல் இருந்துள்ளது, திருமணம் பேச்சு எடுத்தவுடன் திவ்யா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். என்று சொல்லியிருகிறார்.

அதற்கு திவ்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர், இந்த திருமணத்திற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால், எங்களை நீ உயிருடன் பார்க்க முடியாது. என்று சொல்லி, கட்டாயப்படுத்தி திவ்யாவை சம்மதிக்க வைத்துள்ளனர்.

பின் கடந்த வாரம் கார்த்திக் மற்றும் திவ்யாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

முதல் காதலை மறக்க முடியாத திவ்யா, வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த தற்கொலைக்கு யாரும் காரணமல்ல, முதல் காதலை மறக்க முடியாமல் இதை செய்தேன். என்று ஒரு கடிதத்தில் எழுதிவிட்டு இதை செய்திருக்கிறார்.

இவரின் இறுதி சடங்கிற்கு கார்த்திக் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரும் சென்று வந்துள்ளனர். கார்த்திக்கிற்கு இதற்கு முன் இரண்டு முறை பெண் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நின்றுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது முறையும் திருமணம் நின்று போனதால், விரக்தி அடைந்த கார்த்திக். அவரது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் கார்த்திக்கின் குடும்பத்தையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.