EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

0
37

EB பில் கட்டுவதில் நடக்கும் நூதன மோசடி! ஒரே போன் கால் மொத்த பணமும் காலியாகும் அதிர்ச்சி தகவல்

இபி பில்லை மொபைல் போன்களில் அல்லது ஆன்லைனில் கட்டுபவர் நீங்கள்? அப்படி நீங்கள் இபி பில் கட்டிருந்தாலுமே உங்களுக்கு கட்டவில்லை என்று போனில் அழைப்பு வரலாம் அல்லது மெசேஜ் வரலாம். மேலும் நம் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் போகலாம்.

இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகமாகி வருகிறது. இது எவ்வாறு நடக்கிறது இதை எப்படி தடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். நாம் இபி பில் கட்டி முடித்த பிறகும் நம் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் இல் நாம் இன்னும் இபி பில் கட்டவில்லை என்று அனுப்புவார்கள்.

நான் உடனடியாக பதட்டத்தில் அதில் இருக்கும் எண்ணிற்கு அழைத்து பேசுவோம். நாம் கட்டி விட்டோம் என்று கூறினால் எதிரே இருக்கும் நபர் நீங்கள் கட்டியது இன்னும் மின்சார துறைக்கு வரவில்லை என்றும், இவ்வாறு வராமல் இருந்தால் உங்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்றும் கூறுவார்கள்.

பயத்தில் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அந்த நபரிடம் கேட்போம். அதற்கு அவர் நாங்கள் அனுப்பிய மெசேஜில் இருக்கும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து அதில் பத்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் உங்கள் பணம் மின்சார துறைக்கு வந்து விடும் என்று கூறுவார்கள்.

இதைக் கேட்ட நாமும் பயத்தில் இதை அப்படியே செய்வோம். இவ்வாறு நாம் இதனால் சென்று பத்து ரூபாய் கட்டணம் செலுத்திய உடனேயே நம் அக்கவுண்டில் இருக்கும் அனைத்து பணமும் பறிபோய்விடும். எனவே இது போன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் ஏடிஎம் லாக் ஆகிவிட்டது இபி பில் இன்னும் கட்டவில்லை என்று வரும் அழைப்புகளை நம்பாமல் நேரடியாக வங்கிக்கோ அல்லது மின்சார துறை அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களின் பணம் இவ்வாறு பறிபோய்விட்டால் உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணிற்கு அழைத்தும் புகார் கொடுக்கலாம். எனவே இது போன்ற அழைப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

author avatar
CineDesk