ஆசியக் கோப்பையில் இந்தியாவை வெல்ல எங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சம்… பாக் வீரர் கருத்து

0
123

ஆசியக் கோப்பையில் இந்தியாவை வெல்ல எங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சம்… பாக் வீரர் கருத்து

பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது இந்தியாவை எளிதாக வெல்வது குறித்து பேசியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. அதையடுத்து மீண்டும், 10 மாதங்களுக்கும் மேலாக, இந்த இரு அணிகளும் ஆகஸ்ட் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாயில் ஆசியக்கோப்பை தொடரில் விளையாட உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் துபாயில்தான் நடந்துள்ளன. ஐபிஎல்லின் 2020 மற்றும் 2021 போட்டிகள் வளைகுடா நாட்டில் நடந்தது, இது இந்திய வீரர்களுக்கு அங்குள்ள நிலைமைகளுடன் பழகுவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியது. மேலும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச கிரிக்கெட் இறுதியாக தங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பு பல ஆண்டுகளாக துபாய் மைதானங்கள் சொந்த மைதானமாக செயல்பட்டது.

இந்த அம்சம் தங்களுக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியை வெல்ல சாதகமான அம்சமாக இருக்கும் என பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார். அவர் “எந்தவொரு தொடரின் முதல் போட்டியும் அந்த தொடருக்கான முன்னோட்டமாக அமைக்கிறது. எங்கள் முதல் ஆட்டம் இந்தியாவுக்கு எதிரானது. நிச்சயமாக, எங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும், ஏனென்றால் நாங்கள் கடைசியாக சந்தித்தபோது, ​​​​பாகிஸ்தான் அதே இடத்தில் இந்தியாவை தோற்கடித்தது.அந்த மைதான சூழல்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் பரிச்சயமானது. இங்கு பாகிஸ்தான் பிஎஸ்எல் மற்றும் ஏராளமான சொந்தத் தொடர்களில் விளையாடியது. இந்தியா இங்குள்ள ஐபிஎல்லில் விளையாடியுள்ளது, ஆனால் இந்த நிலைமைகளில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.