காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

0
215
#image_title

காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

காங்கிரஸ் எம்பி ஆன கார்த்திக் சிதம்பரத்தின் ரூ 11.04 கோடி சொத்துக்கள் அதிரடியாக அமலாக்கத்துறையால் திடீரென முடக்கம் செய்யப்பட்டது. இது பற்றிய தகவல் பின்வருமாறு,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய காங்கிரஸ் எம்பியும் ஆன கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக  புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பிரிவு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த விசாரணையின் முடிவின் ஒரு பகுதியாக  காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இன்று அதிரடியாக அமலாக்கத்துறை பிரிவு முடக்கி உள்ளது.  மீடியா பணப்பரிவர்த்தனை மோசடியான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில் அவர் ஈடுபட்டதாக கூறி கர்நாடக மாநிலத்தின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அவரது 3 அசையும் சொத்துக்கள் மற்றும் 1 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையானது இன்று முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.