ஜிகா வைரஸ் தொற்றிற்கு இதுதான் காரணம்?! இதை செய்தால் தோற்று ஏற்படாது?!

0
73

கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் தொற்றானது பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கும் ஜிகா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜிகா வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜிகா வைரஸ் என்பது டெங்கு காய்ச்சல் போல கொசு கடிப்பதன் மூலம் ஏற்படுகிறது. மேலும் இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் நோயாகும். தொற்று ஏற்பட்டவர்கள் ஐந்தில் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அது மறைந்துவிடும். ஒருவருக்கு மட்டும் அது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். பொதுவாக வைரஸ் தொற்று உள்ள 12 முதல் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் வெளிப்படலாம்.

காய்ச்சல், மூட்டு வலி, குறிப்பாக கை மற்றும் பாதம் இணைப்புகளில் வலி, கண் சிவத்தல், உடலில் புள்ளிகள் போன்றவை ஏற்படும். இதனுடன் சேர்ந்து தலைவலி, கண் வலி, சோர்வு, உடல் வலி, வயிற்று வலி ஆகியவை ஏற்படலாம். டெங்கு கொசு போல நல்ல தண்ணீரிலே முட்டையிடும். இதன் காரணமாக வீட்டை சுற்றி இளநீர் கூடு, டயர், பிளாஸ்டிக் கிளாஸ் போன்றவை போடுவதை தவிர்க்க வேண்டும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் இந்த கொசுக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். கர்ப்பிணிகளுக்கு இந்த கொசு கடித்தால் ஏற்படும் பாதிப்பு கவலையளிக்கும் வகையில் உள்ளது. கருச்சிதைவு கூட ஏற்படலாம். இந்த வகையான வைரஸ் கொசுக்கள் மூலமே பெரும்பாலும் பரவுகிறது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுதான் இதையும் பரப்புகிறது. ஏடிஸ் கொசு, ஒரு மனிதனை கடிப்பதன் மூலம் அவருக்கு பரவுகிறது.

ரத்தம் செலுத்துதல் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும் பரவும். பெரியவர்களுக்கு நரம்பு மண்டலம் மற்றும் மூளை பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த தோற்று சிசுவின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். மூளை செல்கள் பாதிக்கப்படும். மூட்டுகள் பாதிக்கப்படும்.

இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை மருந்து எதுவும் தயாரிக்கவில்லை. மேலும், தடுப்பூசியும் இல்லை. வைரஸ் தொற்றுக்கு உள்ள ஒரே தீர்வு கொசு தடுப்பது மட்டுமேதான். எனவே, அருகில் உள்ள இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது அளிக்கும் .

author avatar
Jayachithra