முகப்பருக்கள் முழுவதுமாக நீங்க வேப்பிலை சோப் – வீட்டு முறையில் தாயார் செய்வது எப்படி?

0
117
#image_title

முகப்பருக்கள் முழுவதுமாக நீங்க வேப்பிலை சோப் – வீட்டு முறையில் தாயார் செய்வது எப்படி?

ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.

காரணம் முகத்தில் தழும்பு, கரும்புள்ளி, பருக்கள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் பருக்கள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தன் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும். இதை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்வது நல்லது.

அந்த வகையில் வேப்பிலை முகப்பருக்கள் நீங்க சிறந்த தீர்வாக இருக்கும். இந்த வேப்பிலையில் இயற்கையாகவே கிருமிகளை எதிர்த்து போராடும் திறன். இதை வைத்து சோப் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் முகப்பருக்கள் நீங்கி முகம் அழகாக காணத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

*சோப்பு கட்டி – 1 துண்டு

*வேப்பிலை – 2 கைப்பிடி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
(அல்லது)
வைட்டமின் ஈ கேப்ஸுல்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மிக்ஸி எடுத்து கொள்ளவும். அதில் 2 கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 2 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பிறகு ஒரு பவுல் எடுத்து அதில் சோப்பு கட்டியை சேர்த்து நன்கு சிறிதளவு தண்ணீர் கொள்ளவும்.

இந்த சோப்பு கரைசல் பவுலை கொதிக்கும் நீரின் மேல் வைத்து கரைத்து கொள்ளவும். இவை நன்கு கரைந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள வேப்பிலை கலவையை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் இதை சோப்பு அச்சில் ஊற்றி 15 நிமிடம் வரை ப்ரிட்ஜில் வைக்கவும். ப்ரிட்ஜ் இல்லாதவர்கள் வெயிலில் 1 1/2 மணி நேரம் வைக்கவும். அதேபோல் சோப் அச்சு இல்லாதவர்கள் வீட்டில் உள்ள சின்ன சின்ன பாத்திரங்களில் ஊற்றிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் வீட்டு முறையில் இயற்கையான வேப்பிலை சோப் தயார்.