இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு!

Anbumani met Edappadi Palanisami

இன்று வெளியாகிறது அதிமுக – பாமக தொகுதி பங்கீடு! நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக – பாமக, இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் இணைந்து போட்டியிடும் என அதிமுக கூறி வந்தது. ஆனால், இட ஒதுக்கீடு கிடைக்காமல் எந்த முடிவும் அறிவிக்க முடியாது என பாமக கூறி வந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை அவர்களது … Read more

தமிழகத்தில் அனல் பறக்கும் கூட்டணி பேரங்கள்! உடையும் முக்கிய கட்சிகளின் கூட்டணி!

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பு சட்டசபை பதவிக்காலம் இந்த வருடம் மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.ஆகவே 2021 மே மாதம் 24ம் தேதிக்குள் அடுத்த சட்டசபையை தேர்வு செய்வதற்கான தமிழக சட்டசபைத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டு அதற்குள் புதிய சட்டசபை பதவி ஏற்க வேண்டும் என்பது விதி. ஆகவே தமிழகத்துடன் கேரளா, … Read more

ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் மற்றும் 6 சவரன் வரையில் அடகு வைத்த நகை கடன் அதோடு மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், முதலமைச்சர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தும் விதமாக பற்பல அறிவிப்புகளை வெளியிட்டு வெட்டுகின்றார் . அந்த வகையில், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி … Read more

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை கொடுக்க அதை தமிழக முதல்வர் இப்போதே நிறைவேற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும்,தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்து வருகிறார். அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட … Read more

கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 சீட்டுகள் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தச்சநல்லூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மாநில தலைவர் முருகன் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சட்டசபைக்கு போவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நயினார் நாகேந்திரன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும், … Read more

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் விருப்பத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று முதல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரையில் அனுதினமும் மாலை 5 மணி வரையில் விருப்ப மனுக்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் போட்டியிட ரூபாய் 15,000 செலுத்தி … Read more

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பொருளாதார அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை போல பேசி வருகிறார் என்றும், அவர்களுடைய ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி தற்சமயம் தமிழகத்தில் இயங்கிக் கொண்டு இருந்தால் அந்த வீட்டின் … Read more

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விதத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற செல்லூர் ராஜு அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு நன்றாக இருப்பதாக கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி … Read more

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள். அதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1683 கோடி ஒதுக்கீடு … Read more

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

நடப்பு சட்டசபையின் பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 2021 – 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சரும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னையை தனித்துவம் மிக்க ஒரு நகராக மாறுவதற்கு 3140 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று … Read more