மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

0
110
#image_title
மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் எண்ணற்ற தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களின் தண்டனை காலத்தை நல்வழி படுத்தும் நோக்கில் உபயோகமாக உள்ள வகையில் சமீபத்தில் தமிழக சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு புத்தக வாசிப்பு அறிவினை மேம்படுத்தும் நோக்கில் வசதி படைத்தோர் மற்றும் புத்தக சேமிப்பு பழக்கமுடையோர் தங்களிடம் உள்ள புத்தகங்களை சிறை கைதிகளுக்கு தானமாக வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
சிறை துறை நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சிறைகள் மற்றும் கிளை சிறைகளுக்கு பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது இல்லங்களில் உள்ள புத்தகங்களை அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சிறை துறை அதிகாரிகளிடம் வழங்கி வந்தனர். மேலும் சிறை நிர்வாகத்தின் இந்த முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள பானாமூப்பன்பட்டியில் உள்ள அரசு துவக்க பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த தொகையினை ஒன்று சேர்த்து உசிலம்பட்டியில் உள்ள கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் இன்று வழங்கினர்.
சிறுவர்கள் தங்களது சேமிப்பு தொகையை இது போன்ற நல்வழிக்கு பயன்படுத்தியதை சிறைதுறை அதிகாரிகள் மற்றும் அரசு கல்வி துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களது பாராட்டுக்களை மாணவ மாணவியருக்கு தெரிவித்தனர்.