சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

0
29
#image_title

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

நம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர்.இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.வயிறு எரிச்சல்,அல்சர்,வாய்ப்புண்,உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய தயிர் பெரிதும் உதவுகிறது.

இந்த ஆரோக்கியம் நிறைந்த தயிரில் குழைந்த தயிர் சாதம் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும்.அதேபோல் நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று பலரும் நினைத்திருப்போம்.இப்படி கோவில் பிரசாதத்தை நினைக்கும் போதே வாயில் எச்சில் ஊரும் நிலையில் அவற்றை வீட்டில் செய்ய தெரிந்தால் எப்படி இருக்கும்? இத்தனை நாள் நாம் கோவிலில் வாங்கி சுவைத்து வந்த ஆரோக்கியமான தயிர் சாதத்தை அதே சுவையில் செய்யும் ரகசியம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 2 கிளாஸ்

*பால் – 200 மில்லி

*தயிர் – 1/4 கப்

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி

*உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 5

*பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

*இஞ்சி – சிறு துண்டு(நறுக்கியது)

செய்முறை:-

முதலில் பச்சரிசியில் சாதம் தயார் செய்து கொள்ளவேண்டும்.நாம் உண்ணும் மற்ற சாதத்தை காட்டிலும் இந்த பச்சரிசி சாதத்தை சற்று குழைவான பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.சாதம் வேகும் நேரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து தயார் செய்ய வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணேய் ஊற்றி அவை சூடேறியதும் அதில்
1/2 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/2 தேக்கரண்டி மிளகு சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் அதில் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.இவை வதங்கி வந்த பின்னர் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விடவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கிண்ணத்தில் 1/4 கப் தயிரை ஊற்றி அதில் தாளித்து வைத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.அதன்பின் வடித்து வைத்துள்ள பச்சரிசி சாதத்துடன் 200 மில்லி பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் தயாரித்து வைத்துள்ள தயிரை சாதத்தில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.அதன் பின் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.