புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

0
168
#image_title

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தனது கொடூர ருத்ர தாண்டவத்தை நடத்தியதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

மேலும் பலர் தங்களது விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தனர். இந்த கொடூர வைரஸ் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்ததின் பலனாக வைரஸ் தொற்று குறைய தொடங்கியது.

இதனிடையே கடந்த மாதம் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா, லேசான பதிப்புடன் தொடங்கியது தற்போது நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேருக்கு தனது பாதிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தனது பாதிப்பை உண்டாக்கிய கொரோனா குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு வீரியம் இல்லாத ஒன்றாக உள்ளது. மேலும் ஆக்சிஜன் தேவை என்ற நிலையும் இல்லை.தமிழகத்தில் கிளஸ்ட்டர் பாதிப்பு என்பதும் இல்லை, தனி பாதிப்பு மட்டுமே உள்ளது.

தமிழ்நாட்டில் 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும், 24,500 ஆக்சிஜன் வென்டிலேட்டர்கள் மற்றும் முப்பத்தி மூன்றாயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், 11,000 தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.