இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

0
50
#image_title

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். குறிப்பாக அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் வியர்வையால் துர்நாற்றம் வீசும். இதனால் பொதுவெளிகளில் நடமாட அசௌகரியமாக இருக்கும்.

அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் அவைதிப்படுபவர்கள் மற்றவர்களுக்கு அருகில் நிற்க தயங்குவார்கள்.

இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:-

1)சந்தனம்
2)பன்னீர்(ரோஸ் வாட்டர்)

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வாசனை நிறைந்த சந்தன தூள் மற்றும் 4 தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்.

இதை அக்குள் பகுதியில் பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அக்குள் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.

தீர்வு 02:-

1)ரோஜா இதழ் பொடி
2)கடலை மாவு
3)எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி ரோஜா இதழ் பொடி, 1 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை அக்குள் பகுதியில் பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அக்குள் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.