கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா!!? அதை விரட்ட சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! 

0
49
#image_title
கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையா!!? அதை விரட்ட சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!
வீட்டில் இருக்கும் கொசுத் தொல்லையில் இருந்து விடுபட அதாவது கொசுக்களை விரட்டுவதற்கு இயற்கையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கொசுக்கள் மூலமாக நமக்கு பல தீமைகள் ஏற்படுகின்றது. டெங்கு காய்ச்சல் கூட கிடைக்காத மூலமாகத் தான் ஏற்படுகின்றது. இந்த கொசுக்களின் கடாயில் இருந்து தப்பிக்க கொசு பேட், கிரீம்,  கொசுவத்தி சுருள் போன்று பல முறைகளை பின்பற்றி இருப்பும். ஆனால் இந்த கொசுக்களை விரட்டுவதற்கு நாம் பின்பற்றும் எந்த வழிமுறையும் பலன் தந்திருக்காது.
இந்த பதிவில் சில இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கொசுக்களை எவ்வாறு வீட்டை விட்டு துரத்துவது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கொசுக்களை விரட்ட உதவும் வழிமுறைகள்…
* கொசுக்களை விரட்டுவதற்கு புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். புதினாவின் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் வெளியே சென்றுவிடும்.
* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு லாவண்டர் எண்ணெயை கலந்து உடலில் தேய்த்துக் கண்டால் கொசு நெருங்காது.
* யூக்லிப்டஸ் இலைகளை காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த இலைகளை கண்டு வீடு முழுவதும். புகை பட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
* வேப்ப எண்ணெயை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இதை உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்கள் நம்மை நெருங்காது.
* அதே போல கிராம்பு எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், வேப்பிலை எண்ணெய் இவற்றை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.
* பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை வீட்டின் ஜன்னலில் வைத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராது.
* எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் இதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வைத்துவிட்டால் கொசுக்கள் வீட்டினுள் வராது.