தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளிப்பு !

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளித்து வருகிறார்கள். போலீஸ் மோப்ப நாய் பிரிவு கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன. போதை பொருட்களை கண்டறிவதற்காக கோவைக்கு தற்போது புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை … Read more

சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை-பொதுமக்கள் பேட்டி!

சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை சுலபமாக மாற்று செல்வதாக பொதுமக்கள் பேட்டி. 2000 ரூபாய் நோட்டுக்களை சட்டைப் பையில் வைத்து எடுத்து சென்றுவிடலாம் ஆனால் இப்போது பைகளில் எடுத்து செல்லும் நிலை உள்ளது. நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொடுத்து … Read more

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது!

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்க்கெழும்பு பகுதியை சேர்ந்த விசைப்படகை இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுற்றி வளைத்து பிடித்தது இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது படகு மற்றும் 150 -கிலோ மீன் பறிமுதல் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீனவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது … Read more

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்!

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்! திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1348வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் ஆரவாரம் இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் மாலை அணிவித்து செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் … Read more

பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பபு – மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியினர் மனு!!

நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர் இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தங்கள் பிரச்சனைகள் … Read more

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி – விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை … Read more

சேலத்தில் மின் இணைப்புக்காக, கண்களில் கருப்புத் துணியை கட்டிபோராட்டம் நடத்திய குடும்பம்!!

சேலத்தில் மின் இணைப்புக்காக கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்!! சேலத்தில் மின் இணைப்புக்காக மூன்று ஆண்டுகளாக போராடுவதாக கூறி,கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்து போராட்டம் நடத்திய குடும்பம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். சேலம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் … Read more

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!!

மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மதுபாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடவியல் அதிகாரிகள் தற்போது மதுபான பாரில் ஆய்வு செய்து வருகின்றனர். தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. … Read more

கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கைச் சேர்ந்த தினகரன், விக்னேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “சிங்கம்புணரி தாலுகா, வடக்கு சிங்கம் புணரி பகுதியில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெண்கள் உறுதிமொழி செய்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. … Read more