தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!! தமிழகத்தில் கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் உயிரிழிந்துள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் கலாச்சாரத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் … Read more

சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!! சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றுபேர் கொண்ட மர்மகும்பல் வீச் அருவாளால் உதயசங்கரை வெட்ட முயன்றபோது, உதயசங்கர் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயற்சி செய்தார். … Read more

உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!! திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர் .தற்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது திண்டுக்கல் அருகே போலி மதுபான கூடம் இயங்கி பொதுமக்களின் உயிரை பறிக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். … Read more

தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்-ஒருவருக்கு காயம் இருவர் கைது!!

தலை தூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம்- ஒருவருக்கு காயம் இருவர் கைது! சென்னை சைதாப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டதில் ஒருவர் காயமடைந்து இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் கோடை விடுமுறை என்றாலே சிறுவர்கள் சாலையில் விளையாடுவதும் மாலை நேரங்களில் பட்டம் விடுவதும் என ஒரு மாத காலம் பொழுதை கழிப்பார்கள். ஆனால் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டால் மற்றவர்கள் கழுத்தை பதம் பார்க்கும் … Read more

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது!

உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் ரோஜா அலங்காரங்கள் 2 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. கோடை சீசனை முன்னீட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான 18-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் கடந்த … Read more

கொரோனா காரணமாக பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும். உள்ளிட்ட 11-ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே நிலையம் வாயிலில் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை … Read more

பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை!!

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை-காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை!! காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் – நீலா தம்பதியினர், இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனும் இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா உடன் வீட்டில் இருந்து வருகிறார். … Read more

கீழே விழுந்த பழங்களை அப்படியே எடுத்து சென்று நோயாளிகளுக்கு கொடுத்த அதிகாரிகளின் செயலால் சர்ச்சை!!

கீழே விழுந்த பழங்களை அப்படியே எடுத்து சென்று நோயாளிகளுக்கு கொடுத்த அதிகாரிகளின் செயலால் சர்ச்சை!! நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வட மாநில தொழிலாளர்ளுக்கு தீக்காய சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் … Read more

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – போலீசார் விசாரணை!!

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – சாலையில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் வீடியோ வைரல் – போலீசார் விசாரணை! கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். பணி காரணமாக அவரது … Read more

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்!!

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்!! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மல்லிகார்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகம் விளக்கவுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்கி அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் … Read more