ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!!

One Lakh Pensioners and Innovation Women Project!! Amazing Chief!!

ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!! இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வுதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார். மேலும் நான் முதல்வர், புதுமை பெண் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் மூலம் … Read more

அரசு பேருந்திற்கு வழிவிடாமல் சென்று இளைஞர்கள் அட்டகாசம்!

அரசு பேருந்திற்கு வழிகொடுக்காமல் எட்டு கிலோ மீட்டர் தூரம் இரண்டு பைக்கில் சென்ற ஐந்து இளைஞர்கள் அட்டகாசம்: இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் – பத்தனம்திட்டாவிற்கு செயின் சர்வீஸ் நடத்தும் அரசு பேருந்து நேற்று மதியம் கொல்லத்திலிருந்து பயணிகளுடன் பத்தனம்திட்டாவிற்கு புறப்பட்டது. பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் இரு பைக்கு களில் 5 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்கள் பேருந்துக்கு வழிகொடுக்காமல் மெதுவாகவும் சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் … Read more

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் வேதனை!

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விவசாயிகள் வளர்த்த உயர்ஜாதி மரங்களான செம்மரம், தேக்கு போன்ற மரங்களை வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு வஞ்சிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் To மதுரை தேசிய … Read more

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் இருவர் கைது. மேலும் ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு சங்கமம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு!!

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு பிறப்பித்த RDO! தடையை மீறி சித்ரா பௌர்ணமி அன்னதானம் வழங்கிய பொதுமக்களையும், சாமி தரிசனம் செய்ய வந்த இந்து முன்னணியினரையும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பான சூழல் நிலவியது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலை கோவில் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கு பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து, திருவிழாக்களுக்கு தடை விதித்து 145 தடை உத்தரவு பிறப்பித்த … Read more

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பதாகை உடன் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு. நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் சாரதா ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தில்குமார் உடன் பங்கேற்றார். கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்களில் 10 பேர் வந்திருந்தனர். இதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்னதாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கல்வியில் … Read more

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!!

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!! அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – நீதிபதி. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம் ஆயிர வைசிய சபைக்கு சொந்தமாக மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்லூரி,உள்ளன. ஆண்டுக்கு கோடி ரூபாய் அளவில் … Read more

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்!

Krishnagiri, child labour

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம்! கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் பெரிய நிறுவங்கள், தொழில்சாலைகள் போன்ற இடங்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு எண் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் … Read more

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் … Read more