சவுதி அரேபியாவை தாக்கிய ஏவுகணை

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஏமன் அரசுக்கும் சண்டை நடைபெற்று வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு  தரும் நாடாக ஈரான் விளங்குகிறது. அந்நாட்டின் ஆதரவுடன் ஏமன் நாட்டின் சில பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போர்  எதுவும் நடக்காமல் இருக்கிறது. தெற்கு சவுதி அரேபியாவை இலக்காக வைத்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக … Read more

டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமேரிக்காவும், பிரேசிலும் கொரோனா வைரஸிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. அஸ்ட்ரா செனேக்கா என்ற … Read more

சோமாலியாவில் துப்பாக்கிச்சூடு

சோமாலியா என்ற நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது அங்கு அல் ஷாபாப்  என்ற இயக்கம் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் மொகடிசுவின் லிடோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உயர்தர சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்ததாக கூறப்படுகிறது.  இந்த துப்பாக்கிச்சண்டையில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர், ஒரு காவல் துறை அதிகாரி என மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் … Read more

ஆக்லாந்தில் மீண்டும் பொது முடக்கம்

100 நாட்களுக்கும் மேலாக நியூசிலாந்தில் கொரோனா தொற்று இல்லாமல் நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் ஆக்லாந்தில் ஆகஸ்ட் 16 அன்று 49 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மீண்டும் கொரோனா அச்சம் காரணமாக பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக  எந்தவித  கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைநடத்தவில்லை. இதையடுத்து, தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். 120 உறுப்பினர்களை … Read more

தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடு?

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த உறவின் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடாகும். துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. தூதரக ஒப்பந்தத்தின் முதல்படியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான தொலைபேசி சேவை தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள சர்வதேச பத்திரிகையாளர்கள் … Read more

உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் முதன்முதலில் பிலிப்பைன்சில்தான் பலியை ஏற்படுத்தியது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டியது. பலியானவர்களின் எண்ணிக்கை 3000 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அந்த நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு  இருந்ததை … Read more

கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் உள்ள பெரு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 6வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 5.50 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு  … Read more

பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

நீண்ட ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு  பக்கபலமாக அமெரிக்கா உள்ளது. எனினும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கடைசியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே  பிப்ரவரி மாதத்தில் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சாளர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிறப்பு … Read more

நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்த சோகம்

நேபாளத்தில் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள மலைத்தொடரில் லிடி  என்ற கிராமம் உள்ளது அங்கு 170-க்கும் அதிகமான குடும்பங்கள் இருகின்றனர். திடிரென குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன ஆனாலும் 21 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு நடவடிக்கைகள் … Read more

பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காதான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கி வருகிறது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.  இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம் என அதிபர் டிரம்ப் இன்று கூறியுள்ளார். குழந்தைகள் பல நேரங்களில் குறைந்த … Read more