வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!

0
221
#image_title

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!

கடந்த மாத இறுதியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்தது. தொடர் கனமழை தாக்கத்தால் மாவட்டங்களின் ஏரிகள் உடைந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது.

அதேபோல் கடந்த இரு வாரங்களுக்கு முன் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிலவியதால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பேய் மழை கொட்டி தீர்த்தது. வட தமிழகத்தின் 4 மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மழைவெள்ளத்தில் உடைமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு வேண்டிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் புயலால் பலத்த சேதத்தை சந்தித்த சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதுமட்டும் இன்றி குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு மூலம் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் நிவாரணத் தொகை வழங்குவதற்காக டோக்கன் கடந்த சில வாரங்களாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் பணம் பெறாமலேயே பெற்றதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதுமட்டும் இன்றி வெள்ள நிவாரணம் குறித்த அரசாணையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் தேதி முடிந்து விட்டது என்று விண்ணப்ப படிவங்களை கொடுக்க ரேசன் ஊழியர்கள் மறுக்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே மக்கள் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் நிவாரணத் தொகையிலும் ஊழல், மோசடியா? என்று திமுக அரசை பல தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.