முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

0
166
#image_title

முருகனை எப்பொழுது ஆண்டி கோலம் மற்றும் ராஜ கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று தெரியுமா?

தமிழ் கடவுள்,அழகன்,வேலை ஆயுதமாகவும்,மயிலை வாகனமாகவும் கொண்ட கடவுள் முருகப் பெருமானை வணங்கி வந்தால் செய்ய இயலாது என்று சொல்லக் கூடிய விஷயங்களும் எளிதில் நடந்து விடும்.

முருகனுக்கு உகந்த செவ்வாய் அன்று அவரை தரிசித்து வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

முருகனின் ஆறுபடை வீடு:

1)திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில்
2)திருச்செந்தூர் முருகன் கோவில்
3)பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
4)சுவாமிமலை சுவாமிநாத கோவில்
5)திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
6)பழமுதிர்ச்சோலை சுப்ரமணிய சுவாமி கோவில்

இவை ஆறும் முருகனின் ஆறுபடை வீடு ஆகும்.இதில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே முருகனுக்கு பதில் வேலுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் அதிகம் தரிசிக்கும் கோவிலில் ஒன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்.இது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.

தை பூசம் மற்றும் பங்குனி உத்திர நாளில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேகம் நடைபெறும்.சபரிமலை ஐயப்பன் கோவிலை போலவே தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் மாலை போட்டு நடைபயணம் மேற்கொண்டு முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

முருகன் என்றால் அனைவருக்கும் காவடி தான் முதலில் நினைவிற்கு வரும்.முருகனை தரிசிக்க உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தண்டாயுதபாணி சுவாமியின் சிறப்பு அவர் எந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாரோ அதுபோல் நம் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது.

முருகனை எந்த நேரத்தில் ஆண்டி மற்றும் ராஜ கோலத்தில் காண முடியும்.எந்த கோலத்தை கண்டால் என்ன சிறப்பு என்பதை அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டி கோலம்:

அதிகாலை நேரத்தில் தான் முருகன் ஆண்டி கோலத்தில் காட்சி அளிப்பார்.முருக பெருமான் அனைத்தையும் துறந்த நிலையில் இருப்பதை தான் ஆண்டி கோலம் என்று அழைக்கிறோம்.தீராத உடல் நலக் கோளாறு இருப்பவர்கள்,மன குழப்பத்தில் இருப்பவர்கள்,வேறு ஏதேனும் குறை இருப்பவர்கள்,நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை நீங்க
ஆண்டி கோலத்தில் உள்ள முருகனை அவசியம் தரிசிக்க வேண்டும்.

ராஜ கோலம்:

மலை நேரத்தில் தான் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.சுப நிகழ்வுகளை தொடங்க இருப்பவர்கள்,தொழில் தொடங்க இருப்பவர்கள்,செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனை தரிசிக்க வேண்டும்.