முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கைகள்
திருப்பதி என்ற பெயரை அறியாதவர் இந்தியாவில் இருக்க முடியாது ஏன் உலக அளவில் பேசப்படும் ஒரு திருத்தளமாக விளங்குவது திருப்பதி ஏழுமலையான் கொவில். நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் மக்கள் கூடும் திருத்தலமாக இருப்பது திருப்பதியே.
கொரோனா வைரஸின் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற நாள்தோரும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மக்கள் அதிகம் பொதுவெளியில் கூட வேண்டாம் என அறிவுறுத்தியதோடு மட்டும் இல்லாமல் அவ்வாறு கூடவும் பல்வேறு கட்டுப்பாடுகளையும்
விதித்துள்ளது.
கொரோனோ வைரஸ் கட்டுப்பாடுகளால் திருப்பதியில் தினம் தினம் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான செயலாகவே அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இனி பக்தர்கள் யாரும் காத்திருப்பு அவையில் தங்கவைக்கப் போவது இல்லை. இனி பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை வைத்து தங்களுக்கான தரிசன நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதைப்போலவே 300 ரூபாய் தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் போன்ற அனைத்துமே குறித்த நேரத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பக்கதர்கள் கூட்டம் மிதமிஞ்சி காணப்பட்ட திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைந்து பேருந்துகளும், கடைவீதிகளும், மோட்டைபோடும் இடம், அன்னசத்திரம் என அனைத்து இடங்களும் பக்தர்கள் இல்லாமல் இருப்பது புதுவிதமாக உள்ளது என திருப்பதிவாசிகள் கூறுகின்றர்.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலக அளவில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரசுக்கு
ஹாலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். இது உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலந்தில் இருக்கும் பல்கலைக் கழகத்தை சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குடும்பத்தில் 7 வது வகை வைரஸ் ஆகும். இதற்கு முன் இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தில் ஏற்கனவே 6 வகை வைரஸ்கள் பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அவை பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாததால் வெளியில் பெரியதாக பேசப் படவில்லை. ஆனால் தற்போது பரவியுள்ள இந்த 7 வது வகையான கொரோனா வைரஸ் உலகை ஒட்டு மொத்தமாக அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இதற்கு முன் பரவிய 6-வது வகை கொரோனா வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்த ஹாலந்தை சேர்ந்த 10 ஆராய்ச்சியாளர்கள், அதற்கடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸ் பரவியதும் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகளின் அடிப்படையில் அதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்தை எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து கொரோனா வைரசுக்கு தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சோதனையானது சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் வெற்றி கிடைத்துவிட்டால் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருபது ஆண்டுகளாக அரசை ஏமாற்றும் டி.டி.வி.தினகரன் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ்
அந்நிய செலாவனி மோசயடி வழக்கில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் 31 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என 1998 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் அவர்கள் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.ஆனாலும் இரண்டு நீதிமன்றத்திலும் இவருடைய வழக்ஙு தள்ளுபடி செய்யப்பட்டு அபராதம் செலுத்தும் படி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் அந்த அபராதத்தொகையை அவர் செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவதாக தெரிகிறது.
இதனை அடுத்து சென்னையை சார்ந்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார் அதில் இதுநாள் வரை டி.டி.வி.தினகரனிடம் அபராதம் வசூலிக்காத அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு டி.டி.வி.தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த அமைந்துள்ளது இருக்கூர் கிராமம். இது பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலுசாமி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் நூல் பரவுவதால் பிராய்லர் கோழிகள் பாதிக்கப்பட்டு இருந்து வருகின்றன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருக்கூர் கிராமத்திலுள்ள திமுக பிரமுகர் பாலுசாமி தனது பண்ணையில் இறந்த கோழிகளை சாலையோரமாக அப்புறப்படுத்தி உள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியில் இருந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பண்ணை உரிமையாளர் பாலுசாமி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 1 லட்சத்து 50 ஆயிரம் பேரை நோய் தாக்கியுள்ளது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ் நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர்.
அதற்கடுத்து நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவருடைய மரணம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நடந்த முதல் பலி என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.இதனையடுத்து தற்போது கர்நாடக மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று அவர் தனிமை வார்டுக்கு அனுப்பப்படுவார் ”என்று கல்பூர்கியின் துணை ஆணையர் ஷரத் பி கூறி உள்ளார்.
மேலும் கர்நாடக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு இன்று வெளியிட்டுள்ள அவருடைய ட்விட்டர் பதிவில் “கர்நாடகாவில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் 2 அதிகரித்து உள்ளது. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 20 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடன் கலபுரகிக்கு வந்து இறந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ” என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து வசூலில் சாதனை புரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுமாறு தமிழக அரசு அறிவித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதற்கான கெடு வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அடுத்த மாதம் தொடர்ந்து திரையிடப்படும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் ரிச்சர்ட்டுடன் இணைந்து புதிய பட வேலைகளை துவங்கியுள்ளார் இயக்குனர் மோகன், முதற்கட்டமாக கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் புதிய தோற்றம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய படத்தின் தலைப்பை விரைவில் ஒரு நல்ல நாளில் அறிவிப்பதாக அதில் கூறியுள்ளார். திரௌபதி திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்த அறிவிப்பு திரையுலகில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை கனிமொழி எம்பி குற்றசாட்டு
தொல்லியல் துறை சார்பாக தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவாரின் மகளும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொல்லியல் துறை அமைச்சரான பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்த பதில் திருப்தியில்லாததால், அதனை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது திமுக மக்களவை குழு துணைத் தலைவரான கனிமொழி கூறியதாவது: சுப்ரியா சுலே அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்க மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது ‘ என கூறினார். ஆனால், மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை.
மேலும் தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணிகளுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதற்காக தொல்பொருள்துறை தடைகளை ஏற்படுத்தியிருக்கிறதா? இதுகுறித்து அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டுகிறேன் என்றும் கனிமொழி கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் திமுக மக்களவை குழு துணைத் தலைவரான கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல், “மத்திய தொல்பொருள் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதன் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அந்த விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் வேறு பணிகளை செய்ய மாநில அரசுகளின் துறைகளுக்கு நாங்கள் பல முறை அனுமதிக்கவில்லை. அதேசமயம், மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய தேவை இருந்தால், அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதில் எந்த சிக்கலும் இருக்காது. நாட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில் கூட விதிமுறைகளின்படி தான் மத்திய தொல்பொருள்துறை செயல்படுகிறது. மாநில அரசுகளுக்கு இதுகுறித்து ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரலாம். தொல்பொருள்துறை எந்த தடையையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்கிறேன் என்றும் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் விளக்கமளித்திருக்கிறார்.
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் 450 மீனவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள், அவர்களை மீட்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை ஒன்றை வைதுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;
ஈரான் நாட்டு தீவுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 450 பேர் உட்பட 783 மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்து பல வாரங்களாகியும் அவர்கள் இன்னும் மீட்கப் படவில்லை. இந்த விஷயத்தில் ஈரானிலுள்ள இந்திய தூதரகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
உலக அளவில் கொரோனா வைரசால் கடுமையாக
பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த நாட்டிலுள்ள
கிஷ் மற்றும் சிருயா தீவுகளில் உள்ள மீன்பிடி நிறுவனங்களில் தமிழகத்தைச்
சேர்ந்த 450 மீனவர்கள் உட்பட 783 இந்திய மீனவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஈரானில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில், அந்த மீனவர்கள்
தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தனர். ஆனால், ஈரான் மீன்பிடி நிறுவனங்கள்
அதற்கான ஏற்பாடுகளை செய்யாத நிலையில், அவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக முதலமைச்சரும் இதுகுறித்து வெளியுறவுத்துறைக்கு கடந்த 28-ஆம் தேதி
கடிதம் எழுதினார்.
ஆனால், அதன்பின் சுமார் மூன்று வாரங்களாகியும்
ஈரானில் தவிக்கும் 783 மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு எந்த
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஈரான் நாட்டிலுள்ள இந்திய தூதரகமும் இந்த
விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. இந்திய மீனவர்களை மீட்க அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்த நிலையில், ஈரானில் உள்ள
தூதரகம் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஈரான்
தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட மீனவர்கள், தங்களை
மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதைக்கேட்ட தூதரக
அதிகாரிகள் பண்டர் அப்பாஸ் நகரில் உள்ள துணைத்தூதரகத்தை தொடர்பு
கொள்ளும்படி ஆலோசனை வழங்கியதுடன் அதன் கடமையை முடித்துக் கொண்டது. பண்டர்
அப்பாஸ் துணைத் தூதரக அதிகாரிகள், முதலில் கிஷ் தீவுக்குச் சென்று
மீனவர்களை சந்திப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில்
கிஷ் தீவுகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதைக் காரணம்
காட்டி மீனவர்களுடனான சந்திப்பை ரத்து செய்து விட்டனர். கிஷ் தீவுகளில்
கொரோனா அச்சம் தணித்து, வெளியாட்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட
பிறகு தான் தமிழக மீனவர்களை சந்திக்க முடியும் என்று பண்டர் அப்பாஸ்
நகரிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறிவிட்டதாக தெரிகிறது.
கிஷ்
தீவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்பட்ட அச்சம் காரணமாகத் தான்
தங்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு
இருக்கும் போது கொரோனா அச்சம் விலகிய பிறகு மீனவர்களை சந்திப்பதாக தூதரக
அதிகாரிகள் கூறுவது அலட்சியத்தின் உச்சம் ஆகும். கிஷ் தீவில் கொரோனா வைரஸ்
தீவிரமாக பரவத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள்
பணியாற்றும் மீன்பிடி நிறுவன உரிமையாளரின் சகோதருக்கு கொரோனா வைரஸ்
தொற்றியிருப்பதாக தெரிகிறது. இத்தகைய சூழலில் தங்களையும் கொரோனா தாக்கி
விடும் என்ற அச்சத்தில் தமிழக மீனவர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
ஒருபுறம் கொரோனா வைரஸ் அச்சம்
என்றால், மறுபுறம் அவர்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர். சீனா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்பதில் துடிப்புடன்
செயல்பட்ட வெளியுறவுத் துறை, ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்பதில்
மட்டும் அலட்சியம் காட்டக்கூடாது. கிஷ் தீவில் விமான நிலையம் உள்ள நிலையில்
வெளியுறவுத்துறை நினைத்தால், ஈரான் வெளியுறவுத் துறையின் சிறப்பு அனுமதி
பெற்று ஓரிரு நாட்களில் இந்திய மீனவர்களை மீட்க முடியும். ஆனால், 3
வாரங்களாகியும் இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
என்பது தெரியவில்லை.
ஈரானில் தவிக்கும் 450 தமிழக மீனவர்களின் கதி என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் அவர்களின் குடும்பத்தினர் கவலை கொண்டுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், 450 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 783 இந்திய மீனவர்களையும் அடுத்த சில நாட்களுக்குள் மீட்டு, தாயகம் அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் கூரியுள்ளார்.
பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள்
மகாபாரதத்தில் பதினெட்டாம் போர் என்பது மிகவும் சிறப்புக்குறிய பகுதியாக பார்க்கப்படும் இது குருசேத்திரப்போர் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இப்போரின் இறுதிநாளில் கௌரவர்களின் கடைசி தளபதியான சல்லியனை கொன்றதன் மூலம் 99 கௌரவர்களும் அழிந்து பாண்டவர்களின் சபதம் நிறைவேரும். இவை அனைத்துமே திரௌபதியின் சபத்ததாலே சாத்தியமாகும்.
இதைப் போலவே திரௌபதி என்ற தலைப்பிலே தமிழகத்தில் முதல் கூட்டுமுயற்சி படமாக இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கித்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று 2020 ஆண்டின் முதல் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இதுவரை தமிழ்சினிமாவில் காதலை எதிர்க்கும் பெற்றோர்களை வில்லன்கள் போலவும் அவர்களே காதலிக்கும் இளைஞர்களுக்கு எதிரிகளாகவும் சித்தரித்து தவறான கருத்தை இளைஞர்களிடம் விதைத்துவந்த நிலையில், திரௌபதி திரைப்படமானது இந்த தவறான கருத்தை உடைத்து எரிந்து தியேட்டர்களில் வசூலை அள்ளியதோடு மட்டுமல்லாமல் நீண்ட காலமாக குடும்பத்தோடு ஒரு படம் பார்க்கமாட்டோமா என்ற பல குடும்பங்களின் ஏக்கத்தை போக்கி குடும்பம் குடும்பமாக குறிப்பாக தங்களது பெண் பிள்ளைகளோடு பார்த்த ஒரு படமாகவும் அமைந்தது.
கொரோனோ வைரஸ் தொற்றை தடுக்க நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து தியேட்டர்களும் மூட உத்தரவிட்டுருந்தார். அதனையடுத்து தற்போது வரை வெற்றிகரமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை திரௌபதி திரைப்படம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் இவ்வாறான அறிவிப்பு பலரையும் சற்றே வருத்தப்பட செய்தது.
இது குறித்து திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: மாகாபாரதத்தில் வரும் திரௌபதி பதினெட்டுநாள் போரில் கயவர்களை அழித்தால். திரௌபதி திரைப்படம் வெளியாகி சரியாக பதினெட்டு நாள் கழித்து இவ்வாறான அறிவிப்பு வருவது என்பது உள்ளபடியே என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரௌபதி தான் வந்த வேலையை சரியாக பதினெட்டு நாட்களில் முடித்து விட்டாள் என்றே தோன்றுகிறது.
மேலும் தான் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பிக்க உள்ளாதால் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இனி கலந்துகொள்ள இயலாது என்றும், இந்த திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி என்றும் தெரிவித்திருந்தார