Monday, November 11, 2024
Home Blog Page 4921

பூவிற்கும் பெண்மணி வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்?

0

கர்நாடக மாநிலத்திலுள்ள ராகியம்மாள் என்ற பூவிற்கும் பெண்மணியின் வங்கி கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் ராகியம்மாள் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.30 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து உங்களுடைய கணக்கில் 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் எப்படி வந்தது என்றும் கேட்டுள்ளார்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் சேலை வாங்கியதாகவும் அந்த சேலைக்கு பரிசு விழுந்துள்ளது எனக்கூறி தங்களுடைய வங்கி கணக்கை ஒருவர் கேட்டு பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்

இதன் மூலம் அந்த பூ விற்கும் பெண்மணி வங்கி கணக்கை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வேறு சிலர் எடுக்க முயற்சித்ததையும் வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

0

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

தர்பார் படத்தின் நஷ்டம் குறித்து விளக்கம் அளிக்க ரஜினியைத் தொடர்பு கொள்ள முயன்று அது முடியாததால் இப்போது இயக்குனர் முருகதாஸை குறிவைத்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ரஜினியை அவர் வீட்டில் சந்தித்து நஷ்டம் சம்மந்தமாக விளக்கம் அளிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் ரஜினி அதற்கு சம்மதிக்காததால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன் பின் நட்புரீதியாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்தித்து முறையிட அவர்கள் முயல, அவரும் விநியோகஸ்தர்களை சந்திக்க மறுத்தார். அதோடு நில்லாமல் காவல்துறையில் புகார் அளித்தார். அங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றதும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாதுகாப்புக் கோரினார். இது விநியோகஸ்தர்களுக்குக் கடுமையான கோபத்தை வரவைக்கவே முருகதாஸுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் A R முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள்’ எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தர்பார் விவகாரம் இப்போது ரஜினியை விட்டு முருகதாஸ் பக்கம் திரும்பியுள்ளது.

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

0

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

விஜய் வீட்டில் கடந்த இரு தினங்களாக ரெய்டு நடந்து வரும் வேளையில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனையில் பல கோடு ரூபாய் கைப்பற்ற பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக பிகில் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்ல. வீட்டில் ரெய்டு நடப்பதால் விஜய்யின் செல்போன் மற்றும் வீட்டு தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதாலும் அவருடன் தொடர்பு கொள்ளாத  முடியாத நிலையிலும் அவர் எப்பொது திரும்ப ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனத் தெரியவில்லை. அதனால் படக்குழு மொத்தமும் படப்பிடிப்பை ரத்து செய்து செய்துவிடு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ரிலிஸ் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

0

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சில மர்ம நபர்கள் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியான இணையதளங்கள் ஆரம்பித்து அதன் மூலம் பக்தர்களை கவர்ந்து பணத்தை மோசடியாக பெற்று வருவதாக தெரிந்துள்ளது. இதனை சமீபத்தில் கண்டுபிடித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் மொத்தம் 19 போலி இணையதளங்கள் இருப்பதாகவும் அதனை அடையாளம் கண்டு பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரிசன டிக்கெட் நன்கொடை உட்பட அனைத்து வங்கி நடைமுறைகளை கீழ்க்கண்ட மூன்று இணையத்தளங்களை மட்டுமே பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த இணையதளங்கள் இவைதான்;

1.tirupatibalaji.ap.gov.in
2.ttdsevaonline.com
3.www.tirumala.org

டிரம்ப் பதவி தப்பியது: தேர்தலில் நிற்கவும் தடையில்லை

0

அமெரிக்க அதிபரு டிரம்புக்கு எதிராக தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவரது பதவி தப்பியதுடன் அவர் வரும் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது

டிரம்ப் பதவியை நீக்க செனட் சபையில் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் டிரம்புக்கு எதிராக நேற்று தீர்மானம் நடந்தது. மொத்தம் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 57 வாக்களும், அவருக்கு எதிராக 47 வாக்குகளும் கிடைத்தது இதனால் டிரம்பை பதவி நீக்கம் செய்ய செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது

இதனை அடுத்து டிரம்பின் பதவி தப்பியது. அதுமட்டுமின்றி வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடும் தடை இல்லை என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்திருக்கும் நிலையில் அவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது

தனுஷ் குறித்து என் உள்ளுணர்வு சொன்னது இதுதான்: பிரபல நடிகை பேட்டி

0

தனுஷ் இயக்கிய பா.பாண்டி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் இரண்டாவதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் அடுத்தடுத்து தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எப்போது அடுத்த படத்தை இயக்குவார் என்று தெரியவில்லை இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த அதிதி ராவ் கூறியதாவது:

‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார். இவ்வாறு அதிதிராவ் தெரிவித்தார்.

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

0

தமிழக முதல்வரை மிக அதிகமாக விமர்சனம் செய்தவர்களின் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் செய்த முதல்வரை இன்று சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவர் சீமான் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி கூறுவதற்காக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி குடியுரிமை சீர்திருத்த சட்ட விவகாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அவர் கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

எதிரும் புதிருமாக இருந்த தமிழக முதல்வர் மற்றும் சீமான் ஆகியோர் இன்று நேரில் சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வேலையைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்:ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள்!

0

வேலையைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்:ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள்!

திமுகவுக்கு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பணியாற்ற இருக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கம்பெனி தனது வேலையைத் தொடங்கியுள்ளது.

இந்திய அளவில் பெரிய அரசியல் உத்தி வகுப்பாளராக தேர்தல் கட்சிகளோடு இணைந்து பணியாற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர் பிரசாந்த் கிஷோர். இந்திய அரசியல் நடவடிக்கை குழு என்பதை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க தனது ஆலோசனைகளை கூறி வருகிறார்.

இவருடைய ஆலோசனைகளின் மூலம் 2014 ஆம் ஆண்டு பிஜேபி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். அதன் பின் நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல தரப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வெற்றிவாகை சூட வைத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்தகால அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கவனித்து, அந்த மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறி பல இடங்களில் வெற்றிக்கனியை பறிக்க பிரசாந்த் கிஷோர் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today
MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

இந்நிலையில் இப்போது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷொரின் இந்த ஐ பேக் நிறுவனம் தமிழகத்தில் திமுகவுக்காக வேலை செய்யவுள்ளது. இது சம்மந்தமான செய்தியை திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் திமுகவின் மேல் விமர்சனங்கள் எழுந்தாலும் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தத்தின் படி ஐபேக் நிறுவனம் தங்கள் வேலைகளை ஆரம்பித்துள்ளது.

தேர்தலில் உதவுவதற்காக ஆட்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்துள்ளது. இது சம்மந்தமாக தங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. ஆட்களை பொதுவானப் பணி மற்றும் குறிப்பிட்ட பணி என இரு பிரிவுகளில் ஆட்களை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் கட்சியில் உள்ளவர்களையும் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

50 ஆண்டுகளாக திமுகவை வழிநடத்திய கலைஞர் இல்லாமலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமலும் இருக்கும் திமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு இருப்பதால் தேர்தல் களம் அனல்பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் சினிமா கதைகளை நம்பும் பாலிவுட் இயக்குனர்கள்:அடுத்து பார்சலாகும் அஜித்தின் படம் !

0

தமிழ் சினிமா கதைகளை நம்பும் பாலிவுட் இயக்குனர்கள்:அடுத்து பார்சலாகும் அஜித்தின் படம் !

பாலிவுட் இயக்குனர்கள் சமீபகாலமாக தென்னிந்திய படங்களை அதிகமாக ரீமேக் செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியா போன்ற பல மொழிகள் கொண்ட ஒரு தேசத்தில் ஒரு மொழியில் வெற்றி பெறும் திரைப்படம் பிற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்தி சினிமா வழக்கத்தை விட அதிகளவில் தென் இந்திய படங்களை அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களை தங்கள் மொழியில் ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் வீரம் மற்றும் லாரன்ஸின் காஞ்சனா ஆகிய படத்தை அக்‌ஷய் குமார் ரீமேக் செய்து நடித்து வருகிறார். அமீர்கான் விக்ரம் வேதா படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இப்போது கைதி படத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோல வரிசையாக பாலிவுட் பார்வை கோலிவுட்டை தீண்டியுள்ள நிலையில் இப்போது அஜித்தின் மற்றொரு வெற்றி படமான வேதாளம் படத்தையும் ரீமேக் செய்ய உள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படம் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. 4 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அதற்கான உரிமையை தயாரிப்பாளர் பூஷன் குமார் கைப்பற்றியுள்ளார். அஜித் நடித்த கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்க ரோஹித் தவன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கோலிவுட்டிலேயே கதைப்பஞ்சம் உருவாகி கொரியன் படங்களைக் காப்பி அடிப்பதாக சொல்லும் வேளையில் பாலிவுட் தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருப்பது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

0

இந்திய அணி செய்யும் தொடர் தவறு: அபராதம் விதித்த ஐசிசி!

உரிய காலத்துக்குள் பந்து வீசாமல் இந்திய அணி இழுத்தடிப்பதால் ஐசிசி போட்டி ஊதியத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் (103) மற்றும் கே எல் ராகுல்(88) ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. இதனால் வெற்றி எளிது என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் வள்ளல்களாக மாறிய இந்திய பவுலர்களால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. நியுசிலாந்தின் ராஸ் டெய்லர் சதமடித்து வெற்றியை எளிதாக்கினார்.

இமாலய ஸ்கோர் எடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை என்ற சோகம் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய வீரர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் கிடைத்துள்ளது. உரிய நேரத்தில் இந்திய அணி பந்துவீசி முடிக்காததால் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 50 ஓவர்கள் வீசி முடிக்க வேண்டிய காலத்தில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியதால் இந்த அபராதம் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே டி 20 தொடரின் போது இந்திய அணி இதே போல தாமதமாக பந்து வீசியதற்காக எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அபராதத்தை செலுத்த இந்திய அணி கேப்டன் கோலி ஒத்துக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் தேவை இல்லை என ஐசிசி அறிவித்துள்ளது.