Thursday, November 14, 2024
Home Blog Page 4943

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்! பிரேமலதா விஜயகாந்த் சூளுரை..!!

0

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்! பிரேமலதா விஜயகாந்த் சூளுரை..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய விஜயகாந்த், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நான் உடல் நலம் தேறி மீண்டும் வருவேன் என்று தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.

இதையடுத்து, பேசிய பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், தற்போது தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதாகவும் அழுத்தமாக கூறினார். கேப்டன் எப்போதும் சொன்ன சொல்லை மாறாதவர் என்றும் துளசி வாசம் மாறினாலும் இந்த தவசி வாக்கு மாறமாட்டார் என்று படத்தின் வசனத்தை மேடையில் பேசி காண்பித்தார்.

மக்களிடம் எங்களுக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனியமாட்டோம், குட்டு வாங்கும் சாதி நாங்கள் இல்லை என்று காட்டமாக பேசினார். வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆட்சி அமைக்கும் என்றும் சூளுரைக்கும்படி பேசினார். இவரின் பேச்சு கூட்டணி கட்சிகளுக்கும் தேமுதிக விற்கும் இடையே பல சிக்கல் இருப்பது போல் அமைந்துள்ளது.

நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பது போல் அனைவரும் மதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தேமுதிக அதிமுக கூட்டணி தொடருமா அல்லது தனியாக பிரியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

உலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பது மட்டுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் உலகிற்கு ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை தொல்லியல்துறை விரைந்து வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பழந்தமிழர் நாகரிகத்தின் ஆதாரமாகத் திகழும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பது தான் அதுவாகும்.

மதுரையை அடுத்த கீழடியில் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் கீழடி தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. ஆனால், ஆதிச்சநல்லூர் நல்லூர் நாகரிகம் அதைவிட பழமையானதாகும். திருநெல்வேலியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரின் தொல்லியல் சிறப்பு உலகம் அறிந்ததாகும். அதனால் தான் 1868-ஆம் ஆண்டிலேயே அங்கு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1886-ஆம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த தொல்லியல் அறிஞர்களும், 1902-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் ரீ-யும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு செய்தனர்.

நிறைவாக 2004-05 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதுவரை மொத்தம் 4 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எகிப்திய பிரமிடுகளில் உள்ளதைவிட பழமையான புதைகுழிகள் ஆதிச்சநல்லூரில் உள்ளன என்று அலெக்சாண்டர் ரீ அறிவித்ததைத் தவிர, ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வுகள் மிகவும் விரிவாக அமைந்தன. ஆனால், அதன்பின் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் இந்த விவகாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் கடந்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கைகளை தொல்லியல் துறையின் வெளியீட்டுப் பிரிவு ஆய்வு செய்து, பின்னர் வெளியிடும். இந்த ஆய்வறிக்கை ஆதிச்சநல்லூர் பழந்தமிழர் நாகரிகம் குறித்த வியப்பூட்டும் உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருட்களை அமெரிக்காவில் ஃப்ளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி கரிம ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவற்றில் ஒரு பொருள் கி.மு. 905-ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும், இன்னொரு பொருள் கி.மு. 791-ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. வேறு சில ஆதாரங்களையும், சந்தர்ப்ப சாட்சியங்களையும் வைத்துப் பார்க்கும் போது ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3700 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கமும், 3500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று 2004-05 ஆம் ஆண்டில் ஆய்வு நடத்திய சத்தியமூர்த்தியும் தெரிவித்துள்னர். அதனால், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரிகம் தான் உலகின் பழமையான நாகரிகம் என்பது உறுதி செய்யப்படும்.

ஆதிச்சநல்லூர் நாகரிக காலத்தில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்களா? என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, மனித மூளையில் ஏற்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. உலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பது மட்டுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் உலகிற்கு ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை தொல்லியல்துறை விரைந்து வெளியிட வேண்டும்.

ஆதிச்சநல்லூரை ஒட்டிய தாமிரபரணியின் வடக்குப் பகுதியிலும், சிவகளை கிராமத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும், கட்டிடங்களும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்துவதற்கான பணிகளை தமிழக தொல்லியல் துறை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மட்டுமின்றி எச்.ஐ.விக்கும் மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவர்: பரபரப்பு தகவல்

0

கொரோனா மட்டுமின்றி எச்.ஐ.விக்கும் மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவர்: பரபரப்பு தகவல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது தாய்லாந்து மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் மற்றும் எச்.ஐ.வி ஆகிய இரண்டையும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவர் ஒருவர் எச்ஐவி மற்றும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களுக்கும் சேர்ந்து தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாகவும் இந்த மருந்தை வைரஸ் தாக்கிய நோயாளிக்கு கொடுத்ததில் அதன் பாதிப்பு பாதியாக குறைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற இரண்டுவகை மருந்தையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து அவர் நோயாளிக்குக் கொடுத்து வருவதாகவும் ஆனால் அந்த விகிதம் கொஞ்சம் மாறினாலும் நோயாளிக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்றும் எனவே சரியான விகிதத்தில் இந்த மருந்துஅளை கலந்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இருப்பினும் உலக சுகாதார மருத்துவ மருத்துவர்கள் இந்த மருந்து கொடுத்து ஆய்வு செய்து வருவதாகவும் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து அவர்கள் பரிசோதனைக்குப் பின்னரே தகவல் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் கொரோனா மற்றும் ஹெச்ஐவி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்தை கண்டுபிடித்த கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவருக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த பாராட்டுக்கள் நிலைத்து நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

0

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் நடித்த ஒரு திரைப்படம் தற்போது தூசி தட்டி எழுப்பப் பட்டுள்ளது. ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது

இந்த படத்தை 24am ஸ்டுடியோஸ் நிறுவனம் மட்டும் தயாரித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்பதும் இந்த டைட்டிலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அறிவிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பா.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்! பட்ஜெட் பேச்சால் எச்.ராஜா டென்சன்..!!

0

பா.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்! பட்ஜெட் பேச்சால் எச்.ராஜா டென்சன்..!!

நாடாளுமன்றத்தில் தாக்க செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறிய விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில் எச்.ராஜா விமர்சனம் வைத்துள்ளார். கோவை அருகே மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக தொண்டர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தனது கட்சி தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மேட்டுபாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது காங்கிரஸ் கட்சியை குறித்து விமர்சித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கொண்டு வந்த பட்ஜெட்டின் மூலம் நாட்டிற்கு ஏதேனும் நல்லது நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பிவிட்டு, பா.சிதம்பரம் ஒரு பொருளாதார அறிவு இல்லாதவர் என்று காட்டமாக விமர்சனம் வைத்தார். பட்ஜெட்டில் வருமானவரி குறைப்பை வரவேற்கிறேன் மற்ற நிதி ஒதுக்கீடுகள் வேஸ்ட் என்பது போல் பா.சிதம்பரம் பேட்டி அளித்திருந்தார். புதிய பட்ஜெட்டுக்கான மதிப்பெண் குறித்த கேள்விக்கு, ஒன்றில் இருந்து பூஜ்ஜியம் வரை என்ன மதிப்பு வருமோ அதை போட்டுக் கொள்ளுங்கள் என நக்கலாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பீதி:இருந்தாலும் குத்தாட்டம் போடும் இந்தியர்கள்!

0

கொரோனா வைரஸ் பீதி:இருந்தாலும் குத்தாட்டம் போடும் இந்தியர்கள்!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட சிலர் மருத்துவ முகாம்களில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அதேபோல இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்றும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் சீனாவில் இந்த 647 பேர் இரு விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தின் ஓடுபாதைக்கருகே அவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில் வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதல் சந்தேகம் உள்ளவர்கள் மனசேரியில் உள்ள மருத்துவ முகாம்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இருக்கும் சிலர் இப்போது இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொண்டு நடனம் ஆடி மகிழ்ச்சியாக இருப்பதற்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் அவர்களுக்காக பிராத்தனை செய்வதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் ஹீரோவாகவும் முதல் கிரிக்கெட் வீரர்

0

இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர் குறித்த படங்கள் வெளிவந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரரே ஹீரோவாக நடிக்கும் நிகழ்வு முதல்முறையாக நடந்துள்ளது. அதுவும் தமிழ் திரையுலகில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’ என்ற படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு சிறு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் இன்னொரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்பவர் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்பவர்கள் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு பிரண்ட்ஷிப் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து தமிழில் வழக்கம்போல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று ’பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம். அசத்துவோம்

இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்!

0

இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்!

இந்திய அணி நேற்று நியுசிலாந்தை வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ள நிலையில் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பையில் நியுசிலாந்திடம் அடைந்த தோல்விக்காக அந்த அணிக்கெதிரான தொடரை வெற்றி பெற்று இப்போது பழிதீர்த்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு வருடக்காலமாக கோலி தலைமையிலான அணி தான் கலந்துகொளும் எல்லா வகையான தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இந்திய அணி அந்நிய தொடரில் நடந்த ஒரு தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று தொடரை வொயிட்வாஷ் செய்வது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலும் 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணிலும் ஒயிட்வாஷ் செய்துள்ளது.

அதுபோல இந்திய அணியின் கேப்டன் கோலி தன் தலைமையில் அதிக அளவிலான இரு நாடுகளுக்கு இடையிலான டி 20 தொடரை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 10 தொடர்களை வென்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பாஃப் டு பிளஸ்சி இருக்கிறார்.

டி 20 போட்டிகளில் தனது மண்ணில் அதிக அளவிலான போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை நியுசிலாந்து அணி பெற்றுள்ளது. அந்த அணி தங்கள் மண்ணில் விளையாடிய 59 போட்டிகளில் தோற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்தியாவின் ஷிவம் துபே ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது டி 20 போட்டிகளில் மோசமான 2 ஆவது பந்துவீச்சாகும். இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டும் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவிற்கு எதிராக 36 ரன்களை விட்டுக்கொடுத்தது முதல் இடத்தில் உள்ளது.

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை!

0

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்:விருதை திருப்பிக்கொடுத்து சேரன் சர்ச்சை!

பிஹைண்ட்வுட்ஸ் என்ற சினிமா இணையதளம் தனக்கு அளித்த ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை நடிகர் சேரன் திருப்பி அளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு மற்றும் பாண்டவர் பூமி ஆகிய படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த சேரன் ஒரு கட்டத்தில் தன் படங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதில் ஆட்டோகிராஃப் மற்றும் தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் வெற்றி பெற்றாலும் மாயக்கண்ணாடி மற்றும் பொக்கிஷம் போன்ற படுதோல்வியை சந்தித்தன,

இதன் காரணமாக இயக்கத்தை விட்டு பிற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் நடிப்பிலும் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பல பிரச்சனைகளால் ரிலிஸாகாமல் நேரடியாக டிவிடிகளாக வெளியிடப்பட்டது. இதையடுத்து சேரன் பிக்பாஸ் 3 யில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்.

பிக்பாஸில் பல சர்ச்சைகளில் சிக்கி வெளியே வந்த அவருக்கு ஆன்லைன் சினிமா விமர்சன இணையதளமான பிஹைண்ட்வுட்ஸ் ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை வழங்கியது. அந்த விருதை சேரன் தனது திரையுலக  குருவான கே எஸ் ரவிக்குமார் கையால் பெற்றார்.

இந்நிலையில் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பற்றி பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் விமர்சனம் வெளியிடவில்லை. அதுபற்றி சேரன் கேட்டதற்கு அந்த படத்தை தங்கள் குழுவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சொல்லி இருக்கிறது. அதனால் அதிருப்தி அடைந்த சேரன் அந்த இணையதளம் தனக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்துள்ளார். மேலும் ‘தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை. விமர்சனம் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது.’ என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

மாணவர்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு: டெல்லியில் பரபரப்பு!

0

கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், மாணவர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவில் மீண்டும் மர்மநபர்கள் 2 பேர் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் இதுவரை மொத்தம் மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லையில் நேற்று நள்ளிரவு சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது