நினைத்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் பூண்டு ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

0
27
#image_title

நினைத்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் பூண்டு ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் இஞ்சி ஊறுகாய், மாங்கா ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று பூண்டு ஊறுகாய்.இந்த பூண்டு ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

பூண்டு – 1/4 கிலோ

வெந்தயம் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி

கடுகு – 1 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை – 2 கொத்து

புளி – ஒரு எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் – தேவையான அளவு

தூள் வெல்லம் – 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1) முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உறித்து வைத்துள்ள பூண்டை சேர்க்கவும்.நன்கு வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.பின் அதை ஆற விடவும்.

2) அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

3) அடுப்பில் கடாய் வைத்து அதில் வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆற விடவும்.அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

4) மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து அதில் 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரியும் வரை விடவும்.

5)பிறகு அதில் வெந்தயப்பொடி சேர்க்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை
சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.அதன் பின்னர் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

6)பிறகு அதில் மிளகாய் தூள் 3 தேக்கரண்டி சேர்த்து கிளறவும்.அதற்கு முன் ஒரு பாத்திரத்தில் புளி + தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.அந்த புளி தண்ணீரை கடாயில் சேர்த்து கிளறவும்.

7) பின்னர் உப்பு மற்றும் வெல்லத்தூள் சேர்த்து கிண்டவும்.எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை விட்டு பின் அடுப்பை அணைக்கவும்.