Monday, July 14, 2025
Home Blog Page 2

யாதும் அறியான் படத்தில் ரகசிய வேலை பார்த்த விஜய்.. 2026 யில் CM இவர் தான்!!

TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்து தனது கொள்கை எதிரி மதவாத எதிரி யார் என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போது நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் கூட ஒருபோதும் நாங்கள் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இவர் சினிமாவை விட்டு முழுமூச்சாக அரசியலில் இறங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிலும் இவரது கடைசி படமாக ஜனநாயகன் உள்ளது. இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியுள்ளார். ஆனால் இவரைப் போல் வேறு எந்த கட்சியினரும் கூட்டணிக்காக இந்த சலுக்கையை கொடுத்ததில்லை. இவரின் வருகையை பாராட்டி சினிமா பிரபலங்கள் பலரும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுத்துதான் வருகின்றனர்.

அந்த வகையில் செந்தூரா படத்தை எடுத்த இயக்குனர் தற்போது யாதும் அறியான் என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் 2024 மற்றும் 2026 யில் எடுக்கப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சி தான் தற்போது வைரலாகி உள்ளது. அதாவது 2026 யில் CM ஆக விஜய் இருப்பதாகவும், அதில் யாருக்கும் இனி இலவசம் என்பது கிடையாது எனக்கூறிய போஸ்டர் இடம்பெற்றுள்ளது. மேற்கொண்டு விவசாயிகளை முன்னிறுத்தி பல திட்டங்களை வைத்திருப்பது போலவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காட்சியானது படத்தின் ட்ரைலரில் வைத்துள்ளதால் பெருமளவு வைரலாகி வருகிறது. விஜய் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரியவைக்கவே இந்த போஸ்டர் என அவரது ஆதரவாளர்கள் கூறுவதோடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யின் மறைமுக உதவி இந்த படத்திற்கு இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

திமுக பக்கம் தாவும் ஜி கே மணி.. முக்கிய புள்ளியுடன் ரகசிய பேச்சு வார்த்தை!! கூட்டணிக்கு ரெடியான அன்புமணி!!

PMK: பாமக கட்சிக்கும் தலைமை பதவிக்கான மோதல் போக்கானது தற்போது வரை தீர்ந்தபாடில்லை. அப்பா மகன் இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டு, நான் தான் தலைவர் எனக் கூறி வருகின்றனர். ஆனால் பாமக கட்சியின் உண்மையான தலைவர் யார் என்று தெரியவில்லை. இந்த கட்சியை ஆரம்ப கட்டத்திலிருந்து தலை தூக்க பாடுபட்டவர் ராமதாஸ் தான். அதனால் அவர் தான் தலைவர் என்று பலரும் வழி மொழிகின்றனர். அவர் பார்த்து அமர்த்தியவர்தான் அன்புமணி, எப்படி இப்போது வந்தவர் தலைவராகிட முடியும் என்றும் கேட்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் கட்சி இரண்டாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. அதிலும் அன்புமணி கூறுவதாக, எனது அப்பாவுக்கு சில பேர் தங்களின் சுயநலத்துக்காக சொல்லிக் கொடுக்கின்றனர். அதேபோல திமுக தற்போது இவர் மீது கரிசனம் காட்டுகிறது. அவர் குழந்தை போன்றவர் என விமர்சனம் செய்திருந்தார். மேற்கொண்ட ஜிகே மணி தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ற பேச்சும் கட்சிக்குள் இருந்து வருகிறது. ஆனால் அவரோ, இருவரும் ஒன்று சேர வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சமீபத்தில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைப்பது ரீதியாக மும்முரம் காட்டி வருகிறார். இதற்கு காரணம் ஜிகே மணி தான் என கூறுகின்றனர். நாம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது பாஜகவுடன் கூட்டு வைத்து தான் தங்களுக்குறித்த பெயர் இல்லை. அதனால் மீண்டும் திமுக உடன் இணையலாம் என கூறுகிறாராம். மேற்கொண்டு திமுக முக்கிய அமைச்சர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறதாம். மற்றொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அன்புமணி விரும்புவதாக கூறப்படுகிறது.

தேமுதிக பாமக கூட்டணியை அடித்து தூக்கும் விஜய்.. இதில் நீல அணியுடன் மறைமுக டீலிங் வேற!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

TVK: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதிலும் திமுக மட்டும் தான் தனது பழைய கூட்டணியை அப்படியே வைத்துள்ளது. மேற்கொண்டு பாஜக பாமக அதிமுக என மாற்றுக் காட்சியினர் தற்போது வரை கூட்டணி குறித்து குழப்பத்தில் தான் உள்ளனர்.

இதில் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் அது சட்டமன்ற தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறி வருவதால் அதிமுக இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் இறுதிவரை கூட்டணி என்பது சற்று கடினம் தான் என கூறுகின்றனர். அதே சமயம் தேமுதிக பாமக இரு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாம்.

அதிமுகவுடன் தேமுதிக  கைகோர்த்திருந்த நிலையில் எம்பி சீட் வழங்காததால் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேசப்படவில்லை. இதனால் ஆட்சியில் பங்கு தரும் விஜய்யுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோலத் தான் பாமகவும்  விஜய்யுடன் சேர உள்ளதாம். முன்னதாகவே கட்சிக்குள் தலைமை பதவிக்கு சண்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ராமதாஸுக்கு அனைத்து அதிகாரமும் செல்லும் பட்சத்தில் அவர் விஜய்யுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி பல நாட்களாக ஸ்டாலினுடன் மன கசப்பிலிருக்கும் திருமா-வுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் உள்ளாராம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பாமக விசிக என அனைவருடனும் கூட்டணி வைத்து ஸ்டாலினை எதிர்க்க போவதாக கூறுகின்றனர்.

மருமகளுக்கு எதிராக மகள்.. முக்கிய பதவியில் அமரப்போகும் காந்திமதி!! அன்புமணிக்கு ராமதாஸ் வைக்கும் செக்!!

PMK: பாமக கட்சியைக்குள் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. இதில் தலைமை பொறுப்பில் தற்போது ராமதாஸ் இருந்தாலும் அதனை அன்புமணி இருக்கவில்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணி இருவரும் தனி தனி நிர்வாகிகளை அமர்த்தியும் அதனை மற்றொருவர் நீக்கியும் வருகின்றனர். இதனால் கட்சியில் உள்ள பொறுப்புகளுக்கு யார் தான் நிர்வாகி என்ற குழப்பம் எழுந்துள்ளது.

அதாவது ராமதாஸ் நிர்வகிக்கும் நிர்வாகி செயல்படுவாரா அல்லது அன்புமணி நியமனம் செய்யும் நிர்வாகி செயல்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் ராமதாஸ் நியமனம் செய்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அவரது மூத்த மகள் காந்திமதியும் கலந்து கொண்டார். இவ்வாறு அவர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வைத்து பொறுப்பு ஏதாவது வழங்கப் போகிறாரா என்று கேள்வியை செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ் கூறியதாவது, தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி மாநாட்டில் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்ததும் பெண்கள் தான். அந்த வகையில் காந்திமதிக்கு தற்போது வரை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறிவிட்டு, போகப்போக தெரியும் என்று பாடலை பாடினார். இதற்குப் பின்னால் கட்டாயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்பது தெரிகிறது.

அன்புமணியின் மனைவிக்கு எதிராக தனது மகளை களத்தில் இறக்க ராமதாஸ் தயார் செய்வதாகவும் வரப்போகும் தேர்தலில் இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டக்குபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விஜய் தேவராகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் போலீசாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியாக தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதன்மை குற்றப் பதிவேடு (FIR) அமைந்துள்ளது. சைபராபாத் காவல்துறை சார்பில் இது பதிவு செய்யப்பட்ட இந்த புகாரில் தொழிலதிபர் பாணிந்திரா சர்மா என்பவர் இந்த ஆன்லைன் சூதாட்டம் குறித்து புகார் அளித்தார்.

அவரது புகாரின்படி, இந்த சூதாட்ட பயன்பாடுகள் மூலம் பெரும் அளவில் பணம் பரிவர்த்தனையாகும். இதனால் மத்திய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் நிதிப் பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளன.

பிரபலங்கள் மூலம் சட்டவிரோத விளம்பரங்கள்?

இந்த பிரபலங்கள், சமூக ஊடகங்களில் இத்தகைய சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி, சட்டவிரோத சூதாட்டங்களை ஊக்குவித்து வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பிரபலமான இவர்கள், தனிப்பட்ட நலனுக்காகவே இத்தகைய செயலிகளுக்கு பணம் வாங்கி ஆதரவாக செயல்பட்டதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமே பிரதானக் காரணமா?

அமலாக்கத் துறை இந்த வழக்கை பணம் சம்பந்தமான மோசடிகளை தடுக்கும் சட்டமான (PMLA) Prevention of Money Laundering Act சட்டத்தின் கீழ் விசாரிக்கிறது. இந்நிலையில், ED தற்போது ECIR (Enforcement Case Information Report) பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

ED அடையாளம் காட்டிய 29 பிரபலங்கள் யார் யார்?

தெலுங்கு சினிமா, தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் பிரபலம் ஆகியவர்களின் பட்டியல்:

1. ராணா டக்குபதி

2. விஜய் தேவராகொண்டா

3. பிரகாஷ் ராஜ்

4. மஞ்சு லட்சுமி

5. பிரணிதா சுபாஷ்

6. நிதி அகர்வால்

7. அனன்யா நாகல்லா

8. சிரி ஹனுமாந்த்

9. ஸ்ரீமுகி

10. வர்ஷினி சௌந்தரராஜன்

11. வசந்தி கிருஷ்ணன்

12. ஷோபா ஷெட்டி

13. அம்ருதா சௌதரி

14. நயனி பவானி

15. நேஹா பாதான்16. பாண்டு

17. பத்மாவதி

18. இம்ரான் கான்

19. விஷ்ணு பிரியா

20. ஹர்ஷா சாய்

21. பையா சன்னி யாதவ்

22. ஷ்யாமளா

23. டேஸ்டி தேஜா

24. ரீது சௌதரி

25. பண்டாரு சேஷயனி சுப்ரீதா

மேலும், செயலியின் மேலாண்மை மற்றும் இயக்கத்தில் தொடர்புடையவர்கள்:

26. சூதாட்ட செயலியின் இயக்குனர்கள்

27. கிரண் கவுத்

28. அஜய், சன்னி, சுதீர் என்ற சமூக ஊடக பாதிப்பாளர்கள்

29. Local Boy Nani என்ற யூட்யூப் சேனல்

விசாரணை:

இந்நிலையில், இவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று ED தரப்பில் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, மஹாதேவ் செயலியைச் சுற்றியுள்ள பல்வேறு விசாரணைகளின் தொடர்ச்சியாகவே வரும்.

அரசியல், திரைப்படம், இணைய பிரபலங்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களை இந்த விசாரணை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கின் முடிவுகள் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம் 

அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர்.

விஜய்க்கு கூட்டம்:

சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது:

“ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். அவர் வருவதாக ஒரு செய்தி வந்தாலே கூட்டம் தானாகவே திரண்டு விடுகிறது. அரசியல் கட்சிகள் போல காசு கொடுத்து கூட்டம் திரட்ட வேண்டிய அவசியமில்லை.”

இந்தக் கருத்து, விஜய் தனது தனித்துவமான மக்கள் ஆதரவை ஏற்கனவே கட்டியெடுத்துவிட்டார் என்பதற்கு ஒரு உதாரணமாகும்.

குழந்தைகளால் உருவாகும் மாற்றம்!

குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை என்றாலும், அவர்கள் விரும்பும் நடிகரை பெற்றோர்கள் ஆதரிக்கிறார்கள் அல்லது ஆதரிக்க வேண்டும் என்பது இன்று அரசியல் வட்டாரத்தில் உண்மை நிலையாகிவிட்டது.

“விஜய் குழந்தைகளிடையே மிகவும் பிரபலம். அவர்களின் விருப்பத்தை மதித்து, பெற்றோர்கள் ஓட்டு போடுகிறார்கள். இதே மாதிரி 2021 தேர்தலில் ஸ்டாலினின் பாடலும், குழந்தைகளின் வாயிலாகவே பிரபலமடைந்து, வாக்குகளாக மாறியது” என்கிறார் தராசு ஷ்யாம்.

இது “விழிப்புணர்வு அரசியல்” என்ற புதிய வார்த்தைக்கான அடையாளமாகவும் அமைந்திருக்கிறது.

அ.தி.மு.க.-வை ஏன் விஜய் தாக்கவில்லை?

அ.தி.மு.க.-வின் அடிமட்ட வாக்காளர்களை கவரும் நோக்கத்தில் விஜய் நடந்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆதரவு மக்களையும், அ.தி.மு.க. தொண்டர்களையும் சிதைக்காமல், இயல்பாக அவர்களின் ஆதரவை பெறுவதற்காகவே விஜய், அ.தி.மு.க.-வை நேரடியாக விமர்சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

“அ.தி.மு.க.-வின் தொண்டர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பதால், அவர் அந்த வாக்குகளை இழக்க விரும்பவில்லை. அதனால் தான் அவர் அந்த கட்சியை தாக்காமல் இருக்கிறார்,” என்கிறார் அரசியல் ஆர்வலர்கள்.

தி.மு.க. மீது நேரடி தாக்குதல்: 

விஜய் தி.மு.க.-வின் மீது விமர்சனங்களை தொடர்ந்து கூறி வருவது, அந்த கட்சியின் எதிர்ப்பு மனப்பான்மையைக் கொண்டவர்களின் வாக்குகளை கைப்பற்றும் முயற்சி என்பதாகவே பார்க்கப்படுகிறது.

“தி.மு.க.-வுக்கு எதிராக இருக்கும் ஓட்டுகளை திரட்டும் நோக்கத்துடன் தான் விஜய் பேசுகிறார். இந்த ஓட்டுகள் அவரது வெற்றிக்காக முக்கியம்,” என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த தேர்தல் விஜய்க்கானதா?

முடிவாக, பலர் சொல்லும் பொதுக் கணிப்பு:

“விஜய் எந்த கட்சியின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என்பதே அரசியல் மதிப்பீடுகளில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என ஒட்டுமொத்த கட்சிகளின் வாக்குகளை அவர் சிறிது சிறிதாக பிரித்து, தனக்கான பெரும்பான்மையை உருவாக்க முயல்கிறார்.”

மௌன அரசியல்… தெளிவான நோக்கம்!

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஆகியோர் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்க, விஜய் மட்டும் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் இன்னும் நேரில் களமிறங்கவில்லை. இருப்பினும், செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள அவரது முழுமையான பிரச்சாரம், இரண்டு பெரிய திராவிட கட்சிகளையும் சவாலுக்கு உள்ளாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பையும், அ.தி.மு.க.-வின் ஆதரவையும் கையாளும் விஜய், அவரது அரசியல் பயணத்தை வெற்றி என்கிற இலக்கை நோக்கி ராஜதந்திரத்தோடு திட்டமிட்டு நடத்துகிறார் என்பது இதன் மூலமாக தெளிவாகியுள்ளது.

அவருடைய இந்த செயல்பாடுகள், வியூகம் என அனைத்தும் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்” என்பதையே உணர்த்துகிறது.

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல முழுமையாக இறங்குங்கள்”

ரோஜா கூறுவதாவது:

“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அது அவர்களது உரிமைதான். ஆனால் ஒருவரால் மக்கள் நம்பிக்கையை பெறவேண்டுமென்றால், முழுமையாக அரசியலுக்கே அர்ப்பணிக்க வேண்டும். திரையுலகத்தில் தொடர்ந்து இருந்து, டைம் பாஸ் அரசியல் செய்யக்கூடாது.” என அவர் கூறினார்:

மேலும் “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர். இவர்கள் திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் அதிலிருந்து முழுமையாக விலகி, மக்கள் சேவைக்காக முழு நேர அரசியலுக்கு வந்தவர்கள். அதனால்தான் இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.”

“சிரஞ்சீவி, பவன் கல்யாண் போல இருக்காதீர்கள்”

“சிரஞ்சீவி ஒரு கட்சி துவங்கினாரே தவிர, சில ஆண்டுகளில் அதை காங்கிரஸுடன் இணைத்து விட்டுவிட்டார். தொண்டர்களை பாதியில் விட்டுவிட்டார்.
பவன் கல்யாண் இன்னும் ஒரு உதாரணம் சினிமாவிலும் இருக்கிறார், அரசியலிலும் இருக்கிறார். தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா என்று சுற்றிக்கொண்டு இருக்கிறார். இது அரசியல் அல்ல, டைம்பாஸ்.”

“விஜய்க்கு என் நேரடி அறிவுரை”

இந்நிலையில், தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு வாய்ந்த நடிகராக உள்ள விஜய், “தமிழக வெற்றிக்கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதை நேரடியாகக் குறிப்பிட்டு, ரோஜா கூறுகிறார்:

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால் அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் மக்கள் நம்பிக்கையுடன், முழு நேர அரசியலுக்கு வரவேண்டும். மக்களுக்காக நன்மை செய்வதற்காக வரவேண்டும். அப்படி வந்தால் மக்கள் அவருக்கு உறுதியாக ஆதரவு கொடுப்பார்கள்.”

“ஜெகனின் கவனம் தமிழக அரசியலுக்கு இல்லை”

பவன் கல்யாண் தமிழ்நாட்டில் அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் கட்சி தமிழக அரசியலிலும் ஈடுபடுமா என்று கேட்டதற்கு, ரோஜா பதிலளித்துள்ளார்.

வாய் திறக்காமல் நாங்கள் வேலை செய்கிறோம். நாங்கள் ஆந்திர அரசியலையே நோக்கி செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் எங்கள் கட்சி பங்கேற்கவே இல்லை. பவன் கல்யாண் போல் டைம்பாஸ் அரசியல் செய்யவும் மாட்டோம். நாங்கள் மக்கள் நலனுக்காக மட்டுமே இருக்கிறோம்.”

நடிகர் விஜய்யை நேரிடையாக தாக்கும் ரோஜாவின் இந்த கருத்துகள், திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் மீது வைக்கப்படும் பொறுப்பை மீண்டும் ஒலிக்கச் செய்கின்றன. அரசியல் என்பது பொழுதுபோக்கிற்கான மேடையல்ல, அது ஒரு பொது பணிக்கான அர்ப்பணிப்பு. அதனை உணர்ந்தாலே, மக்கள் ஆதரவு தானாக வரும் என்பது அவருடைய கருத்தாக கருதப்படுகிறது.

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது.

பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள்

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் செலுத்தி பயணிக்கின்றன. ஆனால், மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுவட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளில் மட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.276 கோடி தொகை நிலுவையில் உள்ளது.

இந்த நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், சாலைகளின் பராமரிப்பு பாதிக்கப்படும், மற்றும் பயணிகள் பாதுகாப்பு கவலைக்கிடமாகும் என்கிற ஆவணங்களை கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

நீதிமன்றம் எடுத்த கடும் நிலைபாடு

இந்த வழக்கின் விசாரணை ஜூலை 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் வாதமிட்டபோது, “நிலுவைத் தொகை அதிகரித்து சாலைகளை பராமரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; வாகனங்கள் பழுதடைவதற்கும் காரணம் இதுதான்” என்று வலியுறுத்தினர்.

இதனை ஏற்ற நீதிபதி கூறியதாவது:

“நிலுவைத் தொகை ரூ.300 கோடியைத் தாண்டி, விரைவில் ரூ.400 கோடி ஆகும் அபாயம் உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் இதனை தாராளமாக ஏற்கின்றனர். இது மிகவும் வருத்தத்துக்கிடமானது. ஆகவே, இந்த நிலைமை தொடரக்கூடாது.”

சட்டப்படி செயல்படும் தீர்மானம்

நீதிமன்றம், அரசுப் பேருந்துகள், மேலே குறிப்பிடப்பட்ட நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10 முதல் இயக்கப்படக்கூடாது எனத் தடைவிதித்துள்ளது. மேலும், இப்பாதையில் எந்தவித பதற்றமும், பரபரப்பும் ஏற்படாமல் இருக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காவல் துறை தலைமை உத்தரவிட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

பயணிகளுக்கு காத்திருக்கும் சிரமம்

இந்த தீர்ப்பு பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய பொதுமக்கள், அரசு பேருந்துகளே மிகவும் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் நிலையில், இந்த தடை அவர்களது தினசரி வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

போக்குவரத்துக் கழகம் இந்த நிலுவைத் தொகையை விரைவாக திருப்பி செலுத்தி, பேருந்துகளின் இயல்பு நிலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமா? அல்லது இந்த வழக்கு அரசியல் சர்ச்சைக்குத் தள்ளப்படுமா என்பது தொடரும் கேள்வி.

ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் மருமகள் சௌமியா, மற்றொருவர் மகள் ஸ்ரீகாந்திமதி உள்ளனர்

மருமகளா? மகளா? 

அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதிக்கு மேடையேற அனுமதித்தது, கட்சிக்குள் புதிய அதிகார அமைப்பை உருவாக்கும் முயற்சி என்று சிலர் கருதுகின்றனர். இது சாமர்த்தியமாக கட்சிக்குள் சௌமியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் கூறப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக பாமகவின் முக்கிய ஆலோசகராக திகழ்ந்துவரும் சௌமியா, கடந்த சில வருடங்களாக மாநிலச் செயலாளர்களுக்குப் பயிற்சி வழங்குவது முதல், கூட்டங்கள் நடத்துவது வரை தன்னை அதிகார மையமாக நிரூபித்து வந்த நிலையில், இப்போது ராமதாஸ் பக்கம் இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக தெரிகிறது.

அன்புமணி நிலை… டெல்லியின் அட்வைஸ்

இது கட்சி செயல்பாடுகளில் தந்தையும் மகனும் நேரடியாக மோதுகிறதைக் காட்டுகிறது. கட்சியில் தற்போது மையமாக இருப்பவர் அன்புமணி என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் ராமதாஸ் மறைமுகமாக அவரின் நடத்தை குறித்து அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார். இந்நிலையில், சௌமியா அன்புமணியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார் என்ற விமர்சனமும் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பாஜகவின் அரசியல் ஆலோசகர் அன்புமணியிடம், “ராமதாஸ் மீது நேரடி எதிர்ப்பு காட்ட வேண்டாம். ஆட்டத்தை கவனமாக ஆடுங்கள். பாமகவின் மதிப்பையும், கூட்டணியின் சூழ்நிலையையும் காப்பாற்றுங்கள்,” என அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்குழுவில் மாற்றம் 

செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திமதியின் மேடையேறும் தருணம், வருங்கால அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. கட்சி கட்டமைப்பில் இனி புதிய மாற்றங்கள், பொறுப்பளிப்பு, முக்கியமான நியமனங்கள் எல்லாம் நடக்கும் என்பதற்கே இது அடையாளம்.

குடும்ப பிரச்சனையிலிருந்து பாமக தப்பிக்குமா?

ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைவர்கள் இருந்தாலும், கட்சி முழுமையாக ஒரு நபரால் நிர்வகிக்கப்படக் கூடாது என்பதே சில உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் தற்போது பாமக – குடும்ப அரசியலின் ஒரு களமாக மாறியிருக்கிறது என்பது உண்மை. இந்த அதிகார யுத்தம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறதா? இல்லை இதிலிருந்து பாமக தப்பிக்குமா என அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை

சென்னை: “அம்மா எனக்கு தம்பி என்று வாழ்த்து தெரிவித்தவர். அதை அ.தி.மு.க. தலைவர்கள் தெரிந்திருப்பார்கள்; இப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அதை மறந்தது ஏன் என்று புரியவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீப நாட்களில் நடந்த அரசியல் விவகாரங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஜெயலலிதா எனக்கு ‘தம்பி வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, எனது அரசியல் பயணம், அ.தி.மு.க.வுடன் இருந்த உறவு ஆகியவை அனைவருக்கும் தெரிந்ததே,” என்று அவர் நினைவுபடுத்தினார்.

அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவு

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திருமாவளவன், “இது என் விருப்பம் அல்ல. நான் கூறியது, பா.ஜ.க.வுடன் உறவு நிலைக்கவில்லை என்பதைக் காட்டும் கருத்தை அ.தி.மு.க.வின் அன்வர் ராஜா சொன்னதாக கூறியதற்கே பதிலளித்தேன்,” என்றார்.

பா.ஜ.க. மீது கவலை

“பா.ஜ.க.வின் சமூக மற்றும் மத அடிப்படையிலான பிளவு அரசியலால், தமிழகம் பாதிக்கப்படக்கூடாது என்பதே என் ஒரே எண்ணம். இது என்னை பாதிக்கும் என்பதற்கான பயம் இல்லை. தமிழர்களின் ஒற்றுமை உடையும் என்பதற்கான கவலையே,” என அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் பங்கு

“தமிழகத்தில் அ.தி.மு.க. ஒரு வலுவான எதிர்கட்சியாக இருந்து, பா.ஜ.க.வின் தீய நோக்கங்களை கட்டுப்படுத்த வேண்டிய கடமை உள்ளது. ஆனால் அதற்கு மாறாக அவர்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் அரசியலுக்குள் இழுக்கப்படக் கூடாது,” என்றும் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தார்.

“ஜெயலலிதா என்னை ‘தம்பி’ என்று மரியாதையுடன் அழைத்தவர். எனவே, நான் யார் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் நன்கு அறிவார்கள். அதை எடப்பாடி பழனிசாமி அறியாமல் இருப்பது எனக்கு புரியவில்லை அதனால் கவலையும் இல்லை. ஆனால் பா.ஜ.க.வின் பாதிப்பு குறித்து அவர் கவலைப்படாமல் இருப்பதுதான் உண்மையான கவலையாக இருக்கிறது,” என திருமாவளவன் தனது கருத்தை தெளிவுபடுத்தினார்.