ரேஷன் பாமாயில் எண்ணெயில் உள்ள பித்தத்தை முறிக்க சூப்பர் டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!

0
66
#image_title

ரேஷன் பாமாயில் எண்ணெயில் உள்ள பித்தத்தை முறிக்க சூப்பர் டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வரும் பாமாயிலை நம்மில் ஒரு சிலர் பயன் படுத்துவதில்லை.ஆனால் பெரும்பாலானோர் இந்த எண்ணெயில் அப்பளம்,வடை இது போன்ற பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் அதிகளவு பித்தம் காணப்படுவதால் பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்த பித்தம் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவானதால் தலைச்சுற்றல்,மயக்கம் போன்ற பிரச்சனைகள் வருவதாக பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம்.
இந்நிலையில் இந்த பாமாயில் எண்ணெயில் உள்ள பித்தத்தை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் போக்கி விட முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

பாமாயிலில் சுத்தம் செய்வது எப்படி?

1.முதலில் மிதமான தீயில் இரும்பு கடாயை ஒன்றை வைத்து அதில் பாமாயில் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

2.எண்ணெய் சூடாகும் நேரத்தில் கொட்டை இல்லாத புளி,கல் உப்பு ஆகியவை இரண்டையும் ஒன்று சேர்த்து உருட்டி வடை தட்டுவதை போல் தட்டி சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் போட வேண்டும்.

3.அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சிறு துண்டு இஞ்சியை அந்த எண்ணெயில் போட வேண்டும்.

4.பின்னர் அந்த எண்ணெய்யை 8 முதல் 10 நிமிடங்களை வரை கொதிக்கவிடவும்.

5.புளி மற்றும் இஞ்சி ஈரத்தன்மை கொண்டது என்பதால் எண்ணெயில் தொடர்ந்து பொறிந்து கொண்டே இருக்கும்.

6.பிறகு அதன் சலசலப்பு அடங்கியதும் அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிட வேண்டும்.

7.அந்த எண்ணெயில் உள்ள புளி மற்றும் இஞ்சி துண்டுகளை நீக்கி விட்டு ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

பாமாயில் எண்ணெயை இப்படி செய்து பயன்படுத்துவதால் அதில் இருக்கின்ற பித்தம் முழுமையாக நீங்கி விடும்.இந்த பாமாயிலில் நிறைய ஊட்டச்சத்துகள் மற்றும் விட்டமின் ஏ நிறைந்து இருக்கின்றது.இது மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.அது மட்டுமில்லாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.