இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!!

0
56
#image_title

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!!

முகத்தில் உள்ள கருமை,கொப்பளங்கள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாகவும் மாற இந்த சோப்பை செய்து யூஸ் பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி – 1 கப்
2)கற்றாழை ஜெல் – 1 கப்
3)சோப் பேஸ் – 1 துண்டு

செய்முறை:-

ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு ஒரு துண்டு பப்பாளியை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளவும்.அதில் கற்றாழை ஜெல்லை போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.பிறகு பப்பாளி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் பப்பாளி சாறு மற்றும் கற்றாழை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு துண்டு சோப் பேஸ் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

அதன் பிறகு அரைத்த கற்றாழை + பப்பாளி சாற்றை சேர்த்து சில நிமிடங்களுக்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

இந்த சோப் கலவையை ஒரு சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு செட் ஆக விடவும்.இந்த சோப்பை மேனிக்கு பயன்படுத்தி வந்தால் மேனி வெள்ளையாகும்.