1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

Date:

Share post:

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் எனக் கூறியதும் தனியார் பேருந்துகளின் வருமானம் ஆனது சற்று குறைய தொடங்கியது. இதனை மீட்க தனியார் பேருந்துகள் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்பொழுது க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதியை தனியார் பேருந்து ஒன்று கொண்டு வந்துள்ளது.

இந்த பேருந்தானது கோவை மாநகரத்தில் இயங்குகிறது. இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இந்த பேருந்தில் உள்ளது போல வசதி இல்லை. நமது தமிழகத்தில் அதிலும் கோவையில் தான் இது முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை காட்டிலும் தனியார் பேருந்துகள் பல விதங்களில் சிறப்பாக செயல்படுகின்றது என்றே கூறலாம்.

ஏனென்றால் பெண்களுக்கு இலவச பயணம் என்று கூறியதும் பல ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் நடத்தைகள் எதுவும் மரியாதையானதாக இல்லை.எனவே தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே தான் இருந்தது. இதனையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் மக்கள் மீண்டும் தனியார் பேருந்தை நாடி சென்றனர். அந்த வகையில் பயணிகளுக்கு ஏற்ப எந்த இடத்தில் வேண்டுமானாலும் நின்று அவர்களை ஏற்றி செல்லும் முறையை கொண்டு வந்தனர்.

தற்பொழுது கோவை மாநகரத்தில் முதல்முறையாக டிக்கெட் வாங்கிக் கொண்டு கியூ ஆர் கோட் மூலம் ஸ்கேனிங் செய்யும் வசதியை அமல்படுத்தியுள்ளனர்.இது பெருமளவில் வரவேற்கப்பட்டுள்ளது. பெரிய மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றில் இருந்த இந்த டிஜிட்டல் முறை கடைக்கோடி எங்கும் தற்பொழுது பரவியுள்ளது.

அந்த வகையில் பெட்டி கடை முதல் சிறு தள்ளுவண்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது.இது அனைத்தும் தாண்டி தற்பொழுது  பேருந்திலும் கொண்டு வந்துள்ளனர். நாளடைவில் இதனை அரசு பேருந்துகளிலும் அமல்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அரசு பேருந்துகளில் அமல்படுத்தவில்லை என்றாலும் இதர தனியார் பேருந்துகள் இதனை பார்த்து கூடிய விரைவில் தங்கள் பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...