ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5, 2025
Home Blog Page 5656

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

0

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்திருந்தார். இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் இரும்பு ஆலை, அலுமினியல் உருக்காலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டங்களுக்கு எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பு வேளாண்மண்டல சட்ட மசோதா நிறைவேற்றத்தால் தமிழக காவிரி டெல்டா விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன் மேலும், நல்ல விளைச்சல் கிடைக்கபோவதும் மற்றும் விவசாயிகளின் எதிர்கால வாழ்வாதாரம் உயரப்போவதும் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களின்விவசாய நிலப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தொழில் நகரமான சில இடங்களை தமிழக அரசு
சிறப்பு வேளாண் மண்டல பகுதியாக அறிவிக்கவில்லை. இதை, டெல்டா பகுதிகளில் சில இடங்களை சேர்க்காமல் இருப்பதாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விகேட்டதும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !

0

த்ரிஷா தன் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும்: தயாரிப்பாளர் ஜி சிவா ஆதங்கம் !

த்ரிஷா, அவர் நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளாவிட்டால் சம்பளத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கோலிவுட்டில் அதிகமாக உருவாகியுள்ளன. அந்த வகையில் உருவாகும் கதைகளை வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் நேராகப் போவது ரசிகர்களுக்கு பரிச்சயமுள்ள கதாநாயகிகளிடம்தான். ஏனென்றால் கதாநாயகி மையப்படுத்திய கதை என்றால் அது எப்போதும் ரிஸ்க்தன். அதனால் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக இருந்தால் அவர்களை வைத்து படத்துக்கு புரோமோஷன் செய்ய முடியும் என்பதால்தான்.

அப்படிதான் புது முக இயக்குனரான திருஞானம் என்பவர் த்ரிஷாவை வைத்து பரமபதம் விளையாட்டு எனும் படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு இன்று அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகையர் அனைவரும்  கலந்து கொண்டனர். ஆனால் கதாநாயகியான த்ரிஷா மட்டும் வரவில்லை. இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விழாவுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் ஜி சிவா பேசும் போது ‘தயாரிப்பாளர் திருஞானம் எனது நீண்டகால நண்பர். அவர் இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படத்திலேயே போட்ட காசை திரும்ப எடுக்க முடியவில்லைஇந்த படத்தை திரிஷாவால் மட்டும்தான் ப்ரமோட் பண்ண முடியும். அவரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாகவும் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களாகவும இருக்கின்றனர். இன்றைய விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாததற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். அடுத்த வாரம் படத்தின் ரிலீஸின் போது அவர் கண்டிப்பாக இந்த படத்திற்கு விளம்பரம் செய்து தர வேண்டும். அப்படி இல்லையென்றால் திரிஷா தான் வாங்கிய சம்பளத்தில் பாதியை கொடுக்க வேண்டும். மேலும் தயாரிப்பாளர்கள் நடிகர், நடிகையர்களிடம் ஒப்பந்தம் போடும்போதே விளம்பரப் பணிகளையும் சேர்த்து ஒப்பந்தம்ச் செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

0

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தர இருப்பதால் இந்தியாவின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஆக்ரா மற்றும் குஜராத் சபர்மதி ஆசிரமம் போன்ற பகுதிகளை டிரம்ப் பார்வையிட இருக்கிறார்.

அதிபர் டிரம்ப்பை பிரம்மாண்டமாக வரவேற்க 1 லட்சத்திற்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று வரவேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குஜராத் பகுதியில் குடிசைகளாக உள்ள இடங்களை மறைக்கும் விதமாக 7 அடி உயரம் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர்.

சுவர் எழுப்பிய சம்பவம் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளன. டிசிட்டல் இந்தியாவில் இப்படித்தான் சுவர் எழுப்பி மறைப்பதா என்று சமூக வலைதளங்களிலும் விமர்சனம் தொடர்ந்து வருகிறது. குடிசைகளை மறைக்க அவசர அவசரமாக சுவர் எழுப்புவது நாட்டில் உள்ள ஏழ்மை நிலையை மறைப்பதற்குத்தான் என்று சீமான் பேசியுள்ளார். மேலும் இந்த சுவர்களை கட்டும் செங்கற்களை வைத்து அந்த ஏழைகளுக்கான வீடுகளையே கட்டித்தரலாம் என்று ஆலோசனை தரும் வகையில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: ரஜினிகாந்த் கோரிக்கை மனு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் கமிஷன், ரஜினிகாந்தை நேரில் அழைத்து விசாரணை செய்ய சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார் என்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விரைவில் விசாரணை கமிஷன் முடிவெடுக்கும் என தெரிகிறது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது என்று கூறினார்.

சமூக விரோதிகள் என்று யாரை ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என்பதை அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் எழுப்பிய கோரிக்கைகளை அடுத்தே விசாரணை கமிஷன் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’இந்தியன் 2’ விபத்து குறித்து சிம்புவின் சாட்டையடி அறிக்கை!

0

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் ட2’ படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இந்த விபத்தில் இருந்து கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிம்பு இதுகுறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கமா? அதிர்ச்சி தகவல்

0

விஷால், பிரசன்னா நடித்து வந்த துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார்

இந்த நிலையில் மேற்கொண்டு இந்த படத்தை முடிக்க ரூபாய் 40 கோடி தேவை என விஷாலிடம் மிஷ்கின் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால், துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து மிஷ்கினை விலக்கிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் விஷாலே இயக்கி இந்த படத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஷால் தற்போது ‘சக்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் இயக்குனர் பணியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

0

சதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் முடிவில் நியுசி 216 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணயில் மயங்க் அகர்வால் (34), ரஹானே (46) மற்றும் முகமது ஷமி (21) ஆகியோரைத் தவிர அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இன்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், ஷமி மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!

0

தமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!

உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மையானது நம் தாய்மொழி தமிழ். எந்த தகவலையும் அறியவும், தெரியவும், புரியவும், உணரவும், ஆராயவும் முதன்மையாக இருப்பது மொழிகள்தான். அதிலும் நம் தமிழ்மொழி தனித்துவமான ஒன்றாகும்.

மொழி என்பது பேச்சாக உள்ளுறைந்து நம் வாழ்வின் வரலாற்று வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு இனத்தின் நாகரிகத்தை அவ்வினத்தின் மொழியே முதன்மையாக வெளிப்படுத்தும். பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி, தாயிடம் இருந்து கற்பதானலே இதற்கு தாய்மொழி எனப் பெயர் வந்துள்ளது. தகுதி உள்ளதே தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு மனிதனும் தப்பிப் பிழைக்க காரணம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை நவீனப்படுத்தி தற்காத்துக் கொள்வதுதான் காரணமாகும்.

சங்க இலக்கண இலக்கியத்தில் தமிழ் உண்டு, வரலாற்று கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் தமிழ் உண்டு. தற்போதைய நவீன ஆங்கில மோக கலாச்சாரத்தில் பெருமளவு தமிழ் பற்று குறைந்துவிட்டது. தாய்மொழியின் அருமை, பெருமைகளை நேசிக்காமல், அறியாமல் போனதன் விளைவே அயலார் மொழியை அடுத்த சந்ததி க்கும் கடத்துகிறார்கள் இந்நிலை மாற வேண்டும், மாற்றம் வேண்டும்.

இனி தமிழ்மொழி :

  • தாய்மொழியாம் தமிழை கற்காமலேயே கல்வி கற்கலாம் என்ற நிலை மாற வேண்டும்.
  • கல்விக் கூடத்தில் மட்டும் அல்லாமல் பண்பாடு, கள ஆய்வுகள், அலுவல் பணிகளிலும் தமிழ்தான் ஆள வேண்டும்.
  • கற்பது , தேர்வு எழுதுவது போன்றவை மட்டுமல்லாமல், மாணவர்களை படைப்பாளியாக மாற்றும் வழிகளிலும் நவீன முறையில் பாடத்திட்டங்கள் அமைத்திடல் வேண்டும்.
  • பல்கலைக் கழகங்களில் கதை, உரைநடை , சிறுகதை, புதினம் போன்றவற்றிற்கு தனித்துறைகள் உருவாக்கப்பட்டு நவீன கோட்பாட்டின்படி ஆய்வுமுறைகள் பயனுள்ளதாக நிகழ்த்த வேண்டும்.

தமிழ்மொழி பற்று பெரியவர்களிடம் மட்டுமல்ல சிறுவயது முதலே தமிழை நேசிக்கும் வகையில் மாறியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. படத்தில் இருக்கும் சிறுவனின் தலையில் தமிழ் மொழியின் உயிரெழுத்தான “அ” என்ற முதல் எழுத்தை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து தலையை வெவ்வேறு வித விதமாக இளைஞர்கள் வெட்டிக் கொள்வது இயல்புதான் என்றாலும். தமிழ்மொழியை அடையாளப்படுத்தும் இச்சிறுவனின் மொழிப்பற்று பாராட்டத்தக்கதே.

பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

0

பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

குஜராத் மாநிலம் சூரத்தில் முனிசிபல் கார்பரேஷனில் வேலை செய்யும் கிளார்க் பெண்களை நிர்வாணமாக நிறுத்தி அவர்களுக்குக் கருத்தரிப்பு சோதனை நடத்தியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

கடந்த வாரம் குஜராத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 68 மாணவிகளின் உள்ளாடையை கழட்டி மாதவிடாய் இருக்கிறதா என சோதனை செய்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த செய்திகள் பரபரப்பாக வெளிவந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முதல்கட்டமாக இந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இருவரும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சர்ச்சை முடிவதற்குள் இப்போது  இதேப் போன்ற புது சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. அதுவும் அதே குஜராத்தில் இருந்தே.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரத்தின் முனிசிபல் கார்பரேஷனில் வேலை பார்க்கும் 10 க்கும் மேற்பட்ட பெண் கிளார்க்குகளை அவர்களின் பயிற்சிக் காலம் முடிந்ததும் நிர்வாணமாக நிற்கவைத்து அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்ற சோதனையை செய்துள்ளனர். இதில் மேலும் கொடுமை என்னவென்றால் திருமணமாகவில்லை என்று சொன்ன பெண்களையும் இந்த சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த சூரத் ஆணையர் பன்ச்சாநிதிபானி உத்தரவிட்டுள்ளார். 

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

0

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

தூத்துக்குடியை சேர்ந்த சாம்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் சரவணன் ஆகியோர் அவரின் பைக்கை திருடியது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

​இதில் கைதான் சந்தோஷ்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமுற்று சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் பார்க்க சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து ‘நீங்கள் யார்?’ என கேள்வி கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ரஜினிகாந்த் ‘நான் தாம்ப்பா ரஜினிகாந்த்’ என்று பதிலளித்தார்.

தற்போது அவர் ஒரு பைக் திருடன் என்பது தெரிய வந்ததும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அவரை ‘நான் தாம்ப்பா பைக் திருடன்’ என்று வறுத்து எடுக்கின்றனர். அன்று ரஜினியை கேள்வி கேட்ட சந்தோஷை போராளி போல் காசுக்கு மாறடிக்கும் கூட்டம் ஆதரித்தது. நல்லவங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள், ஆனால் கொஞ்சம் நாள் ஆகும் என்பதுதான் இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வரும் நீதி ஆகும்