“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து!

“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து! இந்திய அணிக்கு இப்போது பல இளம் கேப்டன்கள் கிடைத்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் பதவியை சமீபத்தில் விராட் கோலி ராஜினாமா செய்ததை அடுத்து மூன்று பார்மட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரோஹித் ஷர்மா. அதுமட்டும் இல்லாமல் ரிஷப் பண்ட், கே எல் ராகுல்,  ஹர்திக் பாண்ட்யா, பூம்ரா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர் என பல இளம் வீரர்கள் கேப்டன் தகுதிகளோடு வளர்ந்து வருகின்றனர். … Read more

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி!

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி! நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து … Read more

சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்!

சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்! நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ். அவரின் ‘இன்று போய் நாளை வா’ தாவனிக்கனவுகள், முந்தானை முடிச்சு போன்ற படங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களாக உள்ளன. ஆனால் 90 களுக்குப் பிறகு அவரின் படங்கள் ரசிகர்கள் … Read more

பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தில் பிருத்விராஜ் & நயன்தாரா – வெளியான ரிலீஸ் தேதி

பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தில் பிருத்விராஜ் & நயன்தாரா – வெளியான ரிலீஸ் தேதி நேரம் பிரேமம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள அல்போன்ஸ் புத்ரன் அடுத்து கோல்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். மலையாளத்தில் இந்த படத்தின் வெற்றியை … Read more

முதல் பாகத்தோடு சந்திரமுகி 2 படத்துக்கு இருக்கும் தொடர்பு… வடிவேலு கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்

முதல் பாகத்தோடு சந்திரமுகி 2 படத்துக்கு இருக்கும் தொடர்பு… வடிவேலு கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா … Read more

ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… எப்போது?

ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… எப்போது? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

இளையராஜா மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவாரா? 

    இளையராஜா மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவாரா?     கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘விருமான்’ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த முன்னணி ஜோடி தற்போது விளம்பரப் பயணத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களாக மதுரை, மலேசியா, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.விருமன் படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து முத்தையா இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் … Read more

“யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்…” பாலிவுட் நடிகர் அமீர்கான்

“யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்…” பாலிவுட் நடிகர் அமீர்கான் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் … Read more

கெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்!

கெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்! தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். நடிகர் தன்ஷ், தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் வில்லனாக நடித்தார் தனுஷ். … Read more

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி

விஜய்க்கு வில்லனாகப் போகும் ஆக்‌ஷன் கிங்… லோகேஷ் படத்தில் இணையும் மெகா கூட்டணி பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் … Read more