வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!

வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. இந்த லாக்டவுன் நாட்களில் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதால் பலரும் வீடுகளிலேயே வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சிகளை செய்து வந்தனர். அதை உடற்பயிற்சி நிலையங்கள் திறந்த பின்னரும் பின்பற்றி வருகின்றனர். அப்படி வீட்டில் செய்வோர் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்னென்ன பார்க்கலாம். வார்ம் அப் : உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்வது … Read more

சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

சேலம் அஸ்தம்பட்டி உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அதிமுக கட்சி மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மகள் சர்மிளா படிப்பு முடித்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முரளி கிருஷ்ணன் ஷர்மிளா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.மேலும் ஷர்மிளா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முரளி கிருஷ்ணன் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியது. இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் வேறு ஒரு நபருடன் … Read more

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த அரசியல் தலைவர் குணமடைந்து வீடு திரும்பினார்!

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குணமடைந்து வீடு திரும்பினார். சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 94). தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையான ஒரு தலைவர் என்றால் அது இவர் தான். இவருக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் கடந்த 21 ஆம் தேதி அன்று சென்னை ராஜிவ் காந்தி … Read more

பங்குச்சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்ற பங்குகள்!!

பங்குச்சந்தையில் 106 பங்குகளில் 17 பங்குகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இதுவரை முதலீட்டாளர்களின் செல்வத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வைத்துள்ளது. அந்தப் பங்குகளில் கிரானுல்ஸ் இந்தியா,  டிக்சன் டெக்னாலஜிஸ்,  அதானி கிரீன்,லாரஸ் லேப், ஆர்த்தி டிரக்ஸ், மற்றும் ஐஓஎன் கெமிக்கல்ஸ் ஆகியவையும் இந்த இரட்டிப்பு லாபம் கிடைத்த பங்குகளில் அடங்கும். இதே போன்று இன்னும் சில நிறுவனங்களும் நல்ல வணிக வாய்ப்புக்கு இந்த கொரோனா தொற்று பரவல் மூலமாக அதிக வரவேற்ப்பை பெற்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

6.1 வினாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் BMW புது ரக கார் அறிமுகம்!!

கார் நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழும் BMW கார் நிறுவனம் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக இந்த நிறுவனம்  தற்போது புது ரகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. BMW நிறுவனம் புதிதாக “3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ” காரை  அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ.42.5 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த காரின்  சிறப்பம்சம் என்னவென்றால்,  கூபே வடிவமைப்புடன் விசாலமான உள் வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் செயல்திறன் ஆனது உயர்தர செயல்திறனை … Read more

அதிரடி முடிவை வெளியிட்ட SBI வங்கி!! 

எஸ்பிஐ தற்போது நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ.8,931 கோடியை திரட்டும் வகையில் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வெளியே அறிக்கை  கூறியதாவது: முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை நடத்துவதற்காக எஸ்பிஐ-இன் இயக்குனர்கள் கூட்டமானது அண்மையில் நடத்தப்பட்டது. அதில் 89,310 நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ. 8,931கோடியை திரட்டுவதற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்திலேயே, ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா ரூ. 10 லட்சமாக எஸ்பிஐ  நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு நிதி பத்திரத்தின் … Read more

அதிகார மமதையில் மத்திய அரசு செய்த காரியம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இந்தியை திணிக்க மத்திய அரசு தமிழக மருத்துவர்களை அவமதித்த செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் “ஆயுஷ் பயிற்சி: இந்தியை திணித்து தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா?” தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய … Read more

கொரோனாவால் இந்தியாவின் பொருளாதார நிலை!!

நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. 12 மாதங்களைக் கொண்ட நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டாக,அதாவது மூன்று மாதங்களாக பிரிக்கப்பட்ட முந்தைய ஆண்டின் அதே மாதங்களில் இருந்த ஜிடிபி உடன் ஒப்பிட்டு வளர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் ஜிடிபி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முந்தைய இரண்டு கால் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது குறைவாக இருந்தால் அந்த நாடு பொருளாதார சரிவை சந்திப்பதாக புறப்படுகிறது. அந்தவகையில் … Read more

நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி நிலவரம்!!

இந்திய நறுமண பொருள்கள் என்றாலே உலகச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் அவற்றில் காணப்படும்  தரமும், அதிகமான சுவையும், நறுமணமே காரணம். கடந்த நிதியாண்டில் இந்திய நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி ரூ.21,515.4 கோடியாக அதிகரித்துள்ளது இதற்கு காரணம் சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு ஆகும். இதனை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 2019-20 ஆம் நறுமண பொருள்களின் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில்  ரூ.21,515.4 கோடியாக அதிகரித்தது. அதேபோன்று, அளவின் அடிப்படையில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 11,83,000 டன்னை … Read more

சூடுபிடிக்க தொடங்கிய பின்னலாடை உற்பத்தி!!

ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு நகரம், பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் போன்றபகுதிகளில் சிறியது முதல்  பெரியது வரை 200-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஜனவரி பிப்ரவரி மார்ச் … Read more