உங்கள் பாதத்தின் அழகை கெடுக்கும் வெடிப்புகளை மெழுகுவர்த்தி கொண்டு சரி செய்யுங்கள்!!

0
35
#image_title

உங்கள் பாதத்தின் அழகை கெடுக்கும் வெடிப்புகளை மெழுகுவர்த்தி கொண்டு சரி செய்யுங்கள்!!

பாத வெடிப்பு ஆண் பெண் என்று அனைவருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பு பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும். காரணம் பாத்திரம் சுத்தம் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதன் காரணாமாக பாத வெடிப்புகள், பாத எரிச்சல் உள்ளிட்டவை உண்டாக்குகிறது. இவை நமக்கு வலியோடு பாதத்தின் அழகையும் சேர்த்து கெடுகிறது. இந்த பாதிப்பை இயற்கை முறையில் சரி செய்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*மெழுகுவர்த்தி – 1

*வாசலின் – 1 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி

*பாதாம் எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 மெழுகுவர்த்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். பாத்திரம் சூடாக தொடங்கியதும் மெழுகுவர்த்தி உருக ஆரமிக்கும். இவை நன்கு உருகி வந்ததும் ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் 1 தேக்கரண்டி அளவு வாசலின் எடுத்து உருக்கி வைத்துள்ள மெழுகுவர்த்தியில் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து ஒரு துண்டு கற்றாழை எடுத்து அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். இதை ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கலக்கி விடவும்.

பின்னர் இதில் இருந்து 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் எடுத்து மெழுகுவர்த்தி கலவையில் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த கலவையை பாதங்களுக்கு பயன்படுத்துவதற்கு முன் வெது வெதுப்பான நீரில் பாதங்களை வைத்து சுத்தும் செய்து கொள்ளவும்.பின்னர் காட்டன் துணி கொண்டு பாதங்களை துடைத்து கொள்ளவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள மெழுகுவர்த்தி கலவையை பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடங்களில் போட்டு நன்கு அப்ளை செய்து கொள்ளவும். இதை 20 நிமிடங்கள் வரை விட்டு மீண்டும் வெது வெதுப்பான நீர் கொண்டு பாதங்களை நன்கு கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களில் பாத வெடிப்பு முழுமையாக நீங்கி விடும்.