Friday, November 15, 2024
Home Blog Page 4940

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

0

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

சீன மக்களிடையே பீதியைக் கிளப்பி இருக்கும் கொரோனா வைரஸ்  பெயரை சொல்லி ஒரு பெண் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 10000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து மக்களுக்கும் அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர் லீ வென்யவாங்கையே பலி கொண்டுள்ளது இந்த வைரஸ். இதனால் சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று அச்சுறுத்தும் ஒரு பெயர் உண்டு என்றால் அது கொரோனாதான். இப்படிப்பட்ட கொடூரமான ஒரு வைரஸின் பெயர் ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகருக்கு அருகில் உள்ளது ஜிங்ஷாய் எனும் நகர். இந்த நகரில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து திருட முயன்றுள்ளார் ஒரு நபர். அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த  பெண்  ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அந்த பெண்ணைப் பார்த்த திருடும் ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டு அவரை வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். அந்த இளைஞரைப் பார்த்து அந்த பெண் சத்தம் போட ஆரம்பித்துள்ளார். இதனால் அவரின் கழுத்தைப்பிடித்து நெறுத்து சத்தம் வராமல் தடுத்துள்ளார் அந்தநபர்.

இதனால் அந்த பெண்ணுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. அந்த இருமலை வைத்துத் தப்பிக்க நினைத்த அப்பெண் தொடர்ந்து இரும ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் இருமிய அவர் திருடனிடம் தான் வூஹான் மாகாணத்தில் இருந்து வந்துள்ளதாகவும் தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த நபர் தப்பித்தால் போதுமென்று அந்த இடத்தை விட்டு அலறியடித்து ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் போலீஸில் புகாரளிக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்பார் தோல்வியால் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்?

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் நல்ல வசூலை பெற்ற போதிலும் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்ற காரணத்தால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது

தர்பார் படத்தின் பட்ஜெட் 250 கோடி என்பதால் தான் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும் இந்த படத்தினால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து வரும் தலைவர் 168 என்ற படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக ரஜினியின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் இந்த படத்தை நிறுத்த போவதாக கூறியதாகவும் செய்திகள் வெளியானது

தலைவர் 168’ படத்தை நிறுத்துவதற்கு பதிலாக சம்பளத்தை குறைத்து நடிக்கலாம் என்று முடிவு செய்த ரஜினிகாந்த், தனக்கு ரூபாய் 118 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ள நிலையில் பாதியாக அதாவது ரூ.58 கோடி சம்பளம் பெற ரஜினி ஒப்புக்கொண்டதாகவும், இதனை அடுத்தே இந்த படம் தற்போது தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது

’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

0

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக வந்து விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று என்.எல்.சி சுரங்கத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நெய்வேலியில் உள்ள பாஜகவினர் என்எல்சி சுரங்கத்தில் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரக்கூடாது என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய்யை பயமுறுத்த ஆளும் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விட்டதாக அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவினர் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருவது பெரும் பரப்பு ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

0

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதமே கண்டுபிடித்து சீன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாகப் போராடிய மருத்துவர் லி வென்லியாங்
கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 10000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் இன்று பலியான சீனர் ஒருவருக்காக அந்த நாடே அஞ்சலில் செலுத்தி வருகிறது. அவர்தான் மருத்துவர் லி வென்லியாங். ஏன் இவருக்காக மொத்த நாடும் அஞ்சலி செலுத்துகிறது என்றால் இவர்தான் முதன் முதலில் டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் தாக்குதலைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அரசுக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனால் கொரோனா வைரஸ் சாவுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இவரையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்பாக நேற்றே இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவரை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்த போது அவருக்கு லேசாக நாடித்துடிப்பு இருந்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு நான்கு மணிநேரம் உயிரோடு இருந்தார்.

தன் மூலம் யாருக்கும் கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதால் தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொண்டார். தொடுதல் மூலம் வைரஸ் பரவுகிறது என அவர் நினைத்ததே இதற்கு முக்கியக் காரணம்.

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

0

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

இந்திய அணி நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்த சாதனை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மோசமான இன்னொரு சாதனையை செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. இந்த சாதனையைப் பார்த்து இந்திய ரசிகர்கள் சந்தோஷ மிகுதியில் திளைத்தாலும் மற்றொரு புறம் ஒரு மோசமான சாதனையையும் செய்துள்ளது. இதன் மூலம் தங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை இழந்துள்ளது.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு டி 20 போட்டிகள் மற்றும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கபட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 4ஆவது டி 20 போட்டியில் ஒரு ஓவர் தாமதமாகவும், 5-ல் 2 ஓவர் தாமதமாகவும் வீசியது. இதற்காக முறையே போட்டி ஊதியத்தில் இருந்து முறையே 20 மற்றும் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஆனால் அப்பொதும் அந்த தவறை சரிசெய்து கொள்ளாத இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 4 ஓவர்கள் தாமதமாக வீசியது. அதற்காக இந்த போட்டியின் ஊதியத்தில் 80 சதவீதத்தை இழந்தனர். இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசி இருந்தால் மொத்த சம்பளத்தையும் இழந்திருக்கும். கோலி தலைமையிலான அணி வரிசையாக போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வரும் வேளையில் கட்டுக்கோப்பாக பந்து வீச முடியாமல் தடுமாறி வருகிறது. வரும் போட்டிகளிலாவது இந்த தவறை சரி செய்து கொண்டு மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆமா நான் பிஸ்கோத்துதான்:இயக்குனர் கண்ணனோடு கைகோர்த்த சந்தானம்!

0

ஆமா நான் பிஸ்கோத்துதான்:இயக்குனர் கண்ணனோடு கைகோர்த்த சந்தானம்!

சந்தானம் ஜெயம் கொண்டான், கண்டென் காதலை அகிய படங்களின் இயக்குனர் ஆர் கண்ணனுடன் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் வடிவேலுவின் திரையுலக விலகலுக்குப் பின் உச்சநட்சத்திரமாக மாறினார். அதன் பின் தொலைக்காட்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் வெற்றியைப் பார்த்து தானும் ஹீரோ அரிதாரம் பூசினார். ஆரம்பத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் ஆக்‌ஷன் ரூட்டில் அவர் இறங்கிய படங்களான வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்கள் சறுக்கின. அதனால் சந்தானம் சறுக்கி விட்டாரோ என்று நினைத்து வேளையில் தில்லுக்கு துட்டு 1,2 , ஏ 1 ஆகிய படங்களின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சந்தானம் மீண்டும் வரிசையாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த வரிசையில் ஏ1 பட இயக்குனருடன் மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமான அவர் இப்போது இயக்குனர் அர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் பிஸ்கோத் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடித்த கண்டேன் காதலை மற்றும் வந்தான் வென்றான் ஆகிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்துக்கு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார்.

தனது படங்களுக்கு வித்தியாசமாகவும் கெத்தாகவும் பெயர் வைப்பவர் சந்தானம். தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 போன்ற வித்தியாசமானப் பெயர்களை அடுத்து இப்போது இந்த படத்துக்கு பிஸ்கோத்து எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

0

அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளராக முருகுமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டனர்

இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரி, அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு எதிராக திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது

இந்த தீர்ப்பின்படி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும் திருமாவளவனின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து திருமாவளவன் தொடுத்த வழக்கு தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திருமாவளவன் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்பி ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ரோபோ சங்கர் எடுத்த அடுத்த அவதாரம்:

0

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். கன்னிமாடம் என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை கஜராஜ் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹரிசாய் ஒரு பாடலை கம்போஸ் செய்ததாகவும் இந்த பாடலை நடிகர் ரோபோ சங்கர் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரை பாட வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இது ஒரு ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் முதன் முதலாக ஒரு பாடலைத்தான் பாடி உள்ளதாகவும் அந்த பாடல் அனைவரையும் கவரும் என தான் நம்புவதாகவும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர் பாடிய பாடல் எப்படி உள்ளது என்பதை இன்று மாலை என்று பார்ப்போம்

ரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!

0

தளபதி விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

கடந்த இரண்டு நாட்களாக இரவுபகலாக நடைபெற்ற இந்த விசாரணை நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் வந்தது. இருப்பினும் அவரிடம் வாக்குமூலம் மட்டும் வாங்கிக்கொண்டு விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடித்துக் கொண்டதாக தெரிகிறது

இந்த நிலையில் வருமான வரித்துறை ரெய்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் இன்று முதல் மீண்டும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நெய்வேலி சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக விஜய் இல்லாத காட்சிகளை படமாக்கி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று விஜய் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது

ரகசிய திருமணத்திற்கு மனைவி வீட்டார் தான் காரணமா? யோகிபாபு விளக்கம்

0

நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த திருமணத்திற்கு அவருடைய நெருக்கமான 10 பேர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது

பிரபல நடிகர் ஒருவரின் திருமணம் ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த திருமணம் குறித்து யோகிபாபு விளக்கமளித்தார்

எதிர்பாராத சில சூழ்நிலை காரணமாக தன்னுடைய திருமணத்தில் யாரும் அழைக்க அழைக்க முடியவில்லை என்றும் இதற்காக தான் வருத்தம் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறும் ரிசப்ஷன் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள முறைப்படி அழைப்பு என்றும் கூறியுள்ளார் மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்