தேனியில் மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் பலி !!

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வந்ததில், மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிவுள்ளது.

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதுவரும் 20-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக்க இருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தேனி, சேலம், மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இரவு முழுவதும் பெய்து வந்துள்ளது .இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தோட்டக்கலையில் ஈடுபட்டிருந்த மூன்று நபரை மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருடைய உடல் நலமும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் ,மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.202

நாள் : 07.08.2020

தமிழ் மாதம்: ஆடி 23 வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 முதல் 04.30
குளிகன்: காலை 07.30 முதல் 09.00 வரை.

திதி:

சதுர்த்தி திதி இரவு 02.06 வரை அதன் பின் தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம் :

பூரட்டாதி பகல் 1.33 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் ஒரு சில தொந்தரவுகள் வரக்கூடும்.உறவினர்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் சுபகாரியங்களில் தடை செய்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்புத் தந்து வந்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் வரும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மிகவும் புத்துணர்வான நாளாகும்.எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.உங்களின் முயற்சிக்கு உங்களது குடும்பத்தார் பக்கபலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.தொழில் ரீதியாக பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களது உடல் நலம் மிகவும் சிறப்புடன் காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் கைகூடும். பணவரவு தட்டுப்பாடின்றி வரும். ஆரோக்கியமான நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று ஒரு புது தெம்புடன் பணியாற்றுவீர்கள்.தொழிலில் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டாலும் பெருமளவு பாதிப்புகள் வராது.குடும்பத்தில் ஒரு சில தொந்தரவுகள் வந்து மறையும். பணவரவு ஓரளவு வரும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர்களுடன் பேசும்பொழுது பார்த்துப் பேசுங்கள். வியாபாரத்தில் பெரிய தொகையை செலுத்தாதீர்கள். பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நற்செய்தி வரும்.திருமணப் பேச்சுக்கள் கைகூடி நற்பலனைத் தரும். குடும்ப பிரச்சினை மறையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அனுகூலமான நாள்.

துலாம்:

துலா ராசிகாரர்களே இன்று உங்களுக்கு மிகவும் அமோகமாக நாள் என்றே கூறலாம்.தொழில், புகழ்,செல்வாக்கு என அனைத்தும் பெருகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் பலனைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்மை தரும். அமோகமான நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு செலவு நேரிடலாம். வரவை விட செலவு அதிகமாகும்.அலுவலகத்தில் மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வாய்ப்பு வந்து நிற்கும். எதிர்பார்த்த உதவி கிட்டும். நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று செய்யும் எந்த காரியத்திலும் இன்று கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்கவும்.நண்பர்களின் பேச்சுக்களை கேளுங்கள். அது ஒரு நல்ல தீர்வாக அமையும்.வெளியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை சீக்கிரம் கை வந்து சேரும். வாய்ப்புகள் அமையும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி வீடு வந்து சேரும்.தொழிலில் வேலை பார்ப்பவர்களுக்கு அவரவர் செய்த வேலைக்கு உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார வகையில் ஒரு சில நெருக்கடிகள் வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தாமதமாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அனுகூல பலன்கள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருக்கடியான நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டால் முக்கியமான ஒரு சில பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். உறவினர்களின் மகிழ்ச்சியால் வீடு கலைகட்டும். சுபகாரியங்கள் நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உத்யோகம் ரீதியாக ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வர வாய்ப்பு வரும்.

போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!

ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட கோமதி, அத்தடையை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். ஆனால் இந்தப் போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட சோதனையில் கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2023 மே 16 வரை நடக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், பணம் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆனால் இதனை ஆரம்பத்திலிருந்தே முற்றிலுமாக மறுத்து வந்த கோமதி, தற்போது ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொள் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விளையாட்டுத்துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைனில் சூதாடிய விளம்பரங்களில்  நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 ஏனென்றால் தற்பொழுது ஊரடங்கு காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமான நேரத்தை நேரத்தை இணையதளத்தில்  செலவிடுகின்றனர்.இந்த விளம்பரங்களை  பார்த்து, சிறியவர்கள் கூட சூதாட கற்றுக்கொள்ள வழிவகுக்கும். 

ஆகையால் இந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.

 

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கட்டண சலுகை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னணியில் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் 25 சதவீத கட்டணச் சலுகையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி புரிவதற்கான அடையாளங்களை வழங்க வேண்டும் என்று இண்டிகோ நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இண்டிகோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யும்போது இந்த 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் இந்த தள்ளுபடியானது இந்த ஆண்டு ஜூலை 1 புதன் டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த திட்டத்தை இண்டிகோ நிறுவனம் “கடினமான குக்கீ பிரச்சாரம்” என்று கூறியுள்ளது. இதன் மூலம் செக்-இன் முதல் முழு விமானப் பயணத்திலும் மருத்துவர்கள் மற்றும் செவியர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.