திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…
கோவை மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் பத்திரிக்கையுடன் தக்காளி மற்றும் இன்னும் சில காய்களை வைத்து நண்பர்களை திருமணத்திற்கு அழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை புல்லட் ரயிலின் வேகம் போல அதிகரித்து வருகின்றது. ஒரு காலத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது போல தற்சமயம் தக்காளியின் விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகின்றனர். தக்காளியின் விலை அதிகரிப்பதை வைத்து பலர் சமூக வைதளங்களில் தினமும் புதிது புதிதாக சில விஷயங்களை செய்து கவனம் ஈர்த்து பிரபலம் ஆகி வருகின்றனர்.
தக்காளி திருடு போகாமல் இருக்க இன்சூரன்ஸ், தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்ஸ், சீர்த்தட்டில் தக்காளி, திருமணமானவர்களுக்கு தக்காளி பரிசு, ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதற்கு மத்தியில் மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் தக்காளியை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்து வருகின்றது.
மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் குணசுந்தரி என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்த சம்பவம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்கள் மகளின் திருமணத்திற்காக உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கச் சென்ற பொழுது தற்சமயம் விலை அதிகமாக உள்ள தக்காளியை தாம்பூலத்தட்டால் வைத்து அதனுடன் விலை சற்று அதிகமாக இருக்கும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் வைத்து திருமண பத்திரிக்கையை வைத்து மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்டுப்பாளையம் அண்ணாஜீராவ் என்ற.பகுதியில் வசிக்கும் மார்கெட் நண்பர்களை மகளின் திருமணத்திற்கு தக்காளி மற்றும் இன்னும் சில காய்கறிகளை வைத்து அழைத்த சம்பவம் தற்பொழுது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களை தாம்பூலத் தட்டில்  வைத்து திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைத்தது கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் தாம்பூலத் தட்டில் பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைத்த காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றது.

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

நூற்றில் 99 சதவீதம் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. அதாவது பல பேருக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி இல்லாமல் ஒல்லியாக இருப்பதை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் சேர்க்கையாக நம் தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு தான். எனவே தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வளர்வதற்கு ஒரு சிறந்த டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
ஷாம்பூ

பொருட்களின் பயன்கள்:
தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சல்ஃபர் இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தலை பற்றி அக்கறை எடுத்து கவனிக்க நேரமில்லை என்று கூறுபவர்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயமாக முடி உதிர்வு நின்று நல்ல தீர்வை கொடுக்கும்.

மேலும் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் தலைமுடியில் உள்ள பொடுகு தொல்லை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க கூடிய சக்தி பெற்றது. எனவே செயற்கையாக நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வு பொடுகு பிரச்சனை என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக இந்த ரெமிடி அமைகிறது.

செய்முறை:
நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இதிலிருந்து வெறும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த சாறுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை கலந்து கொள்ளவும்.

இப்போது தலையை நன்றாக கழுவி விட்டு நம் கலந்து வைத்திருக்கக்கூடிய வெங்காயச்சாறு மற்றும் ஷாம்புவை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைமுடியின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெங்காயச்சாறு செல்லும்.

இந்த ஷாம்புவில் வெங்காயச்சாறு சேர்க்கப்படுவதால் ஷாம்புவில் உள்ள ரசாயன வீரியங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு இதை தலைக்கு குளிக்கும் போதெல்லாம் செய்து வர தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி மெலிதாக காணப்படுவது மறைந்து புதிய முடி அடர்த்தியாக பளபளப்பாக கருமையாக காணப்படும். மேலும் முடி வளராமல் சொட்டையாக இருக்கும் இடங்களில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெங்காய சாரானது பொடுகு தொல்லை வராமல் தலைமுடியை பாதுகாக்கிறது.

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

நாம் எண்ணெயில் பொரித்த உணவுகளை சற்று அதிகமாக சாப்பிடும் பொழுது சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டிருக்கும் இது நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வழக்கமாக நாம்  உண்ணும் போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்றினை விழுங்குவது அதிகமாக இருக்கும்.

வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிட்ட பிறகு செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது.  அதில் உள்ள மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகின்றன. 

இதோ அதற்கான எளிய வைத்திய முறைகள்,

1. மோருடன் பெருங்காயம், சீரகம் கலந்து குடிக்கலாம்.

2. இரவு சீரகத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலை மற்றும் மாலை ஒரு டம்ளர் குடித்து வரலாம்.

3. சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம்  இருக்கிறத. இதனை ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும். 

4. மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை  நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

5. வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அனைத்து வயிற்று பிரச்சனைகளுக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்தது.

காலை, மதியம், மற்றும் இரவு, வேலைகளில் உணவு உண்டவுடன்  சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டவுடன் உடனே அமரக்கூடாது.  ஒரு குறுநடை நடந்து விட்டு பின் அமர வேண்டும்.

நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வைத்தியம்!

நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வீட்டு வைத்தியம்!

நரம்புத் தளர்ச்சியை குறைக்கக்கூடிய உணவுகள்

1. மாம்பழம்:.     மாம்பழம் நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு அற்புதமான வைத்தியம். மாம்பழத்தை தொடர்ந்து எடுத்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.

2. அத்திப்பழம்:   அடிக்கடி சேர்த்து வர நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

3. முருங்கைக்கீரை சூப்: இதை தினமும் இரண்டு முறை எடுத்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.

4. சாமை அரிசி :. சிறுதானியங்களில் முக்கியமான ஒன்றான சாமை அரிசியை இரவு ஒரு கப் அளவு சமைத்து சாப்பிட்டு வர நரம்புகளுக்கு நல்ல வலுவூட்டம் கிடைத்து பிரச்சினைகளை தீர்க்கும்.

5. மாப்பிள்ளை சம்பா அரிசி: பாரம்பரிய அரிசி ரகங்களில் ஒன்றான இதனை சாதமாக சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நரம்பு வலிகள் குணமாகும்.

6. அஸ்வகந்தா சூரணம்: இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவில் பாலில் கலந்து குடித்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது.

7. விதையுள்ள திராட்சை: விதை உள்ள  திராட்சை பழங்களை ஜூஸ் செய்து காலை மாலை குடித்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

8. பழைய சோறு, சின்ன வெங்காயம்:. இது மிகவும் சிறந்த உணவு தமிழர்களுக்கான பிரத்யேக உணவு. இதை சாப்பிட்டு வரை நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

9. ஜாதிக்காய்: ஜாதிக்காய் பொடியை அளவுக்கு அதிகமாக எடுத்தால் தூக்கம் வந்துவிடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுவாகும். நரம்பு பிரச்சனைகள் வராது.

இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை அண்டவே அண்டாது. மேலும் எண்ணெய் தேய்த்து குளித்தல் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. மாதத்திற்கு இரண்டு தடவையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்ல பலன் தரும்.

 

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

Sixteen-year-old girl stabbed in the neck by a disabled person? What is the reason?..

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு வயதேயான  சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.ஒருவருக்கொருவர் தட்டு தடுமாறி இடம் கிடைக்கும் இடத்தில் புகுந்து சென்றனர்.

செய்வதென்று தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.சிறுமியோ இருசக்கர வாகனங்களின் பின்னல் சென்று கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் முன்னாள் சென்ற  நபர்  அந்த சிறுமிக்கு வழிவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த  சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.கோபத்தின் உச்சத்தை அடைந்தார் அந்த சிறுமி.மேலும் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொலை செய்த நபர் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.இச்செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மீண்டும் இணைந்த அட்டகத்தி கூட்டணி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

பா ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடந்த மாதம் ஜூலை 22 ஆம் தேதி சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகர்கள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் அசோக் செல்வன் மற்றும் மற்றொருவர் காளிதாஸ் ஜெயராமும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

ஆனால் தற்போது அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதில் மற்றொரு நடிகரை தேடி வந்த நிலையில். இப்போது அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் தினேஷை வைத்து இயக்கிய முதல் படம் அட்டகத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்து பாருங்கள்!!

10 Fantastic Cooking Tips !! Try this !!

ஆருமையான 10 சமையல் டிப்ஸ்!! இனி இப்படி செய்துப்பாருங்கள்!!

சாம்பார்:

சாம்பாருக்கு காய்க்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் விரைவில் வெந்துவிடும் குலையாது.

வத்தால் குழம்பு:

சாம்பார் அல்லது வத்தால் குழம்பு வைக்கும் போது காரம் அதிகமாக இருந்தால். அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைத்தால் காரம் சரியாகி விடும்

அரிசி:

இரண்டாவது முறை அரிசி சுத்தம் செய்யும் நீரில் சாம்பார் வைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.

மிளகாய்:

மிளகாய் வத்தல் வறுக்கும் பொழுது மிளகாய்யுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வருதால் தும்பல் வராது.

அருகம்புல்:

அருகம்புல் சாறு எடுத்து கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உளுந்து வடை:

உளுந்து வடை செய்யும் பொழுது ஒரு வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து  மாவுடன் கலந்து வடை சுட்டால் அதிகம் எண்ணெய் குடிக்காது.

இனிப்பு வகைகள்:

இனிப்பு வகைகளை செய்யும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால்  அடிப்பிடிக்காமல் இருக்கும். கிளறவும் சுலபமாக இருக்கும்.

சீரகம்:

வெண்பொங்கல் செய்யும் பொழுது சீரகத்தை கைகளினால் நசுக்கி போட்டால் சீரகத்தின் மனம் வெண் பொங்கலின் சுவையை அதிகரிக்கும்.

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

பட்டியல் இன மக்களுக்கு எதிரான கட்சி பாமக என்று பொதுவாக பேசிவரும் நிலையில் ,அகில இந்திய பட்டியல் இன பேரவை சார்பாக பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக முதல்வருக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரங்களில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை 5 கட்டங்களாக பாமகவும் மற்றும் வன்னியர் அமைப்புகளும் சேர்ந்து போராடிக்கொண்டு வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே நாடார் சங்கங்கள் அருந்ததியர் அமைப்புகள் ஆதரவு அளித்து வந்தன. அதேபோல் புதிய தமிழகம் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது பாமகவின் ஆறாவது கட்டம் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உள் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினார்கள் .இந்த போராட்டத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் .மேலும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி திமுக அதிமுக தேமுதிக கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் வியப்படையச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய பட்டியல் இன எழுச்சி பேரவையின் மாநில துணைத் தலைவர் வீ. மாரியப்பன் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

 

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவர் ராமதாசின் அழுத்தத்தின் பேரில் தான் கிடைத்தது, இப்போது வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரி அறவழியில் டாக்டர் . இராமதாஸ் அவர்கள் போராடி வருவது நியமாகவும் , நேர்மையாகவும் தெரியவருகிறது . வன்னியர்களின் அதிகம்பேர் வருமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் இது மறுக்கமுடியாத உண்மை . வன்னியர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உதவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை தங்களின் மேலான பார்வைக்கு பணிவுடன் சமர்பிக்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வன்னியர்களின் கோரிக்கையை கண்டுக்காமல் நிராகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு 20% சதவீதத்தில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5% மட்டும் தான்,
எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8 %
இது எவ்வளவு பெரிய அநியாயம்.அதனால் தான் வன்னியர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு தருமாறு கேட்டு போராடி வருகிறோம் என்கிறார்கள் பாமகவினர்.

பாமகவிற்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்!

கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் ஆரோக்கியம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. மற்றொன்று ரசாய கற்பூரம் வேதிப்பொருள் கலந்து ஆலய வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

இதில் இயற்கை கற்பூரத்தின் பயன்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு.

1. இந்த பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சொல்லும். நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.

2. பாக்டீரியாக்களை அழிக்க செய்யும் ப்ளீச்சிங் பவுடரின் இது பயன்படுத்தப்படுகிறது.

3. இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.

4. அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்கள் குணமாக மேல் பூச்சாக பச்சை கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும்.

5. சேற்றுப் புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர சேற்றுப்புண் குணமடையும்.

6. வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதை தடுக்க சந்தனத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதை தடுக்கலாம்.

7. பாடாய்படுத்தும் கால் வெடிப்பு சரியாக ஒரு பாத்திரத்தில் சுடு நீரை வைத்து அதில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த சூடு பொறுக்க வெடிப்பு உள்ள காலில் ஒத்தடம் இட குதிங்கால் வெடிப்பு சரியாகும்.

8. சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் பற்றிட தலைவலி நீங்கும்.

9. ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

10. தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர எண்ணெயை தடவி வர குணமாகும்.

11. தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும்.

12. பேன் பொடுகு நீங்க துளசி சாற்றுடன் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்துவர பிரச்சனை தீரும்.

13. பல் வலி உள்ளவர்கள் கிராமுடன் கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.

14. கொசு கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். கொசு கடிக்காது.

15. காயம் ஏற்பட்ட இடத்தில் கற்பூரத்தை தடவிவந்தால் விரைவில் குணமடையும்.

16. சிறிது கற்பூர எண்ணெயை தலையணையில் இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த 6 மாவட்டங்கள்  மற்றும் வட மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருவண்ணாமலை ,வேலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகயும் , வெற்பசலனம்  பொருத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸாக  பதிவாக கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை திருப்பத்தூர் (வடபுதுப்பட்டு) , கடலூர்(வேப்பூர்),ஆகிய பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும்,கடலூர் (சிதம்பரம்), திருவண்ணாமலை (கலசபாக்கம்) பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழையும் ,ராணிப்பேட்டை (காவேரிப்பாக்கம்),ஈரோடு (கோபிசெட்டிபாளையம்) கரூர் (மைலம்பட்டி),திருப்பத்தூர் (வாணியம்பாடி) ஆகிய பகுதிகளில் ஏழு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் மத்திய வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால், தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.