ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

0
44

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

நாம் அனைவரும் வாரிசு சான்றிதழ் என்பதை கேள்விப்பட்டிருப்போம். வாரிசு சான்றிதழ் என்றால் என்ன அதனை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் யார் உண்மையான வாரிசு என்கின்ற பல தகவலை இதன் மூலம் தெரிந்து கொள்வோம்.

வாரிசு சான்றிதழ் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகவும் முக்கியமான ஒரு சான்றிதழாகும். அதாவது இறந்தவரின் வங்கி அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதற்கு, வேலை கிடைப்பதற்கு, இறந்தவரின் பென்ஷன் பணத்தை எடுப்பதற்கு, பட்டாவில் பெயரை மாற்றுவதற்கு மற்றும் இறந்தவரின் சொத்துக்களை அடமானம் வைப்பதற்கு விற்பதற்கு என ஏராளமான விஷயங்களுக்கு இந்த வாரிசு சான்றிதழ் மிக முக்கியமான ஒன்றாகும்.

திருமணம் ஆன ஒரு நபருக்கு அவரின் அப்பா அம்மா மனைவி குழந்தைகள் என அனைவரும் வாரிசாகும். அதேபோல் திருமணம் ஆகாதவருக்கு அப்பா அம்மா வாரிசாகும். எனவே ஒரு நபருக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் குறிப்பாக எத்தனை பெண்கள் இருந்தாலும் அவர்களும் வாரிசாகவே கருதப்படுவார்.

இந்த வாரிசு சான்றிதழை எவ்வாறு வாங்க வேண்டும் என்பதை பார்ப்போம். தாசில்தார் அலுவலகத்தில் அல்லது ஏதேனும் ஒரு ஜெராக்ஸ் கடையில் இதற்கான அப்ளிகேஷன் விற்கப்படும். அந்த அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அதனுடன் இறந்தவரின் சான்றிதழை சேர்க்க வேண்டும்.

மேலும் அதனுடன் யார் யாரெல்லாம் வாரிசாக இருக்கிறார்களோ அவர்களது முகவரி அனைத்தையும் சேர்த்து தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் தாசில்தார் சரி பார்த்துவிட்டு 30 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழை வழங்கி விடுவார்.

வாரிசு சான்றிதழ் என்பது ஒருவர் இறந்த பிறகே அவர்களது பிள்ளைகளுக்கு வழங்கப்படும். அவர் உயிரோடு இருக்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட முடியாது.

ஒருவேளை வாரிசுகளின் அப்பா காணாமல் போகி அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று தெரியாமல் இருந்தால் இதை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்கள் அப்பா இறந்து விட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்த பிறகு அவர்களது பிள்ளைகளுக்கு வாரிசு சான்றிதழை வழங்கப்படும்.

இறந்தவருக்கு ஒரு மனைவிக்கு மேல் இருந்து அவர்களது குடும்பங்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் அல்லது இறந்தவர் வேறு யாரையாவது தத்தெடுத்து வளர்த்து அவர்கள் வந்து நான்தான் வாரிசு என்று கூறினாலும் வாரிசு சான்றிதழ் வாங்க முடியாது பிறகு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு நடத்தி தான் பெற முடியும்.இவ்வாறு வாரிசு சான்றிதழில் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

author avatar
CineDesk