டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்! குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் … Read more

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரஜினிக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே இந்த சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் தனக்கு விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் விசாரணையின் முடிவில் ரஜினியின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்துமூலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அவருடைய வழக்கறிஞர் … Read more

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!! நெல்லை மாவட்டம் பனகுடி ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பணத்தை அபகரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் இணையத்தில் லொகாண்டோ என்ற வேலைவாய்ப்பு அப்ளிகேஷன் மூலம் தனது ராஜதந்திர ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார் ரீகன். இவரது முழுப்பெயர் வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்று கூறப்படுகிறது. லொகாண்டோ ஆப் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் … Read more

யூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி!

எருமசாணி என்ற யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களிடையே இந்த சேனல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. எருமசாணி விஜய் மற்றும் ஹரிதா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் எருமசாணி விஜய் ஒருசில படங்களில் சமீப காலமாக நடித்து வந்த நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். முதல் முறையாக எருமசாணி விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நாயகனாக … Read more

கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்து பணம் தராததால் வாழைத்தாரை தூக்கிச் சென்ற திமுகவினர்! மதுரையில் ருசிகரம்!!

கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்து பணம் தராததால் வாழைத்தாரை தூக்கிச் சென்ற திமுகவினர்! மதுரையில் ருசிகரம்!! திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜ கண்ணப்பன் மீண்டும் திமுக கட்சியில் இணையும் விழா மதுரையில் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு ருசிகரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. மதுரையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பேசுகையில் கூட்டம் கலந்த வெறிச்சோடி காணப்பட்டது. வெறும் சேர்களின் மத்தியில் பேசிய வீடியோ இணையத்திலும் பரவியது. மதுரை பகுதியில் திமுக … Read more

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து! இரண்டு நாள் அரசு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நேற்று சிறப்பான வரவேற்பும், மிகப்பெரிய அளவில் சிறப்பான மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், மோடி மற்றும் டிரம்ப் அறிமுகத்திற்கு பிறகு குஜராத் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். இதனையடுத்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பல லட்சம் மக்களிடையே டிரம்ப் சிறப்புரையாற்றினார். அங்கு அவருக்கு “நமஸ்தே டிரம்ப்” என்று இந்தியாவின் சார்பாக வரவேற்று புகழ்பெயர் … Read more

ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார் சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் … Read more

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்? டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் … Read more

எதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இதன்படி இந்த படத்திற்கு ’அண்ணாத்த’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் டைட்டில் குறித்த ஒரு வீடியோவையும் சன் … Read more

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி!

கேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது! சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி! சீமான் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த … Read more