பயிற்சியாளர் முன் சட்டையைக் கழட்டிவிட்டு நின்ற வீரர்: விதிக்கப்படுமா தடை?

பயிற்சியாளர் முன் சட்டையைக் கழட்டிவிட்டு நின்ற வீரர்: விதிக்கப்படுமா தடை? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் பயிற்சியாளர் தன்னை நீக்கியதை அடுத்து அவரிடம் தகராறு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கும் உமர் அக்மல் எப்போதும் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது தனது உடற்பயிற்சி வல்லுனர் ஒருவருடன் தகராறு செய்து … Read more

கொரோனா பீதி முடியும் முன்னே இன்னொரு அச்சுறுத்தலா?சீனாவில் பரவும் மற்றொரு நோய்!

கொரோனா பீதி முடியும் முன்னே இன்னொரு அச்சுறுத்தலா?சீனாவில் பரவும் மற்றொரு நோய்! சீனாவில் H5N1 எனும் வைரஸ் மூலம் பரவும் பறவைக்காய்ச்சல் நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 300 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் … Read more

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!!

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சிறிய குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதைப்பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வீணாகும் குடிநீரில் இறங்கி வித்தியாசமான குளியல் போராட்டத்தை செய்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த … Read more

ஹாங்காங்கில் மருத்துவர்கள் திடீர் ஸ்டிரைக்: கொரோனா வைரஸ் காரணமா?

ஏற்கனவே சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருவதால் உடனடியாக சீனா எல்லையை மூட வேண்டும் என ஹாங்காங் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகி உள்ள நிலையில் சீனாவுக்கு வெளியேயும் ஒரு சில உயிர் பலியாகியுள்ளது … Read more

தர்பார் போராட்டம், பாரதிராஜா குரல், விநியோகிஸ்தர்களுடன் சந்திப்பு: என்ன ஒரு ஒற்றுமை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் என ஒரு சில விநியோகஸ்தர்கள் நடத்திய போராட்டம், போராட்டம் நடத்தப்பட்ட அடுத்த நாளே பாரதிராஜா ரஜினி மீது விமர்சனம் செய்து எழுப்பிய குரல், அதன்பின் தர்பார் விநியோகஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு என இந்த மூன்றையும் இணைத்து ரஜினி ரசிகர்கள் ஒரு சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர் தர்பார் திரைப்படம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல லாபத்தைக் கொடுத்த நிலையில் வேண்டுமென்றே ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படம் … Read more

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த உடன்பிறப்பால் மக்கள் நெகிழ்ச்சி..!!!

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த உடன்பிறப்பால் மக்கள் நெகிழ்ச்சி..!!! கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஒருவர், தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்திற்காக ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த பரங்கிப்பேட்டை முத்து பெருமாள் போட்டியிட்டார். தேர்தலுக்காக மக்களிடத்தில் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை செய்து, தேர்தலின் முடிவில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். … Read more

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!!

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!! பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குனர் பேரரசு. அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பாராட்டும் விதமாக தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு மிகவும் துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று புகழ்ந்து பேசியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை செய்தியில் வெளிப்படையாக கூறுபவர். தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமைச்சரின் பேட்டியை சுட்டிக்காட்டி … Read more

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை ஆணையத்தில் … Read more

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..? ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கடந்த காலத்தில் எழுதிய பழைய தேர்வுகளின் முறையில் இறுதி ஆண்டுத்தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் … Read more

அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் நாம்தமிழர் கட்சி போராட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்து மாணவர்களை தேடி பள்ளிக்கு சென்றனர். எங்கே யாருடன் சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியாமல் மாணவர்களின் பெற்றோர் பயந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக … Read more