நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!!

0
17
#image_title

நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!!

நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம்.தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை,மதியம்,இரவு என 3 வேளை உணவு.இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் பல்வேறு பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு நாம் தவிர்ப்பதன் மூலம் அல்சர்,நெஞ்செரிச்சல்,வாய்ப்புண்,வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.வெகுநேரம் உணவு உட்கொள்ள வில்லை என்றால் குடற்புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது.இதனை சரி செய்ய இயற்கை வழி முறைகளை கடைபிடிப்பது சிறந்தது.

தேவையான பொருட்கள்:-

*மோர் – 1 கிளாஸ்

*ஓமப்பொடி -1/4 தேக்கரண்டி

* சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி

*பெருங்காயம் – 1 சிட்டிகை அளவு

*இந்துப்பு – தேவையான அளவு

செய்முறை :-

ஒரு பவுலில் 1 கிளாஸ் மோர் ஊற்றிக் கொள்ளவும்.வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட மோராக இருந்தால் நல்லது.

பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சீரகத் தூள்,1/4 தேக்கரண்டி ஓமப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் 1 சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.பிறகு சிறிதளவு இந்துப்பு சேர்த்து கலந்து பருகவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மிகவும் சிறப்பு. இவ்வாறு தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அல்சர்,மலசிக்கல்,நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

மோரில் ப்ரோபையோட்டிக் பாக்டீரியா இருக்கின்றது.இது நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிக்க செய்ய உதவுகின்றது.

ஓமத்தில் தைமூல் இருக்கின்றது.இது நாம் சாப்பிட கூடிய உணவை சீக்கிரம் செரித்து விடுகின்றது.இந்த ஓமம் வயிற்றில் ஏற்படும் வலியை தடுக்கும் மற்றும் வயிற்றில் உப்பசம் ஏற்படுவதை குறைக்கும்.

சீரகம் நம் வயிறு மற்றும் உடலின் செரிமான அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துகின்றது. மேலும் அல்சரால் ஏற்படும் வயிற்று வலி,மலசிக்கல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை போக்கும்.

பெருங்காயத்தூள் உணவு பாதையில் இருக்கின்ற புண்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்றது.இந்து உப்பில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம், சல்பர், புளோரைட்,அயோடின் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் உள்ளது.சிவப்பு நிறத்தில் உள்ள இந்துப்பில் அயன் சத்து அதிகம் உள்ளது.