இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!! சென்னை அண்ணா அறிவாளயத்தில திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் ஆர்.பாலு,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சம்பத்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அதில் ஏற்கனவே போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று … Read more

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, … Read more

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!!

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சர்க்குலர் வந்தாச்சு!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் கேரள கடலோர பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே சென்னை, … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா?

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா? தமிழகம் மற்றும் புதுவையை கடந்த சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அதன் பின் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் … Read more

உருவாகிறது “மிதிலி” புயல்!! தமிழகத்தில் தொடர்ந்து 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

உருவாகிறது “மிதிலி” புயல்!! தமிழகத்தில் தொடர்ந்து 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!! தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நேற்று முன்தின மாலை நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டிருப்பதாக … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை!!  நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 5) நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கலில் உள்ள புகழ்பெற்ற கோவில் சிங்காரவேலர். தமிழ் கடவுள் முருகனின் … Read more

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்!

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: கடந்த 30 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் சுஷ்மிதா என்பது விசாரணையில் உறுதி: பாலியல் பலாத்காரமா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. நாகை மாவட்டம் சிக்கல் கீழவெளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர். அப்போது அங்கு … Read more

அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!! நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு. தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? என மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு … Read more

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்! திருநங்கைகளின் வாழ்வு மேம்பட, தமிழக அரசின் “அவனுள் அவள்” திட்டத்தின் கீழ் உடலுக்கு பயன் தரும் பனைப்பொருள் விற்பனை நிலையம் முதன்முதலாக நாகையில் துவக்கம். தகாத செயலில் ஈடுபடாமல், கௌரவமாக வாழ்வோம் திருநங்கைகள் உறுதி. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு … Read more