மீண்டும் உயருமா மின் கட்டணம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

0
369
Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!
Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

அடுத்த மாதம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின் வாரியத்தில் ஏற்பட்ட நெறுக்கடியை சாமாளிக்க வேண்டி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்த தமிழக மின் வாரியம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஒழுங்குமுறை ஆணையம் மின்சார  கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி அளித்தது.

அதனடிப்படையில்,வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  கடந்த செப்டம்ர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தின் படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 முதல் 52 சதவீதம் வரை அதிகரித்தது.  இந்நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் 2026-27ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் கொள்ள அனுமதிகளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் 4.7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleசெந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! 
Next articleமாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு!