Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!!
ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
போலி ஓட்டுநர் உரிமத்தால் நடைபெறும் மோசடிகளை தடுக்கவே மீண்டும் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.இந்நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டு, ஓட்டர் ஐடி,வங்கி கணக்கு, போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்திய குடியிருப்பாளர்களின் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் போலி ஓட்டுநர் உரிமத்தால் நடக்கப்படும் மோசடியை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது எவ்வாறு:?
மக்கள் மாநில போக்குவரத்து துறையின் இணையத்திற்கு சென்று லிங்க் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைத்துக் கொள்ளலாம்.
உங்கள் மாநில/UT சாலைப் போக்குவரத்துத் துறையின் இணையதள முகவரியை பார்வையிடவும் (tnsta.gov.in – Tamil Nadu)
“லிங்க் ஆதார்” என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள
கமெனுவிலிருந்து “டிரைவிங் லைசென்ஸ்” என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணை பதிவிட்ட பிறகு“Get Details” என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை கொடுக்கவும்.நீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஓடிப்பிணை பெற முடியும்.
ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவிட்டவுடன்“Submit” பட்டனைக் கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, நீங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTPயைப் பெறுவீர்கள்
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைப்பதற்கான செயல்முறையை முடிக்க OTP ஐ பதிவிடவும்.
பிறகு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு உங்கள் ஓட்டுனர் உரிமம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தினை நீங்கள் பெறப்படுவீர்.